Published:Updated:

லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

விகடன் விமர்சனக்குழு
 லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
 லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

புதுடெல்லி: லோக்பால் மசோதா மீதான தேர்வுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட வரம்புக்குள் பிரதமரை கொண்டுவர அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய லோக்பால் மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேறியது.ஆனால் மாநிலங்களவையில் பா.ஜனதா மட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்ததால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.இதையடுத்து லோக்பால் மசோதா, சத்யவ்ரத் சதுர்வேதி தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வுக்குழு தனது பரிசீலனையை முடித்துக்கொண்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று, அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சமாஜ்வாடி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அமளி நிலவியபோது, லோக்பால் மசோதா குறித்த தேர்வுக்குழுவின் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அதன் உறுப்பினர் சாந்தாராம் நாயக் தாக்கல் செய்தார்.

லோக்பால் அமைப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத உறுப்பினர்கள் பதவி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேர்வுக்குழு எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை.

##~~##
லோக்பால் வரம்புக்குள் பிரதமர்
லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரை கொண்டு வர தேர்வுக்குழு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் சர்வ தேச உறவுகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதி, அணுசக்தி, விண்வெளி போன்றவற்றில் குற்றச்சாட்டுக்கள் வந்தால் பிரதமர் மீது விசாரணை நடத்த முடியாது.மேலும் பிரதமர் மீது பிற துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தால், அது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்த வேண்டும்.
லோக்பாலில் மாநில அளவிலான லோக் அயுக்தாக்களை சேர்க்காமல், மாநில அரசுகளே லே£க்அயுக்தாக்களை நியமித்துக்கொள்ளலாம், லோக்பால் சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் மாநில அரசுகள் இதைச் செய்து விட வேண்டும் என தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.இந்தப் பரிந்துரை எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாது, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கும் நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. ஏனெனில் லோக் அயுக்தாக்களை மத்திய அரசு நியமித்தால் அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாக அமையும், லோக் அயுக்தாவை மாநில அரசுகளே நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்.
மேலும் சி.பி.ஐ. சார்பில் வழக்குகள் தொடர்வதற்கு தனி இயக்குனரகம் உருவாக்கவும் தேர்வுக்குழு சிபாரிசு செய்துள்ளது.