பிரஷ் பேக், ஃபிரிஞ், க்ரூ கேட், ஷார்ட் கட் - ஆண்களின் ஃபேஸ்கட்டுக்கு ஏற்ற ஹேர்கட்! | From Oval to Triangle - Face shapes and Hairstyles

வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (30/01/2018)

கடைசி தொடர்பு:20:03 (30/01/2018)

பிரஷ் பேக், ஃபிரிஞ், க்ரூ கேட், ஷார்ட் கட் - ஆண்களின் ஃபேஸ்கட்டுக்கு ஏற்ற ஹேர்கட்!

வீட்டு வாடகை, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது, லோன் தொகை செலுத்துவது போன்று மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்துகொண்டிருக்கின்றன. இதில் அனைவரையும் பார்த்ததும் ஈர்ப்பது ஹேர்ஸ்டைல். வட்டம், நீள்வட்டம், ஓவல், டைமண்ட், சதுரம், முக்கோணம், ஹார்ட் என ஆண்களின் முகவடிவத்திற்கு ஏற்ப  ஹேர்கட் செய்தால், ஸ்டைலிஷ் லுக் நிச்சயம்.

ஹேர்கட்


ஓவல் முகம்:
முகத்தின் நீளம், சீக் போன்ஸ் (Cheek Bones) அதாவது கன்னத்தின் எலும்புகளை விட பெரிதாகவும், நெற்றி, தாடையை விட பெரிதாகவும் இருக்கும் முக அமைப்பு ஓவல் முகம். இவர்களின் தாடைப் பகுதி கூர்மையாக இல்லாமல் சிறிது மழுங்கியிருக்கும். இவர்களுக்கு எல்லாவித ஹேர்ஸ்டைலும் எடுப்பாக இருக்கும். கிளாசிக் ஷார்ட் ஹேர்கட், ப்ரஷ் பேக் (Brush Back), கோம்ப் ஓவர் அண்டர் கட் (Comb Over Under Cut), Taper Fade with Quiff போன்ற ஹேர்கட் ஓவல் முகவடிவத்திற்கு ஏற்றது. முன்புற ஃபிரிஞ் (Fringe) வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நெற்றியை மறைத்து முகநீளத்தை குறைத்து தட்டையாகக் காண்பிக்கும் மாயையை உருவாக்கும். தாடி வைப்பதை விட க்ளீன் ஷேவ் செய்துகொள்ளலாம்.

Oval face


வட்ட முகம்:
நெற்றியின் நீளமும் கன்னத்தின் எலும்புகளின் நீளமும் ஒரே அளவைக்கொண்டிருக்கும் வடிவம் வட்ட முகம். இவர்கள் மிகவும் தட்டையான தாடையைப் பெற்றிருப்பதால், நீளமான முக அமைப்பைப் பெற பின்வரும் ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றலாம். சைடு வகுடு எடுத்து சீவுதல், ஸ்பைக்ஸ், நெற்றியிலிருந்து வாரிவிடப்பட்ட ஹய் ஸ்கின் ஃபேட் (High Skin Fade), ஸ்லிக் பேக் பால்டு ஃபேட் (Slick Back Bald Fade), ஃபிரிஞ் போன்ற ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீளமான முக அமைப்பைப் பெற்றிருக்கும் மாயையை உருவாக்கலாம். சதுர வடிவத்தில் தாடியைத் திருத்துவதன் மூலம் மெலிதான கன்னங்களுக்குத் தடித்த வடிவத்தைக் கொடுக்கலாம்.

Round Face


செவ்வகம் அல்லது நீள்வட்ட முகம் :
முகத்தின் அகலம் மிகவும் குறுகியும், நீளம் அதிகமாக நீண்டும் காணப்படும் வடிவம் நீள்வட்ட முக அமைப்பு. இவர்களின் ஹேர்ஸ்டைல், முகத்தின் அதிகப்படியான நீளத்தைக் குறைக்கும் விதமாக இருக்க வேண்டும். ஷார்ட் ஹேர்கட் இவர்களுக்கான சரியான சாய்ஸ். சைடு வகுடெடுத்த ஸ்டைல், சைடு க்ரூ கட், ப்ரஷ் அப், ஷார்ட் ஸ்பைகி ஹேர்கட் போன்றவை நீளமான முகத்தை சிறிதுபடுத்தும். இவர்களுக்கு அடர்ந்த தாடி மிகப்பெரிய மைனஸ். அது மேலும் முகத்தின் நீளத்தைக் அதிகப்படுத்திக் காட்டும். எனவே க்ளீன் ஷேவ் அல்லது குறுந்தாடி வைத்துக்கொள்ளலாம்.

