வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (23/01/2018)

கடைசி தொடர்பு:17:38 (23/01/2018)

``எல்லாம் சரியாக இருக்கிறது... குட் நைட்!” - விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவான கடைசி வார்த்தைகள்

நீர், நெருப்பு, சாம்பல் என ஓர் அழிவின் மிச்சமாய் இருக்கும் கறுப்புப் பெட்டிகள் இந்த உலகத்துக்குச் சொல்லிய கதைகள் ஏராளம். பல உயிர்களின் முடிவை ஒரு வார்த்தையில் பைலட் சொல்ல விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் அவற்றைப் பத்திரமாக சேமித்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு விபத்தும் ஒரு துயரத்தின் வாக்குமூலம்.  தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பிப் பயணித்து ``இனி எதுவுமே இல்லை, எல்லாமே முடிய போகிறது” எனத் தெரிந்த கடைசி நிமிடம், ஒரு மனிதன் உச்சரிக்கிற வார்த்தைகளை, வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. ஒன்றாய் இருந்த வார்த்தைகள் தனித்தனி எழுத்துகளாய் பிரிகிற கடைசி நிமிடங்களைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா. கடைசி வார்த்தைகள்  பல யுகங்களுக்கு வரலாற்றில் தொழில்நுட்பத் துயரங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். 

செப்டம்பர் 25, 1978-ம் ஆண்டு போயிங் 727 விமானம் 128 பயணிகளுடன் சான் டியாகோ விமான நிலையத்தில் இருந்து கலிபோனியாவுக்குப் புறப்பட்டது. பசிபிக் தென்மேற்கு பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதியில் விமானம் எதிர்பாராதவிதமாக பாதையைக் கடந்து வழி  மாறிப்  பயணித்தது. விமானம் பறந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு தனியார் செஸ்னா 172 எனும் குட்டி விமானத்துடன் மோதியது. இந்த விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர். விமான பைலட்டின் கடைசி வார்த்தைகள் இப்படிப் பதிவாகி இருந்தது. 


”மா, ஐ லவ் யூ மா...”

கறுப்புப் பெட்டி

1987-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி காலை 10:18 மணிக்கு  போலந்து நாட்டின்  போலிஷ்  நிறுவனத்துக்குச் சொந்தமான  விமானம் 5055,  வார்ஸாவ் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க்கின் ஜான்  கென்னடி விமான நிலையத்துக்குப் புறப்பட்டது. விமானத்தில் 183 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட  சில  நிமிடங்களில் விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இன்ஜினின் வெப்ப அளவு 1,000 டிகிரி செல்ஷியஸில் இருந்து 1,800 டிகிரி செல்ஸியஸாக அதிகரிக்கிறது. அதில் விமானத்தின் முதல் இன்ஜின் பழுதடைந்து தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கிறது. வெப்பத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விமானத்தின் கார்கோ பிரிவில் தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது. விமானி விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்ததை உணர்ந்து விமானத்தை மீண்டும் வார்ஸாவ் விமான நிலையத்துக்குத் திருப்ப முயல்கிறார். அதற்குள் விமானத்தின் இரண்டாவது இன்ஜினிலும் தீ பரவி விடுகிறது. ரேடியோவில் தொடர்பு கொள்கிற கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் விமானத்தை வார்ஸாவ் விமான நிலையத்தின் 33 வைத்து ரன்வேயில் தரை இறக்கச் சொல்கிறார்கள். விமானியும் விமானத்தை ரன்வே பகுதிக்குத் திருப்ப முயல்கிறார். விமானம் இருக்கிற இடத்தில் இருந்து ரன்வே 12 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. ரேடியோ அலைவரிசையில் 11 கிலோ மீட்டர்கள் இருக்கிறது, விமானத்தை ரன்வே பகுதியின் மத்தியில் தரை இறக்குங்கள் எனத் தகவல் கிடைக்கிறது. எதிர்பாராத விதமாக தரை இறங்கப் பயன்படும் இயந்திரமும் தீயின் காரணமாகச் செயல் இழக்கிறது. விமானத்தின் தகவல் தொடர்புகள் அனைத்தும் 11:12: 13 மணிக்குத் துண்டிக்கப்படுகிறது. விமானம் போலந்து நாட்டுக்கு வெளியே கபாடி வூட்ஸ் ரிசர்வ் பாரஸ்ட்டில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 183 பேரும்  உயிரிழந்தனர். விமானியிடம் இருந்து கிடைத்த கடைசி வார்த்தைகள்..

