வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (04/01/2018)

கடைசி தொடர்பு:19:04 (04/01/2018)

தில்லுமுல்லு முதல் கபாலி வரை - ரஜினியின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்!

ஆன்மிக அரசியல், பாபா முத்திரைனு பரபரப்பா போய்க்கிட்டிருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பயணம். அப்பப்போ அரசியல் பத்தி பேசுன காலம் போயி, இனி எப்பவுமே அரசியல்தான்கிற காலமும் வந்துடுச்சு. அரசியல்ல அதகளப்படுத்தி அதிரிபுதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் இவர், சினிமா உலகில் பதிச்சுட்டுப்போன புதுமையான ஸ்டைல்ல முக்கியமான ஸ்டைல்ஸ் ஸ்டேட்மென்ட் இது!

ரஜினி ஸ்டைல்

`அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சந்திரன்'. இந்தப் பெயரை யாராலயும் மறக்க முடியாது. முழுநீள நகைச்சுவைப் படமான `தில்லுமுல்லு' படத்தில் `இந்திரன்', `சந்திரன்'னு டபுள் ரோல். கதர் வேட்டி, ஜிப்பா, கோட்னு பாரம்பர்ய உடையில் மீசை வைத்த சந்திரன். கலர் கலர் சில்க் சட்டை, பேன்ட், ஷூனு மீசை இல்லாத ட்ரெண்டியான இந்திரன். இந்த ரெண்டு கதாபாத்திரங்கள்லயும் நகைச்சுவை கலந்த நையாண்டித்தனத்தை அப்பவே வெளிப்படுத்தியிருப்பார் சூப்பர் ஸ்டார்.

தில்லுமுல்லு ரஜினி

அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜான்... பேரைச் சொல்லும்போதே நம்ம மூளையில் `இது மூன்று முகம்'னு நினைவு நம்மை உரசிட்டுப்போகுது. வித்தியாசமான நடை மற்றும் பாவனைகளுடன் போலீஸ் கெட்டப்பில் மிரட்டியிருப்பார் அலெக்ஸ். முற்றிலும் வேறுபட்ட ஹேர்ஸ்டைல், காவி உடையில என்ட்ரியானாலும், மாடர்ன் டிரெஸ் போட்டுக் கலக்கியிருப்பார் அருண். ஜான், லோக்கல் ரௌடியா வந்து காமெடி ஆன்ட்டி-ஹீரோவா கைதட்டல்களை அள்ளியிருப்பார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மல்டி கலர் பேன்ட்தான் ஜானோட காஸ்டியூம். எத்தனை முகம் இருந்தால் என்ன, உண்மை முகத்துக்கு இருக்கும் ஈர்ப்பே தனிதான்.

மூன்று முகம் ரஜினிகாந்த்

`உங்களத்தான் நம்புது இந்த பூமி... இனி எங்களுக்கு நல்ல வழி காமி...' பாடல் வரியே நம்மை தலைவணங்க வைக்குதே! மக்களை மனசார நேசிச்சு, நாளும் நல்லது பண்ற வானவராயன்,  இனி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் `எஜமான்'கிறதை அந்தப் படத்துல காமிச்சிருப்பார். இந்தப் படம் முழுக்க கதர் வேட்டி, கதர் சட்டை, தோளில் துண்டுனு தமிழ்நாட்டு அரசியவாதிகளின் யூனிஃபார்ம்னு சொல்றதைவிட, தமிழ்ப் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் உடைனுதான் சொல்லணும். இந்த டிரெஸ் கோட்தான், தந்தையிலிருந்து தாத்தாக்கள் வரைக்கும்  வேட்டி மீது அதீத ஆர்வத்தை ஏற்படுத்துச்சு.

எஜமான் ரஜினிகாந்த்

`கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு... காலத்தின் கையில் அது இருக்கு'னு `முத்து' திரைப்படத்துல சொல்லிருப்பார். காலம் இப்போ `ஆன்மிக அரசியல்'னு பதில் சொல்லிடுச்சோ? எதுவா இருந்தாலும், அந்தப் படத்துல துண்டைச் சுற்றிச் சுற்றிப் போட்டு சூறாவளியா சுழன்றிருப்பாரு நம்ம ஸ்டைல் மன்னன். ஜமீன் வாரிசா இருந்தாலும், கதர் ஆடையிலதான் பெரும்பாலான காட்சிகள்ல இருப்பார். ரஜினியோட ஹேர்ஸ்டைல் முதல் டவல் ஸ்டைல் வரை எல்லா இளைஞர்களுக்கும் ஃபேவரைட் ஆனார் இந்த ஸ்டைலீஷ் மேன்.

