விமானத்துறையில் ​+2 ​மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு​ 'பலே' வாய்ப்புகள்!​ ​#விகடன்_வழிகாட்டி

+2 முடிவுகளுக்குப் பின் கட் ஆஃப் அதிகமாக இருந்தாலும் சரி கம்மியாக இருந்தாலும் சரி, பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட நினைக்கிறார்கள். இன்ஜினியரிங் படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. மருத்துவத் துறையா? அது வேற டிப்பார்ட்மெண்டு! இந்த இரு துறைகளைத் தவிர்த்து மரியாதைக்குரிய, அதிக வேலைச்சுமை இல்லாத, கைநிறைய வருமானத்தைக் கொடுக்கும், வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகள் இருக்கவே இருக்கின்றன - இதில் முக்கியமானது "விமானத் துறை!"

வழிகாட்டி

 

விமானத் துறை என்றால் பைலட் டிரெயினிங் மற்றும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிகள் மட்டுமல்லாது, பைலட்டுடன் இணைந்து செயல்படும் ஃப்ளைட் டிஸ்பாட்சர், விமானத்திலிருந்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ரேடியோ டெலிபோனி பயிற்சிகள், பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய படிப்புகள், விமானம் மற்றும் விமான நிலைய மேலாண்மை பற்றிய படிப்புகள் என எண்ணற்ற பிற தேர்வுகளையும் இந்தத்துறை வழங்குகிறது.

 

இந்த படிப்புகளில் சேர, உயர்நிலை வகுப்பில் அதிக மார்க் எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை (சூப்பர்!) எம்பிஏ ஏவியேஷன், பிபிஏ ஏவியேஷன் மற்றும் பிஎஸ்சி ஏவியேஷன் போன்ற தொழில்முறை படிப்புகள் கற்பதால் விமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, 5-ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கஸ்டமர் கேர் நிறுவனங்களிலும் பணிபுரியலாம். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விமான சேவை நிறுவனங்களிலும், அல்லைய்ட் மக்கள் சேவை மையங்களிலும் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், மற்ற தொழில்முறை படிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் செலவும் குறைவே!

REMO

 

+2 மாணவர்களுக்கு உதவும் வகையில் விமானத் துறை குறித்த "வழிகாட்டி" - இலவச கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னையில் பிப்ரவரி 24ம் தேதியன்று விகடன் நடத்தவுள்ளது. இதில், கேப்டன் பாரதிராமன் - முன்னாள் விமான ஓட்டுநர், ஏர் இந்தியா, திருமதி ஸ்னேஹா பிள்ளை - முன்னாள் காபின் க்ரூ, ஜெட் ஏர்வேஸ், மற்றும் திரு பிரசன்னா - மனிதவளத்துறை, ட்ரூஜெட் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட  விமானத் துறையைச் சார்ந்த கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

மாணவர்களும் பெற்றோரும் விமானத் துறை பற்றி விவரமாக அறிந்துகொள்ளவும், தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் அருமையான வாய்ப்பாக அமைகிறது வழிகாட்டி நிகழ்ச்சி. இலவச செமினாரில் கலந்துகொள்ள, இங்கே முன்பதிவு செய்யலாம்!​ 

ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்க...

 

FOR REGISTRATION IN REMO

 

1). Your Name: *

2). Email Id *

3). Contact No *

4). Districts *

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!