Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

`இதுவரைக்கும் இப்படி ஒரு ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததே இல்லை' எனச் சிலிர்க்கிறார் பாலிவுட் இயக்குநர் ஓமங் குமார். பாகிஸ்தான் சிறையில் வாடும் கைதியான சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையை `சரப்ஜித்’ என்ற பெயரில் படமாக எடுக்கின்றனர். அதில் சரப்ஜித் சிங்கின் தங்கையாக நடிப்பது ஐஸ்வர்யா ராய். இதற்காக, சரப்ஜித்தின் தங்கையிடம் போனில் பேசினாராம் ஐஸ்வர்யா. அதன் பின்னரே, `இந்தப் படத்துக்கு மேக்கப் இல்லாமல் இருந்தால்தான் நன்றாக இருக்கும்' எனச் சொல்லி திகைக்கவைத்த ஐஸ், மேக்கப் இல்லாமலேயே முழு படத்திலும் நடித்திருக்கிறார். அன்டார்ட்டிக்காவுக்கு எதுக்கு ஐஸ் வாட்டர்... ஐஸுக்கு எதுக்கு மேக்கப்?

இன்பாக்ஸ்

‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்தப் படம் ‘டன்கிர்க்’. இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸின் ‘டன்கிர்க்’ துறைமுகத்தில் நடந்த சண்டைதான் படத்தின் கதைக் களம். நோலனுக்கு இந்தக் களம் புதுசு. ஆனால், கனவை வைத்தே கல்லா கட்டியவராயிற்றே... போர் பற்றிய படம் என்றால் விடுவாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. மூன்றாம் உலகப்போர்!

இன்பாக்ஸ்

2015-ம் ஆண்டின் ஹிட் சேட்டன், நிவின் பாலி. ஹீரோவாக ‘வடக்கன் செல்ஃபி’, வில்லனாக ‘இவிடே’, லவ்வர் பாயாக ‘பிரேமம்' என நிவின் பாலியின் அத்தனை அவதாரங்களும் பாக்ஸ் ஆபீஸில் செம கலெக்‌ஷன். 2016-ம் ஆண்டில், அதிரடி போலீஸ் கெட்அப்பில் வந்து நிற்கிறார் நிவின். ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ படத்தில் நிவின், கரடுமுரடு போலீஸ். படத்தின் தயாரிப்பாளர் அவரே. நிவின் ராக்ஸ்!

இன்பாக்ஸ்

`கில்லி' படத்தில் செமி ஃபைனலில் தோற்கும் விஜய் டீம், ஃபைனல் போகும் இல்லையா? அதுபோல ஹாலிவுட்டில் எந்தப் படம் வந்தாலும், எந்தக் காட்சியில் என்ன தவறு, காஸ்ட்யூம், கன்டினியூட்டியில் என்னென்ன தவறுகள் என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரபலமான இணையதளம் moviemistakes.com வெளியிட்டுள்ள பட்டியலில், 2015-ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அதிகத் தவறு செய்தது `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்-7'. மொத்தம் 41 தவறுகள். 33 தவறுகளோடு அடுத்த இடத்தில் இருப்பது `ஜூராசிக் வேர்ல்டு'. மூன்றாவதாக, 20 தவறுகள் செய்திருப்பது `தி மார்ஷியன்'. கோலிவுட் லிஸ்ட் எப்போ பாஸ் வெளிவரும்?

ஷூட்டிங், பட ரிலீஸ், புரொமோஷன்... என பிஸியாக இருந்த மகேஷ் பாபு, சினிமாவுக்கு சடன் பிரேக் போட்டு குடும்பத்துடன் ஒரு ஜாலி ட்ரிப் முடித்திருக்கிறார். சம்மர் வெக்கேஷனுக்குப் பதிலாக மகேஷ் பாபு அடித்தது ஸ்னோ வெக்கேஷன். மனைவி நம்ரதா, மகன் கௌதம் மற்றும் மகள் சித்ராவுடன் பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி, ஸ்னோ ஷாப்பிங்... என ஜிலீர் ஜாலி ஆட்டம் முடித்து, மீண்டும் ஆக்‌ஷனுக்கு வந்துவிட்டார் ஆந்திரா சூப்பர்ஸ்டார்! குடும்பத் தலைவன்!

