வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:27 (08/02/2018)

இந்த 7 ஸ்பெஷல் ரெசிப்பிக்கள் உங்களுக்குத் தெரியுமா? (Sponsored Content)

சன்னா கிரிஸ்பி சில்லி ஃபிரை (பாட்டி மசாலா ரெசிப்பி)

தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை- ஒரு கப், பாட்டி மசாலா சாம்பார் பொடி- ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவைக்கு, பாட்டி மசாலா மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன், சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு- தலா ஒரு டேபிள்ஸ்பூன், பாட்டி குழம்பு மிளகாய் மசாலா- ஒரு டீஸ்பூன்,  தோல் நீக்கி சின்ன வெங்காயம் அரைத்தவிழுது – கால் கப், எலுமிச்சை சாறு – அரை மூடி

செய்முறை ; கொண்டை கடலையை நீரில் ஆறு-எட்டு மணி நேரம் நீரில்
ஊற விட்டு குக்கரில் உப்பு சிறிது சேர்த்து வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மாவுகளை கொட்டி அதில் உப்பு, பாட்டி மசாலா சாம்பார்பொடி, மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காய விழுது போட்டு பிசறவும். இதில் வெந்த கொண்டை கடலையை போட்டு கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். பிறகு சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த சூட்டுடன் குழம்பு மிளகாய்த்தூள் தூவி, மல்லிதழை தூவி பரிமாறினால், பாட்டியின் கை மணத்தில், கார சாரமான சுவையான சன்னா கிரிஸ்பி சில்லி சாட் ஃபிரை ரெடி.  

 

ஆள்வள்ளிக்கிழங்கு மசால் தோசை

தேவையான பொருட்கள்:-இட்லி அரிசி- இரண்டு கப், ஆள்வள்ளிக் கிழங்கு துருவல்-(தோல்சீவியது)- ஒரு கப், அவல்- அரை கப், உப்பு,எண்ணெய்/நெய் - தேவைக்கு, பாட்டி மசாலா சீரகத் தூள்- ஒரு டீஸ்பூன், பாட்டி மசாலா இட்லி மிளகாய் பொடி- இரு டீஸ்பூன், பாட்டி மசாலா கரம் மசாலாத் தூள் –  ஒரு டீஸ்பூன், தக்காளி- பொடியாக அறிந்தது- ஒரு கப், பெரிய வெங்காயம் பொடியாக அறிந்தது- ஒரு கப்., தேங்காய் துருவல்- அரை கப். வெந்தயம் – ஒரு டீஸ்பூன், முழு உளுந்து- இரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசி, வெந்தயம், உளுந்து  சேர்த்து நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.  அவலை நன்றாக அலசி பத்து நிமிடம் நீரில் ஊற வைக்கவும். ஊறின அரிசி, அவல்  இதனுடன் தேங்காய் துருவல், ஆள்வள்ளிக்கிழங்கு துருவல் உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இதில் கரம்மசாலா சேர்த்து கலக்கிக் கொள்ளவும். தோசை கல்லை சூடாக்கி மாவை தோசையாக வார்க்கவும், அடுப்பின்  தணலை குறைக்கவும். இட்லி மிளகாய் பொடி பரவலாக வார்த்த தோசை மீது தூவவும், அறிந்த தக்காளி, வெங்காயம் துவவும்.  மசால் தோசை மீது சீரகத் தூள் தூவவும். தோசை சுற்றி நெய் அல்லது எண்ணெய் விடவும். வெந்ததும் மடித்து பறிமாறவும்.

இந்த அளவில் 10- 15  தோசைகள் வார்க்கலாம்.

நியூட்ரீஷயஸ் ரசம்

தேவையான பொருட்கள்;

துவரம்பருப்பு-கொள்ளு-பச்சை பயறு- சேர்ந்து கால் கப்,  பாட்டி மசாலா ரசப்பொடி – ஒரு டீஸ்ஸ்பூன்,  மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை, மல்லித்தழை, கறிவேப்பிலை- சிறிது, உப்பு, எண்ணெய்- தேவைக்கு, புளி- நெல்லிகாய் அளவு, தக்காளி- ஒன்று., பூண்டுபல்- இரண்டு, பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை, கடுகு- அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று. நெய்- ஒரு டீஸ்பூன்.

செய்முறை;- பருப்பு/தானியங்களை அலசி நான்கு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். குக்கரில் ஊறின பருப்புகளுடன் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வேக விட்டு மசித்துக்கொள்ளவும். புளியை கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, மிளகாய் தாளித்து, பூண்டு தட்டிப் போட்டு புளித்தண்ணி விட்டு, மசித்த பருப்பு கலவை ஊற்றி பாட்டி மசாலாவின் ‘கமகம’ ரசப்பொடி போட்டு, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி நெய் விட்டு  இறக்கி வைத்து மூடவும். தேவையான போது பரிமாறவும்.

வாழைக்காய் மிளகு கறி

தேவையானவை: வாழைக்காய் - 2 (தோல் சீவி சதுர துண்டுகளாக்கவும்),  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், பாட்டி மசாலா மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் கப், வறுத்த வேர்கடலைப்பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 
செய்முறை:  வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை  தாளிக்கவும். அதனுடன் வாழைக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பாட்டி மசாலா மிளகுத்தூள், தேங்காய்த் துருவல், வேர்கடலைப் பொடி சேர்த்துப் புரட்டி சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறி வேகவிடவும். காய் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும் முன்  ஓமப்பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

இது, வைட்டமின் ஈ, கொழுப்புசத்து நிறைந்தது.
 
கோவைக்காய் வறுவல்

தேவையானவை: மெல்லிய வில்லைகளாக நறுக்கிய கோவைக்காய் - ஒரு கப், பாட்டி மசாலா மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கோவைக்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். (அதிகப்படியான எண்ணெயை வடியவிடவும்). அதனுடன் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டவும்.  மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி, கோவைக்காய் வறுவலுடன் சேர்த்துப் புரட்டிப் பரிமாறவும்.
 
கத்திரிக்காய் துவையல்

தேவையானவை: கத்தரிக்காய்  150 கிராம் (நறுக்கவும்),  பாட்டி மசாலா தனியா (மல்லித்தூள் )  -  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பாட்டி மசாலா மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  தக்காளி, வெங்காயம் -  தலா 2 (பொடியாக நறுக்கவும்), புளி -நெல்லிக்காயளவு, தோல் சீவிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,  வறுத்த முழு உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கட்டு (அலசி ஆய்ந்துகொள்ளவும்), பூண்டு - 4 பல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

 

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயம், தக்காளி, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு, தனியா, இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறவும் (எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம்). பிறகு கொத்தமல்லித்தழை, புளி சேர்த்துப் புரட்டி இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து  துவையலுடன் கலக்கவும்.


இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.
 
புடலங்காய் பச்சடி

தேவையானவை: புடலங்காய் துருவல் - அரை கப், கெட்டித் தயிர் - ஒரு கப் (கடைந்துகொள்ளவும்), கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பாட்டி மசாலா மல்லித்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் - ஒன்று, அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். கெட்டித் தயிரை கடைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து தயிரில் சேர்க்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலந்து, துருவிய புடலங்காயை நீரை வடித்து பிழிந்து போட்டுக் கலக்கவும். கொத்தமல்லித்தழை, பாட்டி மசாலா மல்லித்தூள்  தூவிப் பரிமாறவும். புடலையில் இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன.

www.paatimasala.com Paati Masala Trade Enquiry : 9551412255

செஃப்- சுதா செல்வகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க