Published:Updated:

பேசிக்கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார்! வாகன ஓட்டியைக் கலங்கடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

பேசிக்கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார்! வாகன ஓட்டியைக் கலங்கடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
News
பேசிக்கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார்! வாகன ஓட்டியைக் கலங்கடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

பேசிக்கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார்! வாகன ஓட்டியைக் கலங்கடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

திருவள்ளூரில் வாகன சோதனைக்கு வந்தவரை பெண் உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேசிக்கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார்! வாகன ஓட்டியைக் கலங்கடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

திருவள்ளூர் சுங்கச்சாவடி பகுதி வழியாக பாஸ்கர் என்பவர் சென்றுள்ளார். அப்போது தனது வாகனம் தொடர்பான ஆவணங்களை அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் பாஸ்கர் காண்பித்துள்ளார். இதையடுத்து, ஆவணங்கள் தொடர்பாக இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர், பாஸ்கரை கன்னத்தில் அறைந்துள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எதற்காக அடிக்கிறீர்கள் என பாஸ்கர் கேள்வி எழுப்புவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்தப் பெண் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தினார். இதனால் இருவருக்கும் மோதல் முற்றியது. இந்தக் காட்சிகளை அருகிலிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது வைரலாகப் பரவி வருகிறது. வாகன சோதனைக்கு வந்தவரை தாக்கிய அந்தப் பெண் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.