Oblong Face


டைமண்ட் முகம்:
முகத்தின் நீளம் அதிகமாகவும், கன்னத்தின் எலும்புகள் நீண்டும், குறுகிய நெற்றியும், அதை விட குறுகிய தாடையும் கொண்டிருக்கும் வடிவம் டைமண்ட் முக அமைப்பு. இது மிகவும் அரிதான முக அமைப்பு. இவர்களின் முகவாய் மிகவும் கூர்மையாக இருக்கும். ஸ்பைக்ஸ் இவர்களுக்கான ஹேர்ஸ்டைல். Faux Hawk , கிராப், High Fade Fringe , நீளமான முடியைக் காதுகளுக்குப் பின்னால் கட்டுவது, டீப் சைடு பார்ட் போன்ற ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றுவதன் மூலம் சரியான அளவு விகிதம் கொண்ட முக அமைப்பைப் பெறலாம். அடர்த்தியான தாடி கூடுதல் மெருகேற்றும். ஷார்ட் சைடு பார்ட் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Diamond Face


சதுர முகம்:
முகத்தின் நீளம், அகலம், கன்னங்களின் எலும்பு என அனைத்து அளவுகளும் ஒருவகைப்பட்டதுபோல் இருக்கும் முக அமைப்பு சதுர முகம். இவர்களின் தாடைப்பகுதி சிறிது கூர்மையாக இருக்கும். ஆணுக்குரிய அனைத்து முக பாவனைகளையும் பெற்றிருக்கும் சதுர முகத்திற்கு ஷார்ட் ஹேர்கட், கோம்ப் ஓவர், Buzz கட், க்ரூ கட், High Fade with Quiff ஆகிய ஹேர்ஸ்டைல் ஏற்றது. ஷார்ட் முதல் லாங் ஹேர்கட் வரை எல்லா விதமான நீளங்களிலும் பல ஹேர்ஸ்டைல்களைச் செய்துகொள்ளலாம். அடர்த்தியான தாடி இல்லாமல் மிதமான தாடி சதுர முக அமைப்பை மெருகேற்றும்.

Square Face


ஹார்ட் வடிவ முகம்:
அகலமான நெற்றி சீராகக் குறைந்து கூரான தாடையைக் கொண்டிருக்கும் முக அமைப்பு ஹார்ட் வடிவ முகம். இது அரிதிலும் அரிதான முக அமைப்பு. தலையின் மத்தியில் வகுடெடுத்து படியும் ஹேர்ஸ்டைல் இவர்களுக்கு உகந்தது.  நீளமான அல்லது நடுத்தர அளவு ஹேர்ஸ்டைல் கட்சிதமாகப் பொருந்தும். அடர்த்தியான தாடி இவர்களின் குறுகிய தாடைக்குத் தடித்த அமைப்பைப் பெற்றிருப்பதைப்போல் மாயை உருவாக்கும். எனவே அடர்த்தியான தாடி பெஸ்ட் சாய்ஸ்.

Heart Face


முக்கோண முகம்:
மிகவும் கூர்மையான தாடைப்பகுதி உடையவர்கள் முக்கோண முக அமைப்பிற்கு சொந்தக்காரர்கள். கன்னங்களின் எலும்புகளை விட தாடை நீண்டிருக்கும். இவர்கள் ஹார்ட் வடிவ முக அமைப்பிற்கு எதிர்மறையானவர்கள். அடர்த்தியான ஹேர்ஸ்டைல் இவர்களுக்குச் சிறந்த தேர்வு.

Triangle Face

Textured Quiff , கோம்ப் ஓவர், க்ரூ கட், அங்குலார் ஃபிரிஞ் போன்ற ஹேர்ஸ்டைல் முக்கோண முக வடிவத்திற்கு மிகக் கட்சிதமாகப் பொருந்தும். அடர்த்தியான தாடி வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. க்ளீன் ஷேவ் சரியான சாய்ஸ்.


டிரெண்டிங் @ விகடன்