Published:Updated:

கடை ஊழியரைப் பதறவைத்த சிலிண்டர்! உடைத்தபோது நடந்த விபரீதம்

VIJAYAKUMAR M
கடை ஊழியரைப் பதறவைத்த சிலிண்டர்! உடைத்தபோது நடந்த விபரீதம்
கடை ஊழியரைப் பதறவைத்த சிலிண்டர்! உடைத்தபோது நடந்த விபரீதம்
கடை ஊழியரைப் பதறவைத்த சிலிண்டர்! உடைத்தபோது நடந்த விபரீதம்

மருத்துவமனையில் இருந்து வாங்கி வரப்பட்ட காலாவதியான சிலிண்டரை உடைத்தபோது அதில் இருந்த கேஸ் வெளியானதோடு, சிலிண்டர் 30 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதால் அந்த இடம் பரபரப்புடன் காணப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்த மாதையன் என்பவர் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட காலாவதியான ஐந்து சிலிண்டர்களை வாங்கியுள்ளார். அங்குள்ள ரத்னசாமி தெருவில் உள்ள வெல்டிங் கடைக்கு இன்று காலை சென்ற மாதையன், அதை உடைத்துத் தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, கடை ஊழியர் மாதேஷ், சிலிண்டர்களை உடைக்க முயன்றார். அப்போது, சிலிண்டர் ஒன்றை உடைத்தார். அதில் இருந்த கேஸ் வெளியாகி அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது பாய்ந்து சிலிண்டர் பறந்தது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறினர். சிலிண்டரால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.