119 நாடுகளில் பத்மாவத் பற்றி என்னவெல்லாம் தேடினார்கள்? #GoogleTrends

2016ம் ஆண்டில் துவங்கப்பட்ட பத்மாவதி திரைப்படம் பல போராட்டங்கள் சர்ச்சைகளுக்கு பிறகு பத்மாவத் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.  சர்ச்சைகள் இந்தப் படம் பற்றிய அப்டேட்டுகளை வைரல் மோடில் வைத்திருந்தன. படப்பிடிப்புத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டது. தீபிகா படுகோன் உயிருக்கு விலை பேசியது என பிரச்னைகள் எல்லை மீறின. பல சமரசங்களோடு வெளிவந்துள்ள பத்மாவத் திரைப்படம் இணையத்தில் ஆல் டைம் வரைலாக இருந்தது. கூகுள் தேடலில் பத்மாவத் குறித்த தேடல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. 

பத்மாவத் குறித்த கூகுள் தேடல் விவரங்கள்:

1. பத்மாவத் படத்தை உலக நாடுகளில் 119 நாடுகள் தேடியுள்ளன. இந்தியா, நேபாள், யூஏஇ ஆகியவை டாப் மூன்று இடங்களை பிடித்துள்ளன. 

 

2. உலக அளவிலான பத்மாவத் குறித்த தேடலின் போது கலவரம் மற்றும் போராட்டம் ஆகிய இரண்டு வார்த்தைகளும் அதிகமாக தேடப்பட்டுள்ளன. மாலிக் முகமது ஜெயாஷி எழுதிய பத்மாவத் புத்தகமும் அதிகம் தேடப்பட்டுள்ளது. 

 

3. பத்மாவத் குறித்த இந்திய தேடலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மெர்சல் படமும் இதே அளவில் தேடப்பட்டது. பத்மாவத் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக,ம் தேடப்பட்டுள்ளது.


4. பத்மாவத் குறித்த இந்திய தேடலின் போது கலவரம், போராட்டம், மாலிக் கபூர், அலாவுதின் கில்ஜி, திரை விமர்சனம் ஆகிய வார்த்தைகளும் தேடப்பட்டுள்ளன. 

 

5. பத்மாவத் படம் குறித்த கூகுள் இமேஜ் தேடலில் தீபிகா, ரன்வீர், ஷாஹித் கபூரை தாண்டி அதிதி ராவ் படத்தையும் அதிகமாக தேடியுள்ளனர். விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்தும் இமேஜ் தேடலில் தேடியுள்ளனர். 

 

6. பத்மாவத் படத்தில் அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்வீர் சிங் ஆடும் கஹ்லிபலி பாடல் தான் நெட்டிசன்களில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீடியோவாக உள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!