இன்பாக்ஸ்

லேட்டஸ்ட் ட்ரெண்டில் இளசுகளின் பல்ஸ் பிடித்துப் பார்த்த ‘ஓ காதல் கண்மணி’, இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. கரண்ஜோகர் தயாரிக்க, ஆதித்யா ராய் கபூர், ஷ்ரதா கபூர் நடிக்கிறார்கள். ஏற்கெனவே மணிரத்னத்தின் `அலைபாயுதே' படத்தை இந்திக்குக் கொண்டுசென்ற ஷாஹித் அலிதான் இதையும் இயக்குகிறார்.  டி.கே கண்மணி!

இன்பாக்ஸ்

சானியா மிர்ஸாவுக்கு 2015-ம் ஆண்டைவிட சிறந்த ஆண்டு வாழ்க்கையில் இருக்கவே முடியாது. சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து, விம்பிள்டன் உள்பட 10 சர்வதேசப் பட்டங்களை வென்று, மகளிர் இரட்டையர் டென்னிஸில் ‘பட்டத்து' ராணியாகிவிட்டார். இப்போது இவர்கள் இருவரையும் 2015-ம் ஆண்டின் மகளிர் இரட்டையர் பிரிவின் உலக சாம்பியன்களாக அறிவித்திருக்கிறது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு. வருடத்தின் சிறந்த வீரர்களுக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை, ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சுக்கும், பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸுக்கும் கிடைத்திருக்கிறது. வாடி ராசாத்தி!

இன்பாக்ஸ்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்ட நீதிமன்றத்தில் டீக்கடை வைத்திருப்பவர் சுரிந்தர் குமார். நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் ஓடி ஓடி டீ கொடுப்பதுதான் அவர் வேலை. இப்போது சுரிந்தரின் 23 வயது மகள் ஸ்ருதி, அதே நீதிமன்றத்தில் நீதிபதி. முதல் முயற்சியிலேயே பஞ்சாப் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை பாஸ்செய்த ஸ்ருதி, ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு, தீர்ப்பு எழுதத் தயார். `இனி... மகளுக்கு டீ கொண்டுபோவாரா அப்பா?' எனக் காத்திருக்கிறது நீதிமன்றம்! ஜட்ஜம்மாவுக்கு ஒரு ஸ்பெஷல் டீ!

88-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. நாமினேஷன் பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஆஸ்கர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களின் பட்டியலை வைத்து `இதுதான் ஃபைனல் லிஸ்ட்டுக்கு வரும்’ என ஆளாளுக்கு ஒரு பட்டியல் தயார்செய்கிறார்கள். அதில், ‘தி வாக்’, ‘மேட் மேக்ஸ்’, ‘இன்சைட் அவுட்’ எனப் பல படங்கள் உண்டு. ஆனால், ஆஸ்கரின் அதிகாரபூர்வ இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 14-ம் தேதிதான் ரிலீஸ். வி ஆர் வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

வயதில் அரை சதம் அடித்துவிட்டார் சல்மான் கான். சென்ற வாரம் சல்லு பாயின் 50-வது பிறந்த நாள் பார்ட்டியால் அவரது பண்ணை வீடே அதிர்ந்தது. அரை கி.மீ தூரத்துக்கு முன்பே செக்யூரிட்டி டைட் செய்யப்பட, வரிசையாக பாலிவுட் ஹாட்டீஸ் வந்து இறங்கினார்கள். நடிகைகளில் தீபிகா படுகோன் மட்டும் மிஸ்ஸிங். விடுவாரா சல்மான்? ஹாலிவுட் நடிகர் வின் டீசல் படத்தில் நடிக்கவிருக்கும் தீபிகா, அவருடன் எடுத்த செல்ஃபியை நெட்டில் போட்டிருந்தார். அதை கிண்டல்செய்வதுபோல, வின் டீசலாக சல்மான் திரும்பி நிற்க, சானியாவும் ஜெனிலியாவும் சிரித்தபடி அதே போல போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் இறக்கி கலாய்த்திருக்கிறார்கள். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சல்லு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்