Published:Updated:

தமிழகத்திற்கு மின்சாரம்: கட்டமைப்பு இல்லையென மத்திய அரசு கைவிரிப்பு!

புதுடெல்லி: தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க போதிய  கட்டமைப்பு இல்லை என்பதால் மின்சாரம் வழங்க இயலவில்லை என்று உச்ச  நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில அரசு திரும்ப ஒப்படைக்கும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க  வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய  மின்சார ஆணையம் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
அதில், தெற்கு தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் மின்கட்டமைப்பு பாதைகள்  அனைத்தும் நிரம்பி வழிவதாகவும்,எனவே மின்சாரத்தை கடத்த போதுமான பாதைகள்  இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய மின்சார ஆணையத்தின் இந்த அறிக்கை மீது பதிலளிக்க  தமிழகத்திற்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 5 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர்.