ப்ளூடூத் வசதியுடன் டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் அறிமுகம்..! | TVS launched NTorq 125 scooter

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (05/02/2018)

கடைசி தொடர்பு:21:20 (05/02/2018)

ப்ளூடூத் வசதியுடன் டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் அறிமுகம்..!

டி.வி.எஸ் நிறுவனம் ப்ளூடூத் வசதி மற்றும் 125 சி.சி கொண்ட என்.டார்க் என்ற ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாகன விரும்பிகள் மத்தியில் இந்த ஸ்கூட்டருக்குப் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

டி.வி.எஸ் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளுடன் என்.டார்க் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதனையடுத்து, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. இந்தநிலையில், அந்த ஸ்கூட்டர் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 125 சி.சி 3 வால்வ் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரின் விலை 59,000 ரூபாய். இந்த ஸ்கூட்டரின் முன் வீல் டிஸ்க் ப்ரேக் வசதியைக் கொண்டது.

ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் 9.3 பி.எச்.பி வசதி கொண்டது. ஸ்போர்ட்ஸ் பைக் வடிவமைப்பில் இருக்கும் இந்த ஸ்கூட்டர் அனைவரையும் வசீகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 இன்ச் அலாய் வீல், டியூப்லெஸ் டயர் கொண்டது. மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றும் வசதியும் கொண்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்களில் முதன்முறையாக ப்ளூடூத் வசதியைக் கொண்ட ஒன்று என்டார்க் ஸ்கூட்டர். வண்டியின் முன்பகுதியிலுள்ள டிஜிட்டல் ஸ்க்ரீனில் மொபைல் போனை ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ள முடியும். அதன்மூலம், மேப் வசதி, போனுக்கு வரும் மெசேஜ் மற்றும் போன் கால்களைப்பார்த்துக் கொள்ள முடியும்.

ஸ்டீரிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய ரைட் மாடல்களில் இந்த பைக் வெளியாகியுள்ளது. மஞ்சள், க்ராபைட் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். இந்திய வாகன ஓட்டிகளிடம், என்டார்க் பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 


[X] Close

[X] Close