Published:Updated:

ஓசூர் `தாஜ்மகால்'..! - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓசூர் `தாஜ்மகால்'..!  - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை
ஓசூர் `தாஜ்மகால்'..! - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை

ஓசூர் `தாஜ்மகால்'..! - கலங்கவைத்த ஆங்கிலேயே கலெக்டரின் காதல் கதை

டியர் பிரிட், 

' உன் கடிதத்தைப் பார்த்தபோது ஒரு பெருமூச்சுதான் வந்தது. எப்படி உன் ஆசையை நான் நிறைவேற்றுவேன்? இங்கு நான் எப்படி வாழ்கிறேன் என்பதை நீ நேரடியாகப் பார்த்தவன். இத்தனை காலமும் இப்படி ஒரு சௌகரியமான வாழ்கை நடத்தியபின், வெப்பமும் ஈக்களும் மனிதர்களை வேட்டையாடும் ஒரு தேசத்தில், கொசுக்கள் நிறைந்த ஒரு மலைப் பிராந்தியத்துக்கு என்னை அழைக்கிறாயே...என்னை சந்தோஷப்படுத்த அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடத்தில் நம் இல்லறம் இன்பமாக இருக்கும் என்று நீ நம்புகிறாயா..?' - 1861-ம் ஆண்டு ஓசூர் கலெக்டராக இருந்த ஹெச்.ஏ.பிரெட்டுக்கு அவர் காதலி எழுதிய கடிதம் இது. 

ஆங்கிலேயேர்கள் ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது ஓசூர். இங்கிலாந்தில் ஐ.சி.எஸ் பட்டம் வென்ற பிறகு, தமிழகத்துக்குள் கால்பதித்தார் பிரெட். 'லிட்டில் இங்கிலாந்து' என்ற அழைக்கப்பட்ட ஓசூரில் பணியில் அமரும் வாய்ப்பு கிடைக்கவே, தன்னுடைய நீண்டநாள் காதலியை ஓசூருக்கே கொண்டு வர விரும்பினார். அதனை கடிதம் மூலம் தெரியப்படுத்தியதற்கு, அவர் காதலி எழுதிய ஆதங்க வரிகள்தான் மேலே நீங்கள் படித்தது. 

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த காதலியின் கடிதத்தை நடுங்கும் விரல்களில் வாசித்துக் கொண்டிருந்தார் பிரெட். ' உனக்கு என்மீது இருக்கும் காதல் மிக அதிகம். ஆனால், பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த எனக்கு பிரத்தியேகமான கனவுகள் இருக்கிறதே...அதை நான் எப்படிக் கைவிட முடியும்? நான் வளரும்போதே என்னுடன் வளர்ந்த கனவு அது. மாறும் பருவங்களிடையே மாறாத கனவு அது. உன்னுடன் இருந்த மிக நெருக்கமான கணங்களில் நான் பகிர்ந்துகொண்ட கனவை நீ மறந்திருக்க மாட்டாய். 'கெனில்வர்த் மாளிகை' (Kenilworth Castle)தான் அந்தக் கனவு. திருமணத்துக்குப் பிறகான என்னுடைய வாழ்க்கை, அதுபோன்ற ஒரு மாளிகையில்தான் நடக்க வேண்டும். இது பிடிவாதமல்ல பிரெட், என்னுடைய நெடுநாளைய கனவு. அதை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். இன்றைக்கும்கூட விண்ட்ஸர் மாளிகையில் ஒரு விருந்து காத்திருக்கிறது. நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கடிதத்தில், உனக்கென்றே பிரத்தியேகமான என் அன்பு முத்தங்கள்' என உள்ளக்கிடக்கையை வார்த்தைகளால் விவரித்திருந்தார் பிரெட்டின் காதலி. 

தற்போதைய நிலை..

' கெனில்வொர்த் மாளிகையைப் போன்ற ஒன்றை, ஓசூரிலேயே கட்டிவிட்டால் காதