ஏர்ஏசியா சென்னை டு புவனேஸ்வர் (Sponsored Content) | AirAsia- Chennai to Bhubaneswar

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (17/01/2018)

கடைசி தொடர்பு:12:43 (24/01/2018)

ஏர்ஏசியா சென்னை டு புவனேஸ்வர் (Sponsored Content)

சென்னை, தென்னிந்தியாவின் உயிர்நாடி. வங்காளவிரிகுடாவின் கரையில் அமைந்திருந்தாலும், கடற்கரைகளைத் தவிர மேலும் நிறைய விஷயங்கள் உள்ளன.

இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாட்டைக் கொண்டிருப்பதால், இது எல்லோருக்கும் விருப்பமான சுற்றுலாத் தலமாக இருக்கிறது. 

எல்லா வயது சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்ற சென்னை, அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது. கோயில்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள், மால்கள், பூங்காக்கள், பட்டுச்சேலைகள் என சென்னையில் அனைத்தும் உள்ளன.

இங்கு, தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான 12 கோயில்கள் உள்ளன. மயிலை கபாலீஸ்வரர் கோயில், அடையாறுக்கு அருகே உள்ள மத்திய கைலாஷ் கோயில் ஆகியவை அவற்றுள் சில.

கபாலீஸ்வரர் கோயில் சிவபெருமான், கற்பகாம்பாள் என்ற பெயரில் பார்வதி அன்னையுடன் உறைந்திருக்கும் கோயில். இது, திராவிடக் கலாசாரத்தை மையமாகக்கொண்டு 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

சென்னை, பழம்பெரும் கோயில்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கி.மு 50-ல் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் கோயில் அதில் ஒன்றாகும். மக்களின் நோய் தீர்க்கும் தெய்வமாக சிவபெருமான் வீற்றிருக்கும் ஸ்தலம் அது. மக்கள் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதால், இந்த ஈஸ்வரனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் அமைந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவும் பிரமாண்டமான ஐந்தடுக்குக் கோபுரங்களையும் கொண்டுள்ளது.

நீங்கள் தவறவிடக்கூடாத மற்றொன்று, பார்த்தசாரதி கோயில். இந்திய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும், 'அர்ஜுனனுக்குத் தேரோட்டி' என்ற பொருள்கொண்ட பார்த்தசாரதி அவதாரத்தில் கிருஷ்ண பரமாத்மா வீற்றிருக்கும் ஸ்தலம் இது. 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலும் சென்னையின் புராதனக் கோயில்களில் ஒன்றாகும்.

 
நவகிரகக் கோயில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பெயரில் உள்ளது போல, நவகிரகங்கள் அல்லது 9 கோள்களுக்கென கட்டப்பட்ட கோயில். வெவ்வேறு கோயில்களில், வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படும் சிவபெருமான், இங்கே சிலை வடிவில் வீற்றிருக்கிறார். 


சென்னை, பெசன்ட் நகர் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் அஷ்டலட்சுமி கோயிலில், அன்னை லட்சுமி எட்டு வடிவங்களில் வீற்றிருக்கிறார். ஸ்ரீவிஷ்ணுவின் துணைவியான அவர், நிறைந்த செல்வம் மற்றும் வளத்தை அளிக்கிறார். இந்தக் கோயிலின் கோபுரங்கள், கோயிலின் அமைப்பைப் பிரதிபலிப்பதாய் உள்ளன. பல்வேறு அடுக்குகளைக்கொண்ட இந்தக் கோயில், புகைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது. 

பார்க்கவேண்டிய கோயில்களின் பட்டியலில் காளிகாம்பாள் கோயில் முக்கியமானது. போர்த்துகீசிய ஆக்கிரமிப்புக்காரர்களால் அழிக்கப்பட்ட இந்தக் கோயில், கி.பி 1640-ல் மீண்டும் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் கட்டமைப்பு, குறிப்பாக கோபுரம் மிகவும் சிக்கலான மற்றும் வண்ணமயமான சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.


தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள், குறிப்பாக தமிழகக் கோயில்களில் ஒரு வித்தியாசமான அதிர்வையும், சக்தியையும் உணரமுடியும். இந்தக் கோயில்களின் கருவறை, பிரகாரம், நுழைவாயில் மற்றும் கோபுரங்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமாக ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ளும்பொருட்டு வடிவமைக்கப்பட்டது.

 

இந்தியாவின் மிகச்சிறந்த பட்டுச்சேலைகளின் தாயகமாகத் திகழும் காஞ்சிபுரம், சென்னைக்கு மிக அருகில் உள்ளது. நீங்கள் இயற்கையை நேசிப்பவராகவோ, கட்டடக்கலையை ரசிப்பவராகவோ அல்லது பொருள்கள் வாங்க விரும்புவராக மட்டுமோ இருந்தால் நீங்கள் சென்னையை நிச்சயம் விரும்புவீர்கள். நீங்கள் சென்னையை நேசிக்க 100 காரணங்களையாவது கொண்டிருக்கிறது இந்நகரம். 

இந்தியாவின் இரு ஆன்மிக நகரங்களான சென்னை மற்றும் புவனேஸ்வரை இப்போது ஒன்றாக இணைக்கிறது ஏர்ஏசியா.

