வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (20/01/2018)

கடைசி தொடர்பு:12:22 (09/02/2018)

 +2 முடித்தவர்களுக்கு ஏர்போர்ட்டில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு!

"எதிர்த்த வீட்டுப்  பொண்ணு எப்பவும் புஸ்தகமும் கையுமாவே இருக்கா, என்னைக்காவது ஒருநாள் காலைல வெள்ளனா எழுந்து படிக்கிறியா நீ?" எனப் பெற்றோர்கள் ​ஒருபுறம்​, ​"இதுதா​ன்​ வாழ்க்கையில் முதல் படி. இதைக் கோட்டை விட்டுட்டேன்னா அவ்வளவுதான்!", என ஆசிரியர்கள்​ ​இன்னொருபுறம்;​ இருவருக்குமிடையில் விழி பிதுங்கி கதிகலங்​குகிறது​ ​+2 ​தேர்வு எழுதவிருக்கும் ​மாணவர்களின் நிலைமை!


​ இந்த​ அறிவுரை அட்ராசிட்டி​களுக்குக் காரணம்​, இந்தப் பரிட்சையில் நன்றாக மார்க் எடுத்தால்தான் கல்லூரியில் விரும்பிய கோர்ஸ் கிடைக்கும்; நல்ல கோர்ஸ் கிடைத்தால்தானே நல்ல வேலையும் கிடைக்கும்!

மனதுக்கு பிடித்த வேலை, மரியாதைக்குரிய பணியிடம், அதிக வேலைச்சுமையும் இருக்கக்கூடாது, கைநிறைய வருமானமும் கிடைக்க வேண்டும், இவையனைத்தையும் வழங்கும் படிப்பில் சேர உயர்நிலை வகுப்பில் அதிக மார்க் எடுக்கவேண்டிய அவசியமும் இருக்கக்கூடாது... இந்த ஐந்தடுக்கு  நிபந்தனைகளையும் ஒரு துறை பூர்த்தி செய்கிறது, அதுதான் "விமானத் துறை" எனும் மேஜிக்கல் துறை!

விமானத் துறை என்றாலே பைலட் டிரெயினிங் மற்றும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிகள் பற்றித்தான் நமக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், பைலட்டுடன் இணைந்து செயல்படும் ஃப்ளைட் டிஸ்பாட்சர், விமானத்திலிருந்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ரேடியோ டெலிபோனி பயிற்சிகள், பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய படிப்புகள், விமானம் மற்றும் விமான நிலைய மேலாண்மை பற்றிய படிப்புகள் என எண்ணற்ற பிற வாய்ப்புகளையும் இந்தத்துறை வழங்குகிறது.

எம்பிஏ ஏவியேஷன், பிபிஏ ஏவியேஷன் மற்றும் பிஎஸ்சி ஏவியேஷன் போன்ற தொழில்முறை படிப்புகள் கற்பதால் விமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, 5-ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கஸ்டமர் கேர் நிறுவனங்களிலும் பணிபுரியலாம். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விமான சேவை நிறுவனங்களிலும்  பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல்களிலும், அல்லைய்ட் மக்கள் சேவை மையங்களிலும் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், மற்ற தொழில்முறை படிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் செலவும் குறைவே!

+2 மாணவர்களுக்காக விமானத் துறைக் குறித்த கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை  பிப்ரவரி 24ம் தேதி விகடன் நடத்தவுள்ளது. இதில் விமானத் துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்விக் கடன் பற்றி எடுத்துரைக்க வங்கி மேலாளர்கள், அரசுத்துறையினர் உள்ளிட்ட பல நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மாணவர்களும் பெற்றோரும் இத்துறைப் பற்றி விவரமாக அறிந்துகொள்ளவும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் இச்சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாமே!

நிகழ்ச்சி பற்றிய தகவல்களுக்கு... க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க