மக்களுக்கு இந்த கூல்ட்ரிங்க் அதிகம் பிடிக்கக் காரணம் என்ன தெரியுமா?  (Sponsored Content)

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தமிழர்களின் தாரக மந்திரம்! நம்மில் பலருக்கும் வெவ்வேறு விஷயங்களில் வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், தமிழர் என்ற உணர்வு வரும்போது நாம் ஒன்றுகூடத் தயங்கியதே இல்லை. இதற்குச் சிறந்த உதாரணம், ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் திரண்ட இளைஞர் படை! பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் மெள்ள மெள்ள நுழைந்து, ஒவ்வொரு துறையிலும் கால் பதித்து வருகின்றன. வெளிநாட்டுப் பொருள்களை தவிர்த்து, உள்நாட்டுப் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதே, நம் நாட்டின் வளம் பெருக்க உதவும் என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை! 

இந்தியா தனது நான்காவது பிரதமரை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருந்த அதே 1977 ஆம் ஆண்டு, மக்களின் தாகம் தணிக்க உருவானதுதான் டொரினோ. வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகள் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு இந்தியரால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, இந்திய மக்களால், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் எல்லோராலும் விரும்பி சுவைக்கப்பட்ட பானம் இந்த டொரினோ. உலகின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய வெவ்வேறு குளிர்பான வகைகளை சந்தைகளில் இறக்கி, இந்திய நிறுவனமான டொரினோவிற்கு கடும் போட்டி கொடுத்த போதும், இன்றளவும் இயங்கி வரும் டொரினோ, மக்களின் மனம் கவர்ந்த குளிர்பானமாக இருப்பதன் காரணங்கள் என்ன தெரியுமா?

 

டொரினோவின் ஆரஞ்சு சுவைதான் அதன் தனிச்சிறப்பு. அதுதான் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதற்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. வைகை ஆறு, மீனாட்சி கோவில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், எண்பதுகளில் டொரினோவும் மதுரையின் அடையாளமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கவும், திருவிழா காலங்களில் கோவில் வாசல்களில் பக்தர்கள் தாகம் தணிக்கவும், கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கவும் மட்டுமன்றி டொரினோ என்ற இந்தக் குளிர்பானத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. 

அது என்னவென்றால், சுகாதாரமற்ற குடிநீரினால் உண்டான காய்ச்சல், தலைவலி மற்றும் இன்னும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தது டொரினோ பானத்தை. அது எதனால் தெரியுமா?  டொரினோவின் தண்ணீர் சுத்தகரிப்பு முறைதான். அது சற்று பழைமையானது. ஆனால், அதே சமயம் மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. டொரினோவின் சுத்திகரிப்பு முறை மிகவும் இயற்கையானது மற்றும் மினரல்களைத் தக்கவைத்துக்கொள்வதால், உடலுக்கு நன்மை விளைவிப்பதாய் இருந்தது. இன்றும் டொரினோவில் அதே சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுவதால், அதிக நன்மைகளைக் கொண்டிருக்கிறது. 

இதில் குறைந்த அளவு வாயு (Gas) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், வாயு (Gas), அஜீரணம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் உணவு செரிமானத்துக்கும் ஓரளவிற்கு உதவுகிறது!

 

 

முதலில் ஆரஞ்சு சுவையுடன் தொடங்கப்பட்ட டொரினோ, இன்று திராட்சை, இஞ்சி மற்றும் மாம்பழச் சுவைகளிலும் கிடைக்கிறது. இதற்கு முறையே கிராபா (Grapa), இஞ்சி (Injee) மற்றும் ரா (Raa) என்று பெயரிடப்பட்டுள்ளது. டோஃஸோ (Toso) என்ற சோடா வகையும் உண்டு. மிக நீண்ட பாரம்பர்யப் பெருமையும், மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டும் சுவையைக் கொண்ட டொரினோ, கோடைக் காலத்தில் மட்டுமல்லாமல் எல்லாப் பருவ காலத்திலும், எல்லா வயதினருக்கும், தமிழர்களுக்கு மிகவும் பிடித்த குளிர்பானமாக இருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!