அமெரிக்கா, உள்நாட்டுக் கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அதில் 'பனெம்’ நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 'டிஸ்ட்ரிக்ட் 1 முதல் 12’ வரை பெயரிடுகின்றனர். இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளில் இருந்தும் தலா இருவர் (ஓர் ஆண், ஒரு பெண்) என 24 பேரைத் தேர்வுசெய்து, ஒரு காட்டுக்குள் இறக்கிவிடுவார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு அடுத்தவரைக் கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர், வெற்றியாளர். இந்த ஆபத்து விளையாட்டைப் பற்றிய திரைப்படம்தான் 'தி ஹங்கர் கேம்ஸ்’. இதன் முதல் மூன்று பாகங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த லைக்ஸ் குவித்தன. இப்போது நான்காம் பாகம் வெளியாக இருக்கிறது. சூசன்னா காலின்ஸ் எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படங்களின் நாயகி ஜெனிஃபர் லாரன்ஸ். 'இதுதான் கடைசி பாகம்’ என அறிவிக்கப்பட, சோகத்தில் இருக்கிறார்கள் ஜெனிஃபர் ரசிகர்கள். இதெல்லாம் ஒரு விளையாட்டாம்மா?

'எதிர்நீச்சல்’, 'காக்கிசட்டை’ படங்களில் தெறிக்கவிட்ட இயக்குநர் துரை செந்தில்குமாரின் அடுத்த புராஜெக்ட், அரசியல் த்ரில்லர். இவரின் முதல் இரண்டு படங்களைத் தயாரித்த தனுஷ், இந்தப் படத்தில் ஹீரோ... அதுவும் இரட்டை வேடங்கள். த்ரிஷா, இதில் தனுஷுக்கு ஜோடி. ''படையப்பா’ நீலாம்பரி போல பவர்ஃபுல் கேரக்டர்’ என இப்போதே பெப் ஏற்றுகிறார்கள். அசத்து!

தமன்னா முதன்முதலில் அறிமுகமானது 'சாந்த் ச ரோஷன் சேஹ்ரா’ என்கிற இந்திப் படத்தில்தான். அதன் பிறகு தமிழ் தெலுங்கில் சில ஹிட்கள் கொடுத்து மீண்டும் பாலிவுட் பறந்தார். 'ஹிம்மத்வாலா’, 'ஹம்ஷக்லஷ்’, 'என்டர்டெயின்மென்ட்’ என நடித்த மூன்று படங்களும் ஹாட்ரிக் ஃப்ளாப் ஆக, ஷாரூக்கான் ஜோடியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை இழந்தார். ஆனால் அதிர்ஷ்டம் ஜன்னலைத் தட்ட, இப்போது ஷாரூக்குடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இது ஒரு விளம்பரப் படம். 'என் ஃபேவரிட் ஷாரூக்குடன் நடிச்சதே சந்தோஷம்’ எனக் குஷியில் இருக்கிறார் பியூட்டி. நீ நம்ம ஊருக்கே வந்துடு செல்லம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம், இப்போதுதான் சூடு தணிந்திருக்கிறது. அதற்குள் எதிரெதிர் முகாம்களில் இருந்த விஷாலும் ராதாரவியும் இயக்குநர் முத்தையா இயக்கும் 'மருது’ படத்துக்காக புதுக் கூட்டணி போட்டு நடிக்கிறார்கள். 'நடிகர் சங்கத் தேர்தலின்போது நடந்தவை அதோடு முடிந்துவிட்டன. இனி நாம் எல்லோரும் ஒரே குடும்பம்’ என்பதை செயலிலும் நிகழ்த்திக்காட்டியிருக்கும் இருவருக்கும் லைக்ஸ் குவிக்கிறது கோடம்பாக்கம். சூப்பர்ஜி... சூப்பர்ஜி!

'ஓ காதல் கண்மணி’ படத்துக்குப் பிறகு, சத்தம் இல்லாமல் மலையாளத்தில் 'சார்லி’ படத்தை முடித்தேவிட்டார் துல்கர் சல்மான். வழக்கமாக ட்ரிம் செய்த தாடியுடன் சாக்லேட் பாயாக இருந்த துல்கர், இந்தப் படத்துக்காகக் கரடுமுரடாக தாடி வளர்த்து கெட்டப் மாறியிருக்கிறார். இதில் துல்கருக்கு ஜோடி பார்வதி. 'சார்லி’ ரிலீஸ் ஆவதற்கு முன்னரே துல்கர் - இயக்குநர் ராஜீவ் ரவி கூட்டணி அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸி! ஜெட் ஸ்பீடு பாஸ்!

'நான் அவன் இல்லை’ எனச் சொன்னாலும் கொனார்ட் அனிருட்டை விடாமல் துரத்துகிறது லைம் லைட் வெளிச்சம். பார்ப்பதற்கு லியோனார்டோ டிகாப்ரியோவைப் போல இருப்பதுதான் இவரின் பலம் - பலவீனம் எல்லாம். 21 வயது கொனார்ட் எங்கு சென்றாலும் 'லியோ... லியோ...’ என அலறுகிறது ரசிகர் கூட்டம். 'என்னை டிகாப்ரியோனு நினைச்சு ஆட்டோகிராஃப் கேட்கிறாங்க, வளைச்சுப்பிடிச்சு போட்டோ எடுக்கிறாங்க. இதை அனுபவிக்கிறதா வேணமானு தெரியலை’ என ஸ்டேட்டஸ் தட்டுகிறார். இந்த உருவ ஒற்றுமையால் இவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது. லியோவைப் போல் ஒருவன்!

'பேசும்படம்’ திரைப்படத் துக்குப் பிறகு, 27 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகிறது கமல்ஹாசன் - அமலா ஜோடி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படத்துக்கு, இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. மலையாளத்தில் கமல் நடிப்பில் 'சாணக்யன்’ திரைப்படத்தை இயக்கியவர் ராஜீவ் குமார். கமலும் இவரும் 26 வருடத்துக்குப் பிறகு இணைகிறார்கள். அடிப்பொலி சேட்டா!

சிவகார்த்திகேயன், அனிருத், கீர்த்தி சுரேஷ் என யூத் குரூப் ஒரு பக்கம்... பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, முத்துராஜ் என சீனியர்கள் மறுபக்கம் என, முதல் படமே கலக்கல் காம்பினேஷனில் அமைந்த ஹைவோல்டேஜ் சந்தோஷத்தில் இருக்கிறார் அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். 'சினிமாவின் பெஸ்ட் ஆட்கள் எல்லோரும் என் முதல் படத்தில் இருப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார் பாக்யராஜ் கண்ணன். கலக்கல்!

'டார்லிங்’, 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என, இந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ§க்கு இரண்டு ஹிட்டுகள். விதவிதமான கலரில் நடிக்க ஆசைப்படும் ஜி.வி-யின் அடுத்த டார்கெட், காமெடி. அதற்குப் பொருத்தமான கதையைத் தேடியவரிடம் சிக்கியிருப்பவர் காமெடி பட இயக்குநர் ராஜேஷ்.எம். இனிமே எல்லாம் இப்படித்தான்!

'என் மருமகள் அருமையானவள். அவள் எங்கள் குடும்பத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்ற பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தாய் சுப்ரியா, தன் மருமகள் மிரா ராஜ்புத்தைப் பற்றிப் பாராட்டு ஹேஷ்டேக்குகளை அள்ளித் தெளிக்கிறார். 'எனக்கு இவளை மகளாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது’ எனப் பாராட்டித் தீர்க்க, ஷாஹித் செம ஹேப்பி அண்ணாச்சி. தங்க மருமகள்.