Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களாக எப்போதுமே பிரேசில் வீரர்களே தெனாவட்டாகத் திரிவார்கள். இப்போதெல்லாம் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்ட்டினாவின் லியோனல் மெஸ்ஸியுமே மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர். `இருக்கட்டுமே... ஆனால் இவர்களின் `பீக் சீஸன்' கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு நெய்மார் முதல் இடத்தைப் பிடித்துவிடுவார். அவர் தொடர்ந்து நீண்டகாலம் நம்பர் ஒன்னாக இருப்பார்' என்று ஆருடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ. அப்பிடீன்றீங்க?

இன்பாக்ஸ்

•  இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்து உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக முதல் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். 2015-ம் ஆண்டில் இதுவரை  8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஷ்வின் 55 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார். இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 15 முறை 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியிருக்கிறார். `அஷ்வின்தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அவரால்தான் எங்களால் தொடர்ந்து வெற்றிபெற முடிகிறது. அவர் எங்கள் அணியின் பொக்கிஷம்’ எனப் புகழ்கிறார் கேப்டன் விராட் கோஹ்லி. இது சுத்தி அடிக்கிற பந்து... இது சுத்த விடுற பந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  பார்க்க ஒன்றுபோலவே தெரியும் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஸ்கோர் செய்யும் ஒரே வீரர் பங்கஜ் அத்வானி. எகிப்தில் நடந்த ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சீனாவின் ஜுவா ஜிண்டாங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார் பங்கஜ். இந்த  வருடம் இவர் வெல்லும் மூன்றாவது பட்டம் இது. ‘ஒரே நேரத்தில் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் இரண்டிலும் ஜொலிப்பதில் மகிழ்ச்சி. விளையாடுவதைவிட, ஜெயிப்பதைவிட நாட்டுக்காகப் பதக்கங்கள் குவிப்பதில்தான் கூடுதல் மகிழ்ச்சி’ என்கிறார் பங்கஜ். பின்னி எடுங்க பாஸ்!

•  ட்விட்டரில் நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஷேர் செய்து, லைக்ஸ் அள்ளுவது அமிதாப் ஸ்டைல். ஆனால், இந்த முறை சொன்னது சோகம்... ‘நான் தற்போது 25 சதவிகித கல்லீரலுடன் தான் உயிர் வாழ்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘கூலி’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில், சிகிச்சைக்காக 200 கொடையாளி களிடம் இருந்து 60 பாட்டில்  ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. அப்போது யாரோ ஒருவரின் ரத்தத்தில் இருந்து பரவிய ஹெப்படைடிஸ் பி வைரஸ், என் கல்லீரலைச் சிதைத்துவிட்டது. யாருக்கும் இதுபோன்ற நிலை வரக் கூடாது. எனவே, குடிக்காதீர்கள். நோய்த்தொற்றை அலட்சியம் செய்யாதீர்கள்’ என அறிவுரை சொல்லியிருக்கிறார் அமிதாப். கெட் வெல் சூன் அமிதாப் ஜி!

• சர்ச்சைகளின் சிஷ்யப் பிள்ளை ராம் கோபால் வர்மா, தனது சுயசரிதையை எழுதி முடித்திருக்கிறார். ‘கன்ஸ் & தைஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் நிழல் உலக தாதாக்கள், அவர் வாழ்வில் வந்த முக்கியமான பெண்கள்... என பல ட்விஸ்ட்கள். ‘இந்தப் புத்தகத்தை அயன் ராண்ட், அமிதாப் பச்சன், புரூஸ் லீ, நடிகை ஊர்மிளா மற்றும் ஆபாசப்பட நடிகை டோரி பிளாக் ஆகியோருக்கும், சில கேங்ஸ்டர்களுக்கும் சமர்ப்பிக் கிறேன். அவர்கள்தான் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்’ என டீஸராக ட்விட்டியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. படமா எடுப்பீங்களாஜி?

