"வாடிக்கையாளர்களே விளம்பரதாரர்கள்!" - சுந்தர் டயர்ஸ் சொல்லும் சுவாரசியம்!  (Sponsored Content) | How Sundar tyres leverage on customer word of mouth (Sponsored Content)

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (31/01/2018)

கடைசி தொடர்பு:18:47 (31/01/2018)

"வாடிக்கையாளர்களே விளம்பரதாரர்கள்!" - சுந்தர் டயர்ஸ் சொல்லும் சுவாரசியம்!  (Sponsored Content)

மதுரை, சிவகாசி, காரைக்குடி, தேனி, சென்னை... தமிழகத்தின் ஊர்ப் பெயரைச் சொல்லவில்லை, இங்கெல்லாம் இவர்களுக்கு கிளைகள் உள்ளது! இன்று 14 கிளைகளுடன் அமோகமாக செயல்பட்டுவருகிறது"சுந்தர் டயர்ஸ் நிறுவனம்". "15ஆவது கிளையை சென்னை தி(யாகராய) நகரில் வரும் மாதத்தில் துவங்க இருக்கிறோம்", என உற்சாகமாய்க் கூறிய சுந்தர் டயர்ஸின் உரிமையாளர் திரு கே.எஸ்.பி. சுந்தரவேல்அவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்; டயர் தொழில் பற்றி பலத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

டயர் தொழிலில் ஈட்டுபட எப்படி எண்ணம் வந்தது?

பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே எனக்குத் தானியங்கி வாகனங்கள் மீதொரு ஈர்ப்பு. கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, எனக்குப் பிடித்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட துறையிலேயே வேலை செய்யவேண்டுமென முடிவு செய்தேன். முதலில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு வீல் அலைன்மென்ட் எனும் சக்கரங்களை சீர்படுத்திக் கொடுக்கும் சேவையைத் துவங்கினேன். வாகனங்களை சுத்திகரிக்கும் வாட்டர் சர்வீஸ் துறையில் என் குடும்பத்தினர் ஏற்கனவே ஈடுபட்டிருந்தது, நான் தொழில் துவங்குவதற்கு உதவியாக இருந்தது. வீல் அலைன்மெண்ட்டோடு நிற்காமல், டயர் தொழிலில் ஈடுபட எண்ணினேன்; 2002 ஆம் ஜனவரி மாதம் துவங்கப்பட்டது சுந்தர் டயர்ஸ்!

சுந்தர் டயர்ஸ் எவ்வாறு பிற டயர் விற்பனை செய்யும் கடைகளிலிருந்து மாறுபட்டு இயங்குகிறது?

டயர் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிற கடைகளை ஒப்பிடும்போது, சுந்தர் டயர்ஸ் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உலகளாவிய சந்தையில் வரும் புதுமைகளை கவனிப்பதும், அதில் நம்மூருக்கு ஏற்ற விஷயங்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவதும்தான் நம் சிறப்பம்சம் என எண்ணுகிறேன். உதாரணமாக, டயர்களுள்  நைட்ரஜன் வாயு செலுத்துவதை சுந்தர் டயர்ஸ் அறிமுகப்படுத்தும்போது நல்ல வரவேற்பு கிடைத்தது. சாதாரண காற்றை விட நைட்ரஜன் பயன்படுத்துவதால் நீண்ட நேரம் காற்று வெளியேறாமல் டயர்களில் தாக்குப்பிடிக்கும், வண்டியின் மைலேஜும் கூடும். வீல் அலைன்மெண்ட்டிற்காகவே அமெரிக்காவிலிருந்து சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்தோம். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்; இவர்களின் தகவல்தான் எங்களுக்கான விளம்பரமே!

சுந்தர் டயர்ஸுக்கு ஏன் இப்படி ஒரு மவுசு?

புன்னகையுடன் தொடங்கினார்: முன்  சிறந்த  தொழில்நுட்பம் பற்றி சொன்னது போலத்தான் இதுவும். தரமான பொருளையும், வாடிக்கையாளர் பெற நினைக்கும் சேவையையும் முறையாகக் கொடுத்தாலே போதும். மதுரை, சிவகாசி போன்ற ஊர்களில் நான் பார்த்தவரை, டயர் தொழிலில் ஈடுபடும் சிலர் தங்களிடம் வருபவர்களை ஒருமுறை வாடிக்கையாளர்களாகப் பார்ப்பதால், ஏதாவதொரு பொருளை அவர் தலையில் கட்டிவிடவேண்டும் என நினைக்கின்றனர், இது தவறு. நாம் தொழில் செய்வதே தேவைக்கருதி நம்மைத் தேடிவரும் வாடிக்கையாளர்களுக்காகத்தான். முதல்முறையே சிறப்பான சேவையை வழங்கிவிட்டால் பின் அவரே பலருக்கும் நம் வியாபாரத்தைப் பற்றிய தகவலை நல்லவிதமாக பரப்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு நபரை மீண்டும் மீண்டும் நம்மிடம் வரச் செய்யும் உத்தி இதுதான்.

நம் கடையின் மேலுமொரு சிறப்பம்சம், அனைத்து வகை நிறுவனங்களின் தயாரிப்புகளும் இங்கே ஒருங்கே கிடைக்கிறது. இதனால் கஸ்டமருக்கு தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகமாகிறது; வியாபாரி கைக்காட்டும் ஏதோவொரு தயாரிப்பை வாங்கவேண்டுமே எனத் தயங்கும் நிலை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருவதில்லை.  மேலும், நேரடியாக மொத்த வியாபாரம் செய்வதால் எங்களிடம் விலையும் ஞாயமாக இருப்பது கூடுதல் பலம்.

சுந்தர் டயர்ஸின் வருங்காலத் திட்டங்கள் என்ன?

விரிவாக்க நடவடிக்கைளுக்காக  "பிரான்ச்சைஸ்" முறையை அறிமுகப்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளோம். திறமையான இளைஞர்கள் பலர் இன்று தொழில் துவங்கி முன்னுக்கு வரவேண்டுமென்று நினைக்கின்றனர். இவர்களுக்கு உதவவும், இவர்களின் உதவியை நாங்கள் பெறவும்,  தகுதிவாய்ந்த இளைஞர்களோடும் இந்தத்துறையில் மேலுமொரு படி முன்னேற நினைக்கும் வியாபாரிகளோடும் சுந்தர் டயர்ஸ் கைக்கோக்கவுள்ளது. முதலீட்டுக்குத் தேவையான வங்கிக் கடனுதவிப் பெற்றுத்தருவது முதல், வேலையாட்கள் நியமனம், வியாபாரம் சார்ந்த நுணுக்கங்கள் மற்றும் முழுபயிற்சியையும் இவர்களுக்கு வழங்கவுள்ளோம். நாங்கள் இவர்களிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் தொழில் ஈடுபாடு மட்டுந்தான்!

கலப்பு உலோகம் எனப்படும் அதிக தரமுடைய 'அலாய் (Alloy)' வகை சக்கரங்களை சந்தைப்படுத்துவதில் தற்போது மும்முரமாகவுள்ளோம். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பிரிஸ்டன் டயர்கள் விற்பனையிலும் கவனம் செலுத்திவருகிறோம். இலகுரக வாகனங்கள் மட்டுமின்றி, லாரி சக்கர வியாபாரத்திலும் களமிறங்குவது எங்களின் அடுத்த இலக்காகும்.

'சரியான வாகனத்துக்கு சரியான டயர்!' இதுதான் சுந்தர் டயர்ஸின் வியாபாரக் குறிக்கோள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க