முத்து ரஜினி

`ஹே ஹே ஹே ஹே நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்; கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்' என ஆன்மிகத்தையும் நல்லொழுக்கத்தை கலந்த வசன உச்சரிப்பு `பாட்ஷா' படத்துக்கே உரிய தனிச் சிறப்பு. பிளேசர், பேன்ட், கைக்கடிகாரம், டெம்பிள் இல்லாத கூலர்ஸ்னு ஸ்டைலிஷ் ரௌடியா `பாஷா... மாணிக் பாஷா'னு மும்பையில நடக்கிற காட்சிகளில் மாஸ் லுக்ல மிரட்டியிருப்பார். பாசக்காரப் பிள்ளையாவும் அன்பு அண்ணனாவும் ஆட்டோக்காரனாவும் வந்து தமிழ் உள்ளங்களை கொத்தாக முத்தமிட்ட `மாணிக்கம்' கதாபாத்திரம், பேருக்கு ஏற்றதுபோல பக்கா. சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகத்துக்கான உதாரணமா திகழ்ந்த `பாட்ஷா', வேற லெவல் ரஜினி!

பாட்ஷா ரஜினி

`ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்'. இந்த டைலாக்கைச் சொல்றப்போ, யாராலுயுமே சும்மா சொல்லவே முடியாது. ரஜினிபோல ஸ்டைலாத்தான் சொல்வோம். அந்த அளவுக்கு அந்த வசனத்தின் ஆழம் அதிகம். சாதாரண சட்டை, கதர் வேட்டி, கழுத்தில் ருத்ராட்சை, கையில காப்பு, காதுகள்ல கடுக்கன் இப்படி ஸ்டைல் காரணிகள் எக்கச்சக்கம். `சிங்கம் ஒன்று புறப்பட்டதே...' பாட்டுல வெள்ளை ஜிப்பா க்ளாசிக் சூப்பர்ஸ்டார் லுக். அதெல்லாம் சரி, இப்போ ஆண்டவன் என்ன சொல்லியிருப்பாரோ?

அருணாச்சலம்

டீ-ஷர்ட் மேல ஷர்ட் போடுற ட்ரெண்ட் `படையப்பா' அறிமுகப்படுத்தினதுனுகூட சொல்லலாம். முதல் பாதி முழுக்க விதவிதமான கலர் ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட் காஸ்டியூம். அப்பா `படையப்பா' கதாபாத்திரத்துக்கு நீள பைஜாமா செட். எத்னிக் மாடர்ன்  ரெண்டு கேரக்டரும் ட்ரெண்ட் செட் ஸ்டைல். இந்தப் படத்துல வர்ற `என் வழி... தனி வழி'னு பன்ச் டயலாக்தான் இப்போ இவரை தனி ரூட்ல பயணிக்க வெச்சிருக்குபோல!

படையப்பா

மொட்ட பாஸ் கெட்டப்பைப் `பார்த்தாலே சும்மா அதிரும்ல'. பிளேசர் சூட், லாங் கோட், லெதர் ஷு, கூலர்ஸ்னு செம கெத்தான கெட்டப். சிவாஜி கேரக்டரும் டாப்தான். பாடல்கள்ல எல்லா காஸ்டியூமும் பர்ஃபெக்ட் மேட்ச். எளிமையான கேஷுவல் உடைகள், ரிச்சான மாடர்ன் உடைகள் எல்லாத்துலயும் சிங்கிளா வந்த ரஜினியின் ஸ்டைல், பக்கா மாஸ்.

சிவாஜி

ரொம்பவே வித்தியாசமான ரஜினியைக் காமிச்சதுதான் `எந்திரன்' திரைப்படம். `சிட்டி' பண்ண லூட்டியை யாராலும் மறக்க முடியாது. படத்தோட பின்பாதியில வர்ற வில்லன் சிட்டி, புதுமையான ரஜினி. டிரேட்மார்க் ஹேர்ஸ்டைல் இல்லாம புது ஹேர்ஸ்டைல்ல லாங் லெதர் ஜாக்கெட் டெர்ரர் லுக். குறும்பு சிட்டிக்கு எல்லா காஸ்டியூமும் ட்ரெண்டி. ரோபோட் ரஜினி நடிப்பு மே......ன்லி.

எந்திரன்

`நெருப்புடா நெருங்குடா பாப்போம்...'னு மலேசியாவுல நடக்கிற கேங்ஸ்டர் கதையில ஸ்டாரா வாழ்ந்திருப்பார் `கபாலி'. `கபாலிடா'ங்கிற சிம்பிளான கேப்ஷன் ரொம்பவே ஹிட். படம் முழுக்க வெள்ளை ஷர்ட், கிரே ஷேட் பிளேசர் செட், ஷூ, கூலர்ஸ்ல அலட்டிக்காம அசத்தியிருப்பார் இந்தக் `கபாலி'. சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், அடர்த்தியான வெண்மை தாடிக்கு ஏற்ற க்ளாசிக் காம்போவுல கலக்கியிருப்பார் மனுஷன்.

கபாலி

திரைப்படத்துல வர்ற கதாபாத்திரத்துக்கு ஏற்றது மாதிரி வெரைட்டியான உடைகள்ல ரஜினிகாந்த் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்தான். ஆன்மிக அரசியலின் காஸ்டியூம் என்னவாக இருக்கும்? ஆன்மிக அரசியல்னு புதுமையைப் புகுத்தியவர் கட்சி யூனிஃபார்மும் புதுசாத்தான் கொடுப்பாரு.

காத்திருப்போம் `காலா'வின் கட்சி யூனிஃபார்முக்கு!


டிரெண்டிங் @ விகடன்