Published:Updated:

நாடாளுமன்றம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!

நாடாளுமன்றம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!
நாடாளுமன்றம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!
நாடாளுமன்றம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!

புதுடெல்லி:  நாடாளுமன்ற குளிர் காலக்  கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கான ஒத்துழைப்பைக் கோருவதற்காக,  புதன்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் மீரா குமார்  கூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் வருகிற இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி   டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பைக்  கோர,நாளை அவர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கூட்டத்தொடர் சுமுகமாக  நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளார்.

##~~##
கடந்த கூட்டத் தொடரில், மொத்தமுள்ள 20 நாட்களில் 13 நாட்கள், நாடாளுமன்ற  அவை நேரம் வீணடிக்கப் பட்டதையும், எந்த முடிவுகளும் எடுக்க இயலாமல்  நாடாளுமன்றம் முடக்கப்பட்டதையும் கூறி, இந்த முறை கூட்டத்தொடர் சுமுகமாக  நடைபெற ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான சுஷில் குமார்  ஷிண்டே, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத், எதிர்க்கட்சித் தலைவர்  சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்  யாதவ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனத்தெரிகிறது.