Published:Updated:

சிமெண்ட் ஆலையின் எரிப்பொருளாக பிளாஸ்டிக் கழிவுகள்..! அதிர்ச்சி கிளப்பும் கும்பகோணம் நகராட்சி ஒப்பந்தம்

கு. ராமகிருஷ்ணன்
சிமெண்ட் ஆலையின் எரிப்பொருளாக பிளாஸ்டிக் கழிவுகள்..! அதிர்ச்சி கிளப்பும் கும்பகோணம் நகராட்சி ஒப்பந்தம்
சிமெண்ட் ஆலையின் எரிப்பொருளாக பிளாஸ்டிக் கழிவுகள்..! அதிர்ச்சி கிளப்பும் கும்பகோணம் நகராட்சி ஒப்பந்தம்

கும்பகோணம் நகராட்சியின் மக்காத குப்பைகளான செருப்பு, டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஆகியவைகளை அரியலூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.. இதன்மூலம் சிமெண்ட் ஆலைகள் பிளாஸ்டிக், செருப்பு உள்ளிட்டவைகளை எரிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கும்பகோணம் நகராட்சி தினமும் 2 டன் மக்காத குப்பைகளை சேகரிக்கிறது.  

இவைகள் மறுசுழற்சிக்காக, பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு மூலப்பொருளாக வழங்கப்பட்டுவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது அரியலூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் சூளையில் எரிக்க தினமும் 2 டன் மக்காத குப்பைகளை இலவசமாக வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கும்பகோணம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி ‘சிமெண்ட் ஆலைக்கு மக்காத குப்பைகள் வழங்குவதன் மூலமாக சுற்றுச்சூழல் சுகாதாரமாக பராமரிக்கப்படும். அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு இவைகள் அனுப்புவதன் மூலம், கும்பகோணத்தில் இவை எரிப்பதும் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இவரது விளக்கம் குழப்பங்களையும் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை கும்பகோணம் நகராட்சியின் மக்காத குப்பைகள் எரிக்கப்பட்டதா ? பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டதா ? இதில் எது உண்மை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மறுசுழற்சிக்கு மூலப்பொருளாக வழங்கப்பட்டு வந்திருந்ததால் இனியும் அந்த நடைமுறையையே தொடர்ந்திருக்கலாமே. செருப்பு, பிளாஸ்டிக் போன்றவைகளை எரிப்பொருளாக பயன்படுத்தினால், வேதி வினைகள் நிகழ்ந்து, சுற்றுப்புறச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் கலந்து, ஆபத்தான விளைவுகள் ஏற்படும். இதுபோன்ற காற்றினை சுவாசித்தால் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு உருவாகும். அரியலூர் சிமெண்ட் ஆலையின் எரிப்பொருள் செலவை மிச்சப்படுத்த, அவர்களது சுயலாபத்திற்கு அரியலூர் மக்களை பலிகடா ஆக்குவதா ! இத்தனை நாள்களாக சிமெண்ட் ஆலைகள் எரிப்பொருளாக பிளாஸ்டிக், செருப்பு உள்ளிட்டவைகளைதான் எரித்து வந்ததா என பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.