Published:Updated:

பக்தர்களை மிரட்டும் ராட்சதத் தேன்கூடு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கே.குணசீலன்
பக்தர்களை மிரட்டும் ராட்சதத் தேன்கூடு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
பக்தர்களை மிரட்டும் ராட்சதத் தேன்கூடு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தஞ்சாவூரிலுள்ள பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் கோயிலின் மெயின் நுழைவாயிலுக்கு மேலே, ராட்சதத் தேன்கூடு உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க,  அதை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் கூறுகிறார்கள்.

பக்தர்களை மிரட்டும் ராட்சதத் தேன்கூடு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

"தஞ்சாவூர் அருகில் உள்ளது, காசவளநாடு கோவிலூர் கிராமம். இங்கு அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் ஆலயம். அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வரும் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெறும். அதுமட்டும் இல்லாமல், எல்லா நாள்களிலும் சாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் வருகிறார்கள். இந்தக் கோயிலின் நுழைவாயிலில், பெரிய அளவிலான தேன்கூடு நீண்ட நாள்களாக உள்ளது. அதை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பக்தர்களை மிரட்டும் ராட்சதத் தேன்கூடு! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் பேசினோம். "இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. கோயிலுக்கு எதிரே  சமுதாயக் கூட மண்டபம் உள்ளது. இங்கு, முகூர்த்த நாள்களில்  நடைபெறும் திருமணத்துக்கு ஏகப்பட்ட கூட்டங்கள் கூடும். அப்போது, மேள தாளங்கள் முழங்கும். பட்டாசு வெடிப்பதாலும் மற்ற நிகழ்ச்சிகளாலும் தேன்கூடு கலைந்துவிடுவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. இதனால், வீட்டின் முன் குழந்தைகள் விளையாடுவதற்கே அச்சப்படுகிறார்கள். மக்கள் கூடும் பகுதியில் தேன்கூடு கலைந்துவிட்டால், தேனீக்கள் கடித்து விபரீதம் ஏற்படும்.  இதற்கு முன்னர், இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடந்திருக்கிறது. அதனால், தேன்கூட்டை எடுக்கச் சொல்லி பலமுறை அறநிலையத்துறையில் வலியுறுத்தியும் எந்தப் பயனும் இல்லை" எனப் புலம்புகிறார்கள்.

கோயில் வட்டாரத்தில் பேசியபோது, "அந்த இடத்தில் அடிக்கடி இதுபோல தேன்கூடு கட்டுகிறது. இதற்கு முன் இரண்டுமுறை இங்கு இருந்த தேன்கூட்டை தீயணைப்புத் துறையினர் வந்து எடுத்தனர். இப்போது போய் சொன்னால், எங்களால் முடியாது; நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அறநிலையத்துறை தரப்பிலோ, சீக்கிரமே கோயிலுக்கு பெயின்ட் அடிக்க இருக்கிறோம். அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனக் கையை விரிக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்" என்கின்றனர்.