Published:Updated:

மனிதர்களின் மனதிலுள்ள குப்பைகளை தூய்மை செய்யவேண்டும்..!

மனிதர்களின் மனதிலுள்ள குப்பைகளை தூய்மை செய்யவேண்டும்..!
மனிதர்களின் மனதிலுள்ள குப்பைகளை தூய்மை செய்யவேண்டும்..!

மனிதர்களின் மனதிலுள்ள குப்பைகளை தூய்மை செய்யவேண்டும்..!

மனிதர்களின் மனதிலுள்ள குப்பைகளை தூய்மை செய்யவேண்டும்..!

மனிதக் கழிவுகற்றுவோர் வாழ்வும் - மறுவாழ்வும் என்ற தலைப்பில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ராமசுப்பு நினைவு அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் ஜக்கையன், நடுகல் மாத இதழ் பொறுப்பாசிரியர் விடுதலை வீரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாட்டு இறைச்சித் தடைக்கு எதிராக முதல்முறையாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி பேசுகையில், "கோவை ஆர்.எஸ்.புரத்தில் மலம் அள்ளும் அவலத்தால் பல உயிர்கள் பிரிந்தது. குறிப்பாக 19, 21 வயதுடைய இளைஞர்களும் துடி துடித்து இறந்தனர். இந்தச் சம்பவம் அரசின் கையாலாகாதத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த 46 ஆண்டுகளுக்கு பின் தான், 1993-ம் ஆண்டு கையால் மலம் அள்ளும் நபர்களுக்காக ஆதரவானச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

அதை புரிந்துகொள்ளவே அவ்வளவு ஆண்டுகாலம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு பின் 2013-ம் ஆண்டு மலம் அள்ளும் நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவேண்டும் என சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதை நடைமுறைபடுத்த நிதிப்பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. மலம் அள்ளும் நபர்களின் மறுவாழ்வுக்கு 2017 - 18 க்கான நிதி ஒதுக்கீடு 5 கோடி மட்டுமே. ஆனால் மத்திய அரசு தற்போது விளம்பரத்திற்காக மட்டும் 3,700 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. ஏன் இந்தப் பாகுபாடு முதலில் மனிதர்களின் மனதில் உள்ள குப்பைகளை தூய்மை செய்ய வேண்டும். பிறகு நாட்டை தூய்மை செய்ய வேண்டும்' என தெரிவித்தார்  .

அடுத்த கட்டுரைக்கு