Published:Updated:

`பென்னிகுவிக் பிறந்தநாளுக்கு பொங்கல்வைத்துக் கொண்டாடிய மக்கள்!

`பென்னிகுவிக்  பிறந்தநாளுக்கு பொங்கல்வைத்துக் கொண்டாடிய மக்கள்!
`பென்னிகுவிக் பிறந்தநாளுக்கு பொங்கல்வைத்துக் கொண்டாடிய மக்கள்!

`பென்னிகுவிக் பிறந்தநாளுக்கு பொங்கல்வைத்துக் கொண்டாடிய மக்கள்!

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் முக்கிய ஆதாரமாக இருப்பது, முல்லைப்பெரியாறு அணை. அதைத் தனது சொந்தச் செலவில் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் கட்டினார், இங்கிலாந்துப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். பல முறை ஏற்பட்ட பஞ்சம், வறட்சியிலிருந்து தென் தமிழக மக்கள் தப்பிக்கக் காரணமாக அமைந்தது, முல்லைப்பெரியாறு அணை. இதனால், இன்றளவும் தென் மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி, பென்னிகுவிக் எனப் பெயரிட்டுவருகிறார்கள்.

வீட்டு விஷேசங்களுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழில், கடவுள் படங்களுக்கு அருகில் பென்னிகுவிக் படத்தைப் பொறித்து, இன்றளவும் பென்னிகுவிக்கை கடவுளாக நினைத்து வழிபட்டுவருகிறார்கள். புதிதாகத் திறக்கப்படும் கடைகள், வாங்கப்படும் வாகனங்கள் எனத் தென் மாவட்ட மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பென்னிகுவிக் இருப்பார். அவரது பிறந்தநாளான இன்றுதான் தேனி மாவட்ட மக்களுக்கு பொங்கல் திருவிழா. 15 நாள் விரதம் இருக்கும் தேவாரம், சுருளிப்பட்டி, பாலார்பட்டி மற்றும் பல கிராம மக்கள் இன்றைய தினம் ஊர் மந்தையில், கோயில்களில் பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு நன்றிசெலுத்தினார்கள். அவரது உருவப்படத்துக்கு மரியாதைசெலுத்தினார்கள். எல்லா இடங்களிலும் நேற்று பொங்கல் கொண்டாடினால், தேனி மாவட்ட மக்களுக்கு பென்னிகுவிக்`கின் பிறந்த நாளான இன்றுதான் பொங்கல்.

அடுத்த கட்டுரைக்கு