Published:Updated:

’எங்க அம்மா வாங்குற சம்பளத்துல இதைத் தாங்க முடியுமான்னு தெரியல!’ - பேருந்துக் கட்டண உயர்வு குறித்து குமுறும் மாணவி

ப.பிரியதர்ஷினி

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையின் மையப் பகுதியில் உள்ள மன்னர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 1,500 பேர் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நீடிப்பதால், கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தொடங்கினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பேருந்துக் கட்டணம் குறைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். அச்சம் அடைந்த கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்கு இந்த வாரம் விடுமுறை என்று அறிவித்தது. இருந்தபோதும், எங்களுடைய பல போராட்டங்கள் வெற்றியில் முடிந்துள்ளன. விடுமுறை அளித்து முட்டுக்கட்டை போட்டால் ஓய்ந்துவிட மாட்டோம்; 'ஆற்றை அடக்க அரசு அணை கட்டினாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து கடலாய் எழுவோம்' என்று கூறி, திங்கள் முதல் எங்கள் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிப்புடன் சென்றனர்.

போராட்டத்தில் பங்குபெற்ற மாணவி ஒருவரிடம் பேசியபோது... `எனக்கு அப்பா இல்லை, எங்க அம்மாதான் வீட்டு வேலை செஞ்சு என்ன படிக்க வைக்கிறாங்க. என்னோட காலேஜ் செலவு எல்லாம் எனக்கு வர ஸ்காலர்ஷிப் பணத்த வச்சு சமாளிக்குறேன். அதைத் தவிர, போய்ட்டு வர பஸ் செலவு எல்லாம் நானேதான் பார்த்துக்கிறணும். நீங்க கேட்பீங்க அதான் உங்க அம்மா வேலை பார்க்கிறார்களே அதை வைத்து செலவு செய்யலாமே என்று... ஆமா எங்க அம்மா ஒடம்பு முடியாதவங்க அவங்களுக்கு மாசத்துக்கு ஒரு வீட்ல 500 ரூபா கொடுப்பாங்க. காலையில் மாலையில் சேர்த்து 4 வீட்ல வேலைப்பாக்குறாங்க... மொதயெல்லாம் எங்க ஊர்ல இருந்து காலேஜ் வந்துட்டுப்போக 15+15 =30 ரூபா ஆகும், இப்போ நான் வரதுக்கு மட்டுமே 26 ரூபாய் கொடுக்குறேன். 

’எங்க அம்மா வாங்குற சம்பளத்துல இதைத் தாங்க முடியுமான்னு தெரியல!’ - பேருந்துக் கட்டண உயர்வு குறித்து குமுறும் மாணவி

மாசத்துக்கு எங்க அம்மா வாங்குற சம்பளத்துல இதைத் தாங்க முடியுமான்னு தெரியல... நான் ஒண்ணு கேக்குறேன். இந்த அரசாங்கத்தைப் பார்த்து யாரும் வீட்ல காரை நிறுத்தி வச்சுட்டு பஸ்ல போகல, எங்களை மாதிரி அடிமட்ட குடும்பங்கள் பயணம் செய்ய பயன்படுத்துற ஒண்ணு. அதுல இந்த அரசாங்கம் இப்படி பண்ணுனா என்ன பண்ணுறது. இதோ நாங்க எல்லோரும் இந்தக் கட்டணத்தை திரும்ப பெறுங்கனு போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்கள் குடும்ப கஷ்டம் தெரிஞ்ச கல்லூரி நிர்வாகமே எங்க போராட்டத்துக்கு எதிர்த்து இந்த வாரம் முழுக்க லீவு விட்டுட்டாங்க. நான் சொன்னது எல்லாம் தப்பா சரியானு தெரியல. ஆனால், இதன் உண்மை. இதே மாதிரி கஷ்டம் எனக்கு மட்டும் இல்ல. இந்தத் தமிழ்நாட்டுல உள்ள ஏழை குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் நடக்குற ஒண்ணு’  என்றார் கண்ணீருடன்.