Published:Updated:

’’இந்தி எதிர்ப்பு போராட்டத் தியாகிகளுக்கு பென்ஷன் கிடையாது!’’ - சென்னை உயர் நீதிமன்றம்

’’இந்தி எதிர்ப்பு போராட்டத் தியாகிகளுக்கு பென்ஷன் கிடையாது!’’ - சென்னை உயர் நீதிமன்றம்
’’இந்தி எதிர்ப்பு போராட்டத் தியாகிகளுக்கு பென்ஷன் கிடையாது!’’ - சென்னை உயர் நீதிமன்றம்

ந்தி எதிர்ப்பு போராட்டத் தியாகிகளுக்கு பென்ஷனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டவர். மொழிப் போர் தியாகிகளுக்கான பென்ஷன் தொகை வழங்குமாறு தமிழக அரசுக்கு பல முறை விண்ணப்பித்தும் பலன் இல்லை. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏழுமலை, ''தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2007-ம் ஆண்டு முதல் மொழிப்போர் தியாகிகளுக்கு பென்ஷன் தொகையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். வழக்கில் நீதிபதி ஆர்.சுரேஷ் அளித்த தீர்ப்பில் கூறியதாவது, ''உச்ச நீதிமன்றம் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஓய்வுதியம் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு உதவும் வகையில் சட்டம் இயற்றப்பட்டாலும் பென்ஷன் தொகையை நிறுத்துமாறு அரசாணை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால்,இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பென்ஷன் பெறும் தகுதியை இழக்கிறார்கள்.'' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், ''குறிப்பிட்ட ஒரு மொழிக்கு எதிராக போராடியவர்களுக்கு பென்ஷன் வழங்குவது, போராட்டக்காரர்களை ஊக்கமளிப்பதாக அமையும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்திய நாடு. இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு பென்ஷன் தொகை வழங்குவது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் '' என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறி, சொக்கலிங்கத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார். சொக்கலிங்கம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று மூன்று முறை சிறை சென்றவர்.