Published:Updated:

`பெயருக்கான காரணத்தைச் சொல்லி வளர்ப்பேன்'‍ - 'மெரினா' தந்தையின் ஓராண்டு நிறைவு நெகிழ்ச்சி

ச.பவித்ரா
`பெயருக்கான காரணத்தைச் சொல்லி வளர்ப்பேன்'‍ - 'மெரினா' தந்தையின் ஓராண்டு நிறைவு நெகிழ்ச்சி
`பெயருக்கான காரணத்தைச் சொல்லி வளர்ப்பேன்'‍ - 'மெரினா' தந்தையின் ஓராண்டு நிறைவு நெகிழ்ச்சி

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு எழுச்சி ஒரு வருடத்தைத் தொட்டு இருக்கிறது. எழுதித் தீராத மெரினாவின் போராட்டத் திருவிழாவுக்கு இப்பொழுது வயது 1. அப்புரட்சியின் அடையாளத்தைச் சுமந்துகொண்டிருக்கும் இந்த மெரினாவுக்கும்தான். 

`பெயருக்கான காரணத்தைச் சொல்லி வளர்ப்பேன்'‍ - 'மெரினா' தந்தையின் ஓராண்டு நிறைவு நெகிழ்ச்சி

திருப்பூர், பெருமாநல்லூரின் அருகே கணக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து - சங்கீதா தம்பதி. அவர்களுக்கு 8 வயதில் பிரஜித் என்ற ஆண் குழந்தையும், ஒரு வயதில் மெரினா என்ற பெண் குழந்தையும் உள்ளது. மெரினாவின் பெயர்க்காரணத்தை அறிந்து கொள்ள குழந்தையின் தந்தை மாரிமுத்துவைச் சந்தித்துப் பேசினோம். 'மெரினா'... என நாம் கூறிய ஒற்றை வார்த்தையிலேயே நம்மைப் புரிந்துகொண்டு, "வாங்க வாங்க மெரினாவோட அப்பாதான் நான்" என உபசரித்து பேச்சைத் தொடர்கிறார். "ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுக்க தீவிரமடைந்திட்டு இருந்துச்சு. ஒரு தமிழனா என் இனத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கணும், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான விதை விழுந்த மெரினா போராட்டத்துல கலந்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.

`பெயருக்கான காரணத்தைச் சொல்லி வளர்ப்பேன்'‍ - 'மெரினா' தந்தையின் ஓராண்டு நிறைவு நெகிழ்ச்சி

அந்தச் சமயத்துல என் மனைவி ஹாஸ்பிட்டல்ல பிரசவத்தை எதிர்நோக்கியிருந்தாங்க. அதனால திருப்பூர் பெருமாநல்லூரில் போராட்டத்துல கலந்துக்கிட்டேன். இருந்தாலும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைச்சிட்டு இருந்த 'மெரினா'ங்குற பேரு என் மனசுல ஆழமா பதிஞ்சுட்டது. என் குழந்தைக்கு மெரினானு பெயர் வைக்கணும்னு ஆசை வேரூன்ற, என் மனைவியும் முழு மனதுடன் சம்மதிச்சாங்க. 2017 ஜனவரி 21,அன்றைக்கு நைட், 'எனக்கு பெண் குழந்தை பிறந்தா, 'மெரினா'னு பெயர் வைப்பேன்டா'னு என் ஃபேஸ்புக் பக்கத்துல பதிவிட்டேன். அதுக்கு அடுத்த நாள் காலையில 7.45 மணிக்கு எங்களுக்குப் பெண்குழந்தை பிறந்தது. அவளைக் கையில் ஏந்தும்போது என் கண் கலங்கிடுச்சு. கடவுள் கொடுத்த வரம்தான் என் மெரினா" என்றவரின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள்.

"அன்றைக்கு சாய்ந்தரமே 'அரசு உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது' என அதிகாரபூர்வ தகவல் வெளியாச்சு, 'மெரினா' உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று என பெயர மாத்தி மெரினானா ஒட்டுமொத்த தமிழனின் குரல்னு நிரூபிச்சது அந்தப் புரட்சி. யாரும்  சொல்லிக் கொடுத்துருந்தாகூட அத்தனை கட்டுப்பாடோட, அறவழியில இப்படி ஒரு போராட்டம் நடந்துருக்குமானு தெரியாது. தோழமை, கட்டுப்பாடு, சுயநலமின்மைன்னு மெரினா மண் கற்றுக்கொடுத்தது. இது அத்தனையும் என் மெரினா கத்துக்குவா. மழை, வெயில்னு பார்க்காம அத்தனை நாள் சிந்துன வியர்வையும், கடைசி நாள் போராட்டக் களத்துல சிந்துன ரத்தமுமாய் அந்த மண்ணுல பதிஞ்சுபோன `வெற்றியின் அடையாளம் நீ'ன்னு என் குழந்தைக்கு அவளோட பெயருக்கான காரணத்தைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பேன். "என் மனைவி வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி, வாழ்க்கையில ஒரு முறையாச்சும் அவ பொண்ண 'மெரினா'னு கூப்பிடணும்னு அவளுக்கு ரொம்ப ஆசை" என்றவரின் தோளில் அழுத்தமாய்த் தவழ்கிறாள் மெரினா.