இன்பாக்ஸ்

• `மேரி கோம்’ ஆக நடித்து லைக்ஸ் குவித்த பிரியங்கா சோப்ரா, அடுத்து `கல்பனா சாவ்லா’ அவதாரம் எடுக்க இருக்கிறார். ஹரியானாவின் சிறிய கிராமத்தில் பிறந்து,
நாசா விண்வெளி வீராங்கனையாக உயர்ந்து, விண்வெளி ஆராய்ச்சியின் போதே உயிர்விட்ட கல்பனா சாவ்லாவாக நடிக்க இப்போதே பயிற்சிக்குத் தயாராகிவிட்டார் பிரியங்கா. பின்னி எடுக்குது பொண்ணு!

• அப்பாவாகப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. முஸ்லிமாக மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா, கடந்த ஜனவரி மாதம் ஸஃப்ரன் நிஸாரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஸார் வயிற்றில் இப்போது குட்டிப் பாப்பா எட்டிப் பார்க்கிறது.`அடுத்த ஆண்டு பாப்பா வந்துவிடும். நான் இசையமைக்கும் படங்களும் அடுத்த ஆண்டுதான் அதிக அளவில் ரிலீஸாக இருக்கின்றன' மகிழ்வுடன் பேசுகிறார் யுவன். புதுப் பாப்பாவுக்கு வெல்கம்!

•  ஹாலிவுட் நடிகர்களுக்கும் அரசியல் ஆசை உண்டு என்பதை நிரூபிக்க அர்னால்டுக்கு அடுத்து வில் ஸ்மித்தும் தயார். `வெறும் நடிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. இந்தச் சமூகத்துக்குப் பயன்தரும் ஏதேனும் செய்ய வேண்டும். அமெரிக்க அரசியலில் எனக்காக ஓர் இடம் காத்திருப்பதுபோல் தோன்று கிறது. விரைவில் அரசியலில் இறங்கு வேன்’ என்று அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் வில் ஸ்மித். நடிகர்கள் நாடாள்வது குளோபல் ட்ரெண்டா?

இன்பாக்ஸ்

•  ‘ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் ஒரு பெண் சாதிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது இன்னொரு பெண்ணுக்கு மட்டுமே தெரியும். இந்த டிஜிட்டல் யுகத்தில்கூட அடிப்படைத் தேவைகளுக்கு பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. விளையாட்டில்கூட ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகம்; பெண்களுக்குக் குறைவு. ஒரு பெண் தனது மனதில்படும் விஷயங்களைப் பேசினால், அவளை வேறுவிதமாகச் சித்திரித்துவிடுகிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் தனது மனதில் தோன்றும் விஷயங்களைப் பேசினால், அவரைக் கொள்கைவாதியாகப் பார்க்கிறார்கள்’ என பொங்கித் தீர்க்கிறார் சானியா மிர்ஸா. அழகுப் பொண்ணைப் புலம்பவிடாதீங்க கைஸ்! 

•  ‘எனக்கு மீண்டும் இளமை எல்லாம் வேண்டவே வேண்டாம்’ என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. ‘தற்போது நான் மெனோபாஸ் நிலையில் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். இதற்காக நான் முகம் சுளிக்க மாட்டேன். நான் தினமும் பக்குவம் அடைந்துவருகிறேன் என்பது எனக்குச் சந்தோஷம்தானே. இதை அனுபவிக்க எந்தப் பயமும் தயக்கமும் இல்லை. நான் மீண்டும் இளமையாக மாற ஆசைப்படவில்லை’ என போல்டாகப் பேட்டி தட்டியிருக்கிறார் ஜோலி! # அசல் ஏஞ்சல்!

• தமிழில் க்யூட் ஹிட்டடித்த ‘ஓகே கண்மணி'யை, இந்தியில் தெறி ஹிட்டடித்த, ‘ஆஷிக்-2' படத்தின் ஆதித்யா ராய்கபூர் - ஷ்ரத்தா கபூர் ஜோடியை வைத்து ரீமேக் செய்யவிருக்கின்றனர். ‘அலைபாயுதே’ படத்தை ‘சாத்தியா’ என இந்தியில் ரீ மேக்கிய ஷாத் அலிதான்  ‘ஓகே கண்மணி'யையும் இயக்கவிருக்கிறார்.தயாரிப்பு மணிரத்னம். ஒ.கே பியாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism