250 ஆண்டு வரலாறு... 40,000 பறவைகள்... ஆச்சர்யமூட்டும் வேடந்தாங்கல் சரணாலயம்! | Have you ever been to Vedanthangal birds sanctuary

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (18/01/2018)

கடைசி தொடர்பு:16:25 (18/01/2018)

250 ஆண்டு வரலாறு... 40,000 பறவைகள்... ஆச்சர்யமூட்டும் வேடந்தாங்கல் சரணாலயம்!

வேடந்தாங்கல் பற்றி எல்லோரும் படித்திருப்போம்; கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எத்தனை பேர் நேரில் பார்த்திருப்போம்?

பறவைகள் சரணாலயம்

சென்னையிலிருந்து NH45 தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் 50 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்தியாவின் பழங்காலப் பறவைகள் சரணாலயம். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 ஹெக்டேர் (74 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. சரணாலயத்தில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது குரங்குகள்தாம். 

சரணாலயத்தின் பாரிங்டியோனியா காடுகளானது பல்வேறு வகையான பறவைகளுக்கு ஒரு மிதக்கும் வசிப்பிடமாக உள்ளது. பறவைகளைப் பார்வையிட காடுகளைச் சுற்றி நிழல் படர்ந்த ஒரு கல் நெடுஞ்சாலையில் நடந்து சென்றோம். அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் சென்றிருக்கிறோம் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தோம். 

 பருவத்திற்கு 10,000 முதல் 20,000 வரையிலான பறவைகள், ஓய்வு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காக இங்கு வருகை தருகின்றன. ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40,000 க்கும் அதிகமான பறவைகள் (26 அரிய வகைகளும் அடங்கும்) சரணாலயத்துக்கு வருகை தருகின்றன. பிந்தில், கர்கானே, சாம்பல் வேக்டெய்ல் போன்ற பறவைகள் வருகை தருகின்றன.

வேடந்தாங்கலுக்குத் தமிழ் மொழியில் 'வேட்டைக்காரரின் குக்கிராமம்' என்று பொருள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் நிலப்பிரபுக்களினால் இந்த இடம் வேட்டையாடப்பட்டது. இந்தச் சரணாலயம் பலவிதமான பறவைகளை ஈர்த்தன. ஏனெனில் அங்குள்ள சிறிய ஏரிகள் பறவைகளுக்கு உணவிடமாக அமைந்தன. அதன் பல்லுயிரியல் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் வேடந்தாங்கலில் ஒரு பறவை சரணாலயத்தை1798 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது. 1858 ஆம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சியின் கட்டளையால் இது நிறுவப்பட்டது. இந்தச் சரணாலயத்தை பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை. இந்த நேரத்தில், பறவைகளின் வேலை கூடு கட்டுவது மற்றும் அவற்றை பராமரிப்பதுதான். இந்தச் சரணாலயத்திற்கு அருகே உள்ள கிராமவாசிகள் சரணாலயம் மற்றும் அங்குள்ள பறவைகள் குறித்து மிகவும் அக்கறையுள்ளவர்கள். பறவைகள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும்படியான  
நடவடிக்கைகளை தவிர்க்கின்றனர். வனசீவராசிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதற்கு முன்னர் பறவைகள் மற்றும் பயிர்களின் உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள உறவை உள்ளூர் மக்கள் புரிந்துகொண்டனர். 

வேடந்தாங்கல்

ஆல்பம் பார்க்க க்ளிக் செய்யவும்

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ளூர் கிராமவாசிகள் செங்கல்பேட்டை லியோனல் அரண்மனையாளரிடம் பறவைகள் வேட்டையாடப்படுவது குறித்து புகார் அளித்தனர்.1936 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அந்த ஏரி ஒரு சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டில், சென்னை வனச் சட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட காடுகளுக்குச் சட்டபூர்வத் தகுதி வழங்கப்பட்டது.1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி அரசாங்க உத்தரவின் படி, 1972 ஆம் ஆண்டின் வனசீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 'வேடந்தாங்கல் ஏரி பறவைகள் சரணாலயம்' என பிரகடனப்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் பார்வையிடும் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. இப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட பார்டிங்கோன்னியா மரங்களால் ஆன ஒரு சிறிய தோப்பு இருந்தது. கூடுதலாக 100 மரங்கள் 1973 ஆம் ஆண்டில் நடப்பட்டன, 1996 இல் 1,000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன.

வேடந்தாங்கல் ஏரிக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. சில எளிதில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பறவைகள் டார்ட்டர்ஸ், க்ரீப்ஸ்,  மூரென்ஸ், நைட் ஹெரன்ஸ், நெல் பறவைகள்,  பைன்டில்ஸ், க ஹெரோன்ஸ், சாண்ட்விபர்ஸ், ஷ்வேல்லர்ஸ், டெர்ன்ஸ், மற்றும் இன்னும் பல இதில் அடங்கும். வேடந்தாங்கல் ஏரி கடல் மட்டத்திலிருந்து 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 250 ஏக்கர் நிலப்பகுதிக்கு நீர் விநியோகம் செய்கிறது. ஏரியின் அதிகப்பட்ச ஆழம் 5 மீட்டர். 

இப்பகுதியைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சரணாலயத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக பொதுப்பணித் துறையினால் நீர் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டில், பறவைகள் கூடுகளை அதிகரிக்க சரணாலயத்தில் இரண்டு லட்சம் பேரிங்டோனியன்கள் மரங்கள் நடவு செய்யப்பட்டன.

வேடந்தாங்கல்

ஆல்பம் பார்க்க க்ளிக் செய்யவும்

பார்வை நேரம் : காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 

வேடந்தாங்கல் சரணாலயத்தில் நுழைவுக் கட்டணமாக நபருக்கு ₹ 5 ரூபாயும் கேமராவிற்கு ₹ 25 ரூபாயும் இரண்டு சக்கர வாகனத்திற்கு ₹ 20 ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு  ₹ 50 ரூபாயும் வனப் பாதுகாப்பினரால் வசூலிக்கப்படுகிறது.

சரணாலய வாசலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பாதுகாப்பு இல்லத்தில் சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் ஏசி அறைகள் உள்ளன. உணவும் கிடைக்கிறது. சென்னை வனவிலங்கு வார்டன் அலுவலகம் அல்லது  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனவிலங்கு வார்டன் அலுவலகத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். பிரதான வாசலுக்கு வெளியே  நிறைய தேநீர் கடைகளும் உள்ளன.


டிரெண்டிங் @ விகடன்