“Dobranoc! Do widzenia! Cześć, giniemy!"  'குட் நைட், குட்பை, நாங்கள்  அழிந்து விடுகிறோம்!'

 

விமானம்

மே 7, 1964-ல், பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் கலிபோர்னியாவிலிருந்து , சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்துக்குப் புறப்பட்டது. 33 பயணிகள் மற்றும் மூன்று குழுவினர் உள்ளிட்ட 44 பேருடன் பயணித்தது. அதில் பயணித்த பயணியின் பெயர் கோன்செஸ். விமானம் சான் ராமோன் என்கிற இடத்துக்கு மேலாக 5000 அடி  உயரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்பொழுது துப்பாக்கியுடன் விமானி அறைக்குச் சென்ற கோன்செஸ்,  பைலட் இருவரையும்  ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட ஆரம்பிக்கிறான். இரண்டொரு நொடிகளில் காக்பிட்டில் இருந்த இரு பைலட்களும் உயிரிழக்கிறார்கள். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கிப் பாய ஆரம்பிக்கிறது. கோன்செஸ் தன்னைத்தானே சுட்டுக் கொல்கிறார். 44 பேரும்  கொல்லப்படுகிறார்கள். சாம்பல்களுக்கு நடுவே கிடந்த  கறுப்புப் பெட்டி மீட்கப்படுகிறது.  இரண்டு  பைலட்டுகளில் ஒருவரான ஆண்ட்ரஸ் அனுப்பிய கடைசி ரேடியோ வார்த்தை...

 "நாங்கள் சுடப்படுகிறோம்... எங்களைக் காப்பாற்றுங்கள்! "

 

வாக்குமூலம்

 

1979-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, ஏர் நியூசிலாந்தின் அண்டார்டிக்கா பன்னாட்டு வானூர்தி விமானம் 901 , ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து நியூசிலாந்து  கிறிஸ்ட்சர்ச் விமானநிலையத்துக்குப் புறப்பட்டது. விமானத்தின் வழியை கணினிமயமாக்கியத்தில் சிறிய தவறு நிகழ்ந்து விடுகிறது. அதுகுறித்த தகவல்கள் விமானிக்கோ கோ பைலட்டுக்கோ தெரியப்படுத்தாமல் இருக்கிறது.  விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விமானி விமானத்தை ஆட்டோ மோடிற்கு மாற்றி விடுகிறார். கணினிமயமாக்கப்பட்ட வழியை விமானம் பின் தொடர்ந்தது. மேகக் கூட்டங்கள் வெள்ளை வண்ணத்தில் இருந்திருக்கிறது. 6,000 அடி  உயரத்தில் பயணிக்க வேண்டிய விமானம் 2,000 அடி  உயரத்தில் பயணிக்கிறது.  திடீரென விமானத்தின் எச்சரிக்கை விளக்குகளும் அலாரமும் அலறத் தொடங்குகிறது. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் விமானம் ஏர்பஸ் என அழைக்கக்கூடிய மலையில் மோதி வெடித்துச் சிதறுகிறது.  மவுண்ட் ஏர்பஸ்  அன்டார்டிகாவில் இருக்கிற இரண்டாவது பெரிய எரிமலை. விபத்தில் விமானத்தில் பயணித்த 257 பேரும்  உயிரிழக்கிறார்கள். மவுண்ட் ஏர்பஸ் எரிமலையில் விமானம் மோதி  வெடித்துச் சிதறியது உலகத்துக்குத் தெரியும்,  ஆனால், விமானிக்கு...  பைலட் பேசிய  கடைசி வார்த்தைகள்..

 “Actually, these conditions don’t look very good at all, do they?”

வாக்குமூலம் ஏர்பஸ்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41  மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவைக் கடக்கும்போது இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது. இதுவரை என்ன நடந்தது... என்ன ஆனது எனது தெரியாமல் இருக்கிற மலேசியன் விமானத்தில் இருந்து வந்த கடைசி வார்த்தைகள்

“எல்லாம் சரியாக இருக்கிறது, குட் நைட்…”


டிரெண்டிங் @ விகடன்