ஓடிசாவின் தலைநகரான புவனேஸ்வர், 2000 வருடப் பழைமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். மகாநதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்நகரத்தில், 700-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அதனால் இது, 'இந்தியாவின் கோயில் நகரம்' என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு பாரம்பர்யங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

சிவபெருமானின் அகம் என்று கூறப்படுவதாலேயே, புவனேஸ்வர் நகரத்துக்கு அப்பெயர் கிடைத்தது. 'மூவுலகத்தையும் ஆளும் கடவுள்' என்ற பொருள்கொண்ட 'திரிபுவனேஸ்வர்' என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் கூறுவர். புவனேஸ்வரில் உள்ள பெரும்பாலான கோயில்கள், கி.பி 8 மற்றும் கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. 

இப்படி கலாசாரம், மொழி, இனம் எனப் பல்வேறு விஷயங்களில் ஒத்திருக்கும் இரு நகரங்களும் இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கிறது.

புவனேஸ்வரில் நீங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய கோயில்கள் இதோ:

11-ம் நூற்றாண்டில் மணற்கல்லால் கட்டப்பட்ட லிங்கராஜா கோயில், 180 அடி உயரமும் 64 சந்நிதிகளையும் கொண்டது.

முன்பிருந்த நகரத்தில் உள்ள ஹிந்து சாகர் ஏரியின் அருகே, இதுபோன்று மணற்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில்கள் அதிகம் இல்லை. தன் பெயரைப் போலவே ராஜா ராணி கோயில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இங்கு சிலைகள் ஏதுமில்லை. இது ஒரு ராஜா ராணி தொடர்புடைய இடம் என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அதற்கு மாறாக, அது இந்தக் கோயிலைக் கட்டப் பயன்படுத்திய பல்வேறு மணற்கல்லைக் குறிப்பதாகும். இங்குள்ள சிற்றின்பச் சிற்பங்கள் மற்றும் அலங்காரக் கல்வெட்டுகளினால், 'கிழக்கு கஜுராஹோ' என்ற பெயரும் உண்டு.

உள்ளூர் மக்களால் திகிலுடன் பார்க்கப்படும் கோயிலும் உண்டு. அது, இந்தியாவில் இருக்கும் நான்கு யோகினி கோயில்களில் ஒன்றாகும்.  இந்தக் கோயிலின் சுவர்களில் 64 யோகினிப் பெண் கடவுளின் கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு கூரையே கிடையாது என்பதே இதன் தனிச்சிறப்பு. பனிமூட்டம் நிறைந்த காலை வேளையில், இந்தக் கோயிலுக்கு வருவது கனவில் நடப்பது போன்ற உணர்வைத் தரும்.


லிங்கராஜா கோயிலுக்கு மிக அருகே அமைந்துள்ளது, அழகு வாய்ந்த பிரம்மேஸ்வரர் கோயில். இரும்புக் கம்பிகளால் உத்திரங்கள் செய்யப்பட்ட முதல் கோயில். தாமரை மற்றும் முக்கிய உருவங்களைக் கொண்டிருப்பதால், கண்களைக் கவர்வதாக இருக்கின்றன.


34 அடி உயரமுள்ள முக்தீஸ்வரர் கோயில் மிகவும் சிறியது. இது, புவனேஸ்வரில் உள்ள சிறிய கோயில்களில் ஒன்றாகும். இதன் கல் நுழைவுவாயில் அழகுதான், இதை நிச்சயம் பார்க்கவேண்டிய கோயில்கள் பட்டியலில் சேர்க்கிறது. உத்திரத்தில் வரையப்பட்ட கமலத்தின் இதழ்கள் மற்றும் சிங்கத்தின் தலை வடிவங்கள், பிரம்மேஸ்வரர் கோயிலில் உள்ளதுபோலவே இருக்கின்றன. முக்தி என்றால் சுதந்திரம். இறைவன், யோகத்தின்மூலம் விடுதலை அளிப்பதால் இப்பெயர் பெற்றது.

இந்துக் கோயில்கள் மட்டுமல்லாமல், புவனேஸ்வரில், கலிங்கத்துக் கட்டடக்கலையில் அமைந்த, புத்த மற்றும் ஜைன மதக் கோயில்களும் புகழ்பெற்றவை. 

இன்றைய புவனேஸ்வர், மிகவும் நவீனமும் உயர்தர கட்டமைப்புகளும்  பரபரப்பும் நிறைந்த நகரமாக இருக்கிறது. ஐடி துறையில்  வளர்ந்துவரும் ஒரு நகரமாகவும் இருக்கிறது. புவனேஸ்வரும் சென்னையைப் போலவே, கடற்கரைக்கு அருகே அமைந்திருப்பதால், கொளுத்தும் வெப்பநிலையைக்கொண்டது. புவனேஸ்வர், பூரி, கோனார்க் ஆகிய மூன்று நகரங்களும் சேர்ந்து “தங்க முக்கோணம்” என்றழைக்கப்படுகிறது. இங்கே, 500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இந்த இரண்டு வெவ்வேறு நகரங்களையும் இணைக்கும் ஏர்ஏசியா. உங்களை  குறைந்த கட்டணங்களில் இந்தியாவை சுற்றிப்பார்க்க அழைக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க