Published:Updated:

அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 வருட சிறைத்தண்டனை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை 

கார்த்திக் துரைமகாராஜன்.சி
தினேஷ் ராமையா
அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 வருட சிறைத்தண்டனை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை 
அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 வருட சிறைத்தண்டனை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை 

அனுமதியில்லாமல் விளம்பரப் பலகை, டிஜிட்டல் பேனர்கள் போன்றவற்றை வைத்தால் 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள் வைத்தால் 3 வருட சிறைத்தண்டனை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரை அனுமதியில்லாமல் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மேற்கொள்ளும் தனிநபர்கள் அல்லது தனியார் விளம்பர நிறுவனங்கள்மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் விதி எண், 326-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் விளம்பரப்படுத்தியது தெரியவந்தால், காவல்நிலையத்தில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து அதன் பொருட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது விளம்பரப் பலகைக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டனைத் தொகையாக அல்லது இரண்டும் சேர்த்தோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டட உரிமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான கட்டடத்தில் விளம்பரப் பலகைகள் அமைத்து விளம்பரம் மேற்கொள்ள அனுமதிக்கும்பட்சத்தில், அவ்விளம்பர நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்கக் கட்டடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கட்டடத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.