வரிசையாக ஹிட் படங்களில் இருந்த பாலிவுட் முன்னணி நடிகை பரிணீதி சோப்ராவுக்கு இந்த ஆண்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை. இன்னொரு பக்கம் அலியா பட், ஹிட் எஸ்கலேட்டரில் கிடுகிடுவென ஏறிவிட்டார். 'இருவருக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்’ என்றுகூட செய்திகள் தந்தியடித்தன. இந்தச் சூழலில் இந்த இரு அழகிகளையும் ஒரே படத்தில் நடிக்கவைக்க இயக்குநர் ஃபராகான் முயற்சிக்கிறார். தயாரிப்பாளர் ஷாரூக் கானாம். சிரிக்கவிடலாமா!

' நான் நாள் முழுவதும் படப்பிடிப்பில் இருப்பதால், மகள் நைசாவை தாய்போல இருந்து பார்த்துக்கொள்வது அஜய் தேவ்கன்தான். திரையில் நான் அழுதாலே அவளுக்குப் பிடிக்காது. ஜாலி படங்களில் நடிக்கச் சொல்கிறாள்’ என தாய்ப்பாசத்தில் உருகுகிறார் கஜோல். இது ஒருபுறம் இருக்க... 'நானும் கஜோலும் இணைந்து திரையில் வந்தாலே என் மகன் அப்ராம் என்னை முறைக்கிறான். அவனுக்கு எங்கள் ஜோடி பிடிக்கவில்லை’ என ஷாரூக் அதிரடி ஸ்டேட்டஸ் தட்டிவிட்டிருக்கிறார். முன்பு ஷாரூக்-கஜோல் ஜோடியைவைத்து கிசுகிசு கிளப்பிய மீடியா, இப்போது அவர்களது குடும்பக் கதைகளைப் பேசுகிறது. வாழ்க்கை, ஒரு வட்டம்தான்!

'பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த புராஜெக்ட் பற்றிய டோலிவுட்டில் உலவும் காஸ்ட்லி வதந்தி இது... 'ராஜமௌலியின் அடுத்த படத்தின் பெயர் 'கருடா’. பட்ஜெட் 1,000 கோடி ரூபாயாம். மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதையாம். பட்ஜெட் தொகையைப் பார்த்து தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள். அதனால், முதலில் 25 கோடி ரூபாயில் செலவில் டீஸர் எடுத்து, அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யத் திட்டமாம். அதைப் பார்த்து உலக அளவில் தயாரிப்பாளர்கள் கமிட் ஆன பிறகே 'கருடா’ ஆரம்பிக்குமாம். ஜெய் மகிழ்மதி!

உலகிலேயே முழுக்க முழுக்க சூரிய மின் சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது கொச்சி விமான நிலையம். பெரும் செலவு வைக்கும் மின் கட்டணத்தைத் தவிர்க்க, 46,000-க்கும் அதிகமான சோலார் தகடுகள் அமைத்து, விமான நிலையத்துக்கு என மின்சாரம் தயாரிக்கும் பிரத்யேக மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியில் இருந்து உருவாகும் மின்சாரம், 24 மணி நேரத்துக்கும் போதுமானதாக இருக்கிறதாம். சோலார் சக்தி!

சமந்தாவின் நடிப்புக்கு மட்டும் அல்ல, அவரின் சமூக அக்கறைக்கும் நாங்கள் ரசிகர்கள்’ என காலரைத் தூக்கிவிடுகிறார்கள் சமந்தா ரசிகர்கள். 'பிரத்யூஷா சப்போர்ட்’ அறக்கட்டளை மூலம் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுவது போன்ற நல்ல விஷயங்களுக்கு ஆதரவு தந்து அப்ளாஸ் அள்ளியிருந்தார் சமந்தா. தற்போது, உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு, 'நீங்களும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்’ என தன் ரசிகர்களுக்கும் மெசேஜ் தட்டியிருக்கிறார் அழகி. உள்ளத்தில் நல்ல உள்ளம்!

'பெண்களைக் கொண்டாட, அவர்களின் உழைப்பை மதிக்க, அவர்களைப் பாராட்ட... மகளிர் தினத்துக்காகக் காத்திருக்காதீர்கள். எப்போதும் கொண்டாடுங்கள். பெண்களே, முதலில் நீங்கள் உங்கள் திறமையை அறிய முயலுங்கள். நம்மை நாமே தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்கக் கூடாது’ - இது தீபிகா படுகோனின் பாசிட்டிவ் ஸ்டேட்மென்ட். 'பெண்களுக்கு என ஸ்பெஷல் மெசேஜ் என்ன?’ என்ற கேள்விக்கு, 'நமக்கு நாமே’ எனச் சிரிக்கிறார் தீபிகா. பொண்ணு சொல்றது சரிதானே!

