Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• `இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மட்டும் எனக்குப் புரிவதே இல்லை. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் சென்று வேலை செய்கிறார்கள் என்றால், மற்ற நாட்டினரும் இங்கே வந்து வேலை செய்யலாம்தானே? கலையிலும் விளையாட்டிலும் அரசியலுக்கு இடமே இல்லை’ - பாகிஸ்தான் நடிகர் ஃபாவத் கானுடன் நடித்ததைப் பற்றி கேட்டதற்குத்தான் இப்படிச் சூடாகிவிட்டார் சோனம் கபூர்.   கூல்டௌன் பேபி!

இன்பாக்ஸ்

•  உங்க ஸ்மார்ட்போன் மெமரியில் இடம் இருக்கிறதா? அப்ப உடனே `கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்' டௌன்லோடு செய்யுங்கள். ஆங்க்ரி பேர்ட்ஸ், டெம்பிள் ரன் வரிசையில் மொபைல் கேம்களில் அடுத்து ட்ரெண்டில் இருப்பது இதுதான். `வாட்ஸ்அப்ல இருக்கியா?’ என்பதுபோல, `கிளான்ல இருக்கியா?’ எனக் கேட்கும் அளவுக்கு நம்ம ஊரில் பிரபலம் ஆகிவிட்டது கேம். அதற்கு ஏற்ப, இந்த ஆண்டு அதிகம் வைரல் ஆன வீடியோக்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பது கிளாஷ் ஆஃப் கிளான்ஸின் விளம்பரம் என அறிவித்திருக்கிறது யூடியூப். லைஃப் கேட்டுடாதீங்க பாஸ்!

• `ஈஸ்டர்ன் ஐ’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய ஓட்டெடுப்பில், மூன்றாவது முறையாக  `ஆசியாவின் கவர்ச்சிப் பெண்’ என்ற பட்டம் வென்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. `குவான்டிகோ’ சீரியல், பாலிவுட் படங்கள், என தினம் 16 மணி நேரம் உழைக்கிறாராம் பிரியங்கா. இந்த முறையும் பட்டியலில் நம்பர் 1. `மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், அழகு தானாக வரும்’ எனச் சிரிக்கிறார் பிரியங்கா. அந்தச் சிரிப்புதாங்க...

•   காற்று மாசு அடைந்திருப்பதை  `ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ மூலம் அளப்பார்கள். இதன் மதிப்பு 200-ஐ தாண்டினால் ஆபத்து. 301-500 என்றால் `அவ்வளவுதான் போச்சு’. சென்ற வாரம் சீனா தலைநகர் பீஜிங்கின் ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் 253-ஐ தொட, நகரம் முழுவதும் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டது; பள்ளிகள் மூடப்பட்டன. சாலையில் கார்கள் தேவையின்றி ஓடவில்லை. போராடி மாசு அளவைக் குறைத்தது சீனா. இதே ஆபத்து  டெல்லிக்கும் இருப்பதால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒரு நாள்,  இரட்டைப்படை எண் வாகனங்கள் அடுத்த நாள் என ஜனவரி 1-ம் தேதி முதல் இயக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், புதிய டீசல் கார்கள் வாங்க இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. தடை நல்லது!

•  ஃபோர்ப்ஸ் இதழின் `டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியல்’ சென்ற வாரம்  வெளியானது. முதல் இடம் பிடித்திருப்பது ஷாரூக் கான். நம்ம ஊர் பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 14-வது இடம். கமலுக்கு 46-வது இடம், ரஜினிகாந்துக்கு 69-வது இடம் கிடைக்க... ஆச்சர்ய என்ட்ரி தனுஷ். 37-வது இடத்தில் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் 61-வது இடத்தையும், சூர்யா 71-வது இடத்தையும், ஆர்யா 80-வது இடத்தையும், பிரபுதேவா 88-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். தல, தளபதிகூட இல்லேன்னா இது போங்குப்பா!

இன்பாக்ஸ்

•  `பாக்ஸ் ஆபீஸில் வசூல்ராஜா’, `விமர்சனங்களில் நடிப்பு ராஜா’ என மலையாளத்தில் ப்ருத்வி ராஜின் கிராஃப் பக்கா. கைவசம் ஒன்பது படங்கள் வைத்திருக்கும் ப்ருத்விராஜின் கால்ஷீட் 2018-ம் ஆண்டு வரை ஃபுல். இந்த வருடம் வெளியான இவரது 6 படங்களில், 4 படங்கள் செம ஹிட்.   கலெக்‌ஷன் தலைவன்!

இன்பாக்ஸ்

•  சச்சின்-200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிச் செய்த சாதனையை, 32 டெஸ்ட் போட்டிகளிலேயே செய்திருக்கிறார் அஷ்வின் ரவிச்சந்திரன். சச்சின், ஷேவாக்... இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 5 முறை `மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வென்றதே இதுவரை இந்திய அளவில் சாதனை. இருவருமே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் அஷ்வின் இப்போது 5 முறை `மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வென்று அசத்தியிருக்கிறார். இதற்கு இடையே ட்விட்டரில் `ஃபாரின் பிட்ச்சில் எல்லாம் உன்னால் விக்கெட் எடுக்க முடியாது' என ரசிகர் ஒருவர் சீண்ட `போய் புள்ளக்குட்டியைப் படிக்க வை... உன்னைக் கேட்டுத்தான் நான் கிரிக்கெட் ஆட வந்தேனா?’ என அஷ்வின் ரிப்ளை தட்ட, ட்விட்டரில் செம ரகளை. சமாதானம்... சமாதானம்!

•  அனிருத்தும் சிம்புவும் சேர்ந்து உருவாக்கிய பாடல் ஒன்று நெட்டில் லீக் ஆகி கலவரப்படுத்தியிருக்கிறது. பச்சையாக கெட்டவார்த்தைகளைப் போட்டு பாடல் பாடிவிட்டு, அந்த வார்த்தைகள் வரும் இடத்தில் எல்லாம் `பீப்’ சத்தத்தால் அமுக்கி யிருக்கிறார்கள். இருந்தாலும் அந்த வார்த்தைகள் அப்படியே கேட்பதாகப் பொங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். விளையாட்டாகச் செய்த பாடல் லீக் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு புறம், படமே இல்லாத சிம்பு, தனுஷின் `தங்கமகன்’ டிரெய்லர் வெளியீடு அன்று வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் சொல் கிறார்கள். இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?

இன்பாக்ஸ்

•  `மோஸ்ட்லி சன்னி... பார்ட்லி க்ளவுடி’ - சன்னி லியோன் வாழ்க்கையைத் தழுவி திலீப் மேத்தா எடுத்திருக்கும் டாக்குமென்டரி படத்தின் பெயர் இது. திரைப்படத்தின் நீளத்துக்கு ஓடும் டாகுமென்டரியாம். `இந்தப் படம் பார்த்த பிறகு நீங்கள் அவரைப் பார்க்கும் விதமே மாறியிருக்கும். நிச்சயம் நெகிழ்ச்சியான விஷயங்களும் இருக்கும். சன்னி தன் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி என்றுமே வருத்தப்பட்டது கிடையாது. அவர் எடுத்த சில சரியான முடிவுகள்தான், இன்று வெற்றிகரமான மனிதராக சினிமாவில் மாற்றியிருக்கிறது’ என்கிறார் திலீப்.  கெட் ரெடி ஃபோக்ஸ்!