வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (06/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (06/02/2018)

மருந்து வாங்கப்போறீங்களா? உங்கள் கவனத்துக்கு...  Exclusive Deal

மறதி, கடை திறக்கவில்லை, ஸ்டாக் இல்லை, வீட்டிலிருந்து கடை ரொம்ப தூரம், நேரமின்மை, புயல்-மழை எனப் பல காரணங்களால், தேவைப்படும் மருந்துகளை சில சமயம் வாங்காமல் விட்டுவிடுவோம். என்றாவது காஃபி குடிக்காமல் இருக்கலாம், நம் உடலை நோய் தாக்குதலிலிருந்து காப்பாற்ற உதவும் அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா? இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரரிடம்தான் அசடு வழிந்துகொண்டே "ஒரு சுகர் டேப்லெட் தாங்களேன், நாளைக்குத் திருப்பித்தரேன்" எனக் கேட்கத்தான் முடியுமா? அசட்டையாக இருந்துவிட்டுப் பின் அல்லல் படுவானேன்? இதுபோன்ற நிலைமைகளில்தான் கைக்கொடுக்கிறது இணையம்-​​ Internet ! நம்மை வசதியாகவும் சொகுசாகவும் வைத்துக்கொள்ள உதவும் பொருள்களைத்தான் இணையவழியில் வாங்கமுடியும் என்பதில்லை, அத்தியாவசியமாகத் தேவைப்படும் "மருந்துகளை"க் கூட இன்று இணையத்தில் வாங்கும் வசதி வந்துவிட்டது! "நெட்மெட்ஸ்.காம்"க்கு நன்றி!​

netmeds

 

100 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் செயல்பட்டுவருகிறது, சென்னையை மையமாகக்கொண்ட 'தாதா & கம்பெனி'. ஷூ என்றால் 'பேட்டா', மருந்துகளுக்கு 'தாதா' என்பது வியாபார அடைமொழியாகும்.  பொதுமக்களின் தேவையறிந்து மருந்துகளை வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் சேவையை www.netmeds.com எனும் இணையவழி வர்த்தகத் ​​​தளத்தின் மூலம் 2015​ -ம் ஆண்டு தொடங்கியது இந்த நிறுவனம். ​

டாக்டர் அளித்த மருந்துசீட்டைப் படமெடுத்து நெட்மெட்ஸ்.காம்-இல் பதிவேற்றிய பின், பரிந்துரைக்கப்பட்ட அதே மருந்துகளை இணையத்தில் வாங்கலாம். இதனால், முறையான மருந்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. இதே மருந்திற்கு இணையான குறைந்த விலையிலானப் பிறத்​​ தரமான ​​தயாரிப்புகளையும்​ (low-cost Generic Medicines)  நமக்கு​ வழங்குகிறது​ நெட்மெட்ஸ். வாடிக்கையாளரின் முந்தைய வியாபார விவரத்தைக் கொண்டு மருந்துகள் பற்றிய நினைவூட்டல் அறிவிப்புகளையும் நமக்கு அனுப்புகிறது. மேலும், நெட்மெட்ஸ்ஸில் உள்ள பார்மசிஸ்ட் மூலமாக நம் சந்தேகங்களைக் கேட்கும் வசதியுமுண்டு. ​நெட்மெட்ஸ் மொபைல் ஆப் மூலமும் மருந்துகளைச் சுலபமாக வாங்கலாம். 

netmeds

 

முதியவர்களுக்கு மருந்துகளுக்கானத் தேவை அதிகமாக இருப்பதால், அடிக்கடி பார்மஸிக்களுக்குச் செல்லவேண்டிய நிலையுள்ளது. பெரும்பாலும் நம் வீட்டு பாட்டியோ தாத்தாவோ, வயதான பெற்றோரோ நம் உதவியை நம்பித்தான் இருக்கவேண்டியுள்ளது. நாம் இல்லாத நேரங்களில், அவர்களுக்கு மருந்துகள் ​ ​தேவைப்படுமானால், அப்போது சிக்கல்தான்! இங்கேதான் வயதானவர்களுக்குக் கைக்கொடுக்கிறது ​​நெட்மெட்ஸ். ஆன்லைனில் ஆர்டர் செய்வதால், தேவையான மருந்துகள் அனைத்தும் வீட்டு வாசலிலேயே கிடைத்துவிடுகின்றன​​. தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால், அவர்களுக்காக நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து, அவர்களின் முகவரிக்கு மருந்துகளை அனுப்பி வைக்கலாம்! நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றுக்குத் தொடர்ச்சியாக உட்கொண்டுவரும் மருந்துகளை, மாதாமாதம்​ ​மொத்தமாக வாங்கும் வசதியுமுண்டு.

தலை முதல் கால் வரையிலான பிரச்னைகளுக்குத் தேவையான அனைத்துவகை மருந்துகள்;  அதுமட்டுமல்லாது, அழகுசாதனப் பொருள்கள், முதலுதவி உபகரணங்கள், வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், வலி நிவாரணிகள்  என உடல்நல ஆரோக்கியத்துக்குத் தேவையான சாதனங்கள் அனைத்தும் ஒருங்கே நெட்மெட்ஸ்ஸில் கிடைக்கிறது. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் நெட்மெட்ஸ் மூலம் மருந்துப் பொருள்களை வாங்கிப்  பயன்பெறமுடிவது மிகச்சிறப்பு. முக்கியமாக மருந்துக் கடைகள் அருகில் இல்லாத கிராமங்களுக்குக் கூட நெட்மெட்ஸ், மருந்துகளை டெலிவரி செய்வது குறிப்பிடத்தக்கது. ஆர்டர் செய்து, குறைந்தபட்சம் மறுநாளே டெலிவரி செய்யப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தங்கள் சேவை கிடைக்கும் வண்ணம் பற்பல நடவடிக்கைகளையும் மும்முரமாகச் செய்துவருகிறது நெட்மெட்ஸ்.இவர்களின் சேவையைப் பாராட்டி என்.டி.டி.வி., மருத்துவத் துறையில் சிறந்த அறிமுகத் தொழில் நிறுவனமாக நெட்மெட்ஸ்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளது.

netmeds

 

சாதாரண மருந்துக் கடைகள் வழங்காத ​பல சலுகைகளைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்காக​ ​​நெட்மெட்ஸ் நிறுவனம் வழங்கிவருகிறது. உங்களுக்குத் தெரிந்த நபரை ​நெட்மெட்ஸ்ஸில் அறிமுகம் செய்து, அதற்கான ரிவார்ட்ஸ்ஸையும் பெறலாம்! நம் விகடன் வாசகர்களுக்குப் பிரத்யேகச் சலுகையாக, வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் மொத்தத் தொகையிலிருந்து 22% தள்ளுபடி மற்றும் முன்பணம் செலுத்தி செய்யப்படும் ஆர்டர்களுக்கு 5% NMS கேஷ் பேக் ஆஃபரும் வழங்குகிறது.​

இனி நலமுடன் வாழவும் இணையத்தை நாடலாம்!​ VIKATAN - இந்த ஃஆபர்​ கோடைப் பயன்படுத்தி ​​சலுகையைப் பெ​றுங்கள்​!

நீங்க எப்படி பீல் பண்றீங்க