பிறருக்கு அதிக அளவில் உதவிகள் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 106-வது இடமே. 'தி சேரிட்டி எய்டு ஃபவுண்டேஷன்’ அறக்கட்டளை 'உலகில் யார் என்றே தெரியாதவர்களுக்கு அதிக உதவிகள் செய்யும் நாடுகள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடம் மியான்மருக்கு. அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த நான்கு இடங்களைப் பிடிக்க, பிரேசிலுக்கு அடுத்தபடியாகத்தான் இந்தியாவுக்கு 106-வது இடம். பட்டியலில் கடைசி வரிசையில் இருப்பது சீனா. ஹெல்ப் பண்ணுங்கப்பா!

'என் செல்ஃபி... என் உரிமை’ என நீதிமன்றத்தில் போராடுகிறது 'நருட்டோ’ எனும் குரங்கு. புகைப்படக் கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் இந்தோனேஷியா சென்றபோது, அவரது கேமராவில்

சில செல்ஃபிக்கள் எடுத்துவிட்டது குரங்கு. அதை டேவிட் தனது பத்திரிகையில் தன் பெயரில் பிரசுரிக்க, கொதித்து எழுந்த விலங்குகள் நல அமைப்பு 'பெட்டா’ (Peta), 'அந்த செல்ஃபிக்களின் காப்புரிமை, குரங்குக்குத்தான். அதற்கான ராயல்டியை டேவிட் தர வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 'கேமரா என்னுடையது. எனவே அந்த செல்ஃபிக்களின் உரிமை எனக்குத்தான். என்னிடம் இருந்து குரங்கு கேமராவைத் திருடியதற்கு, அதன் மீது நான் வழக்கு தொடரலாமா?’ என மல்லுக்கு நிற்கிறார் டேவிட். ஹே ஹே செல்ஃபி மங்க்கி!

'ஹவ் ஓல்டு ஆர் யூ?’, 'ராணி பத்மினி’ என கம்பேக் படங்கள் ஒவ்வொன்றும் ஹிட்டடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இப்போது அவர் நடிக்கும் படங்களில் 'குடும்பப் பிரச்னையைச் சமாளிக்கும் பெண்’ போன்ற எந்தப் பழைய விஷயங்களும் இல்லாமல், புதிய கதைக்களங்களில் அசத்துகிறார். 'என் வயதை வெளிப்படுத்தும் எந்தக் கதாபாத்திரங்களும் பொதுவாக வருவது இல்லை. அந்த வாய்ப்புகள்தான் என் வெற்றிகளுக்குக் காரணம்’ என்கிறார் மஞ்சு. போல்டு வாரியர்!

'இவர்தான் உங்க கேர்ள் ஃப்ரெண்டா... எப்போ கல்யாணம்?’ எனக் கேள்விகளை வீசியபோது எல்லாம், 'அப்படி ஒண்ணும் இல்லை பாஸ்’ என்ற பதிலால் டொக் வைத்த யுவராஜ் சிங், தற்போது சைலன்டாக பாலி தீவில் தன் நிச்சயதார்த்தத்தையே நடத்தி முடித்துவிட்டார். 'பில்லா’ படத்தில் நடித்த ஹஸல் கீச்தான் மணமகள். வரும் காதலர் தினத்தைக் கொண்டாடிவிட்டுத் திருமணம் என்ற முடிவில் இருக்கிறதாம் இந்த ஸ்டார் ஜோடி. கல்யாண இன்னிங்ஸ் ஆரம்பம்!

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளுக்கு மாறிய விஜேந்தர் சிங், அங்கும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். 'விஜேந்தரை நாக் அவுட் செய்வேன்’ எனச் சொன்ன இங்கிலாந்தின் சோனி ஒயிட்டிங்கை முதல் போட்டியில் அசால்ட்டாக வென்ற விஜேந்தர், இரண்டாவது போட்டியில் டீன் கிலனை இரண்டே நிமிடங்களில் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். 'நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோமோ, அந்த அளவுக்குப் பலன் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருந்தாலும் நான் இன்னும் நிறையக் கற்க வேண்டியுள்ளது’ என தன் சக்சஸ் சீக்ரெட் சொல்கிறார் விஜேந்தர் சிங். பவர்ஃபுல் பன்ச்!

நோபல் பரிசு வென்ற மலாலாவின் வாழ்வை மையமாக வைத்து, ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் டேவிஸ் கூகன்ஹெய்ம் எடுத்திருக்கும் டாக்குமென்ட்ரி படம் 'ஹி நேம்டு மீ மலாலா’. 2015-ம் ஆண்டின் 'பெஸ்ட் டாக்குமென்ட்ரி’ என இந்தப் படத்தைக் கொண்டாடுகிறது அமெரிக்க மீடியா. மலாலா சுடப்பட்டது, பெண் கல்விக்காகப் போராடியது என்பதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மலாலா உருவாகக் காரணமாக இருந்த அவரது தந்தை ஜியாவுதீன், அவர் குடும்பம்... என இயல்பான பக்கங்களைப் படமாக்கியிருக்கிறார் டேவிஸ். 'ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா... இருந்தால், உலகையே மாற்ற முடியும்’ என்பது படத்தில் மலாலா பன்ச். தௌசண்ட் லைக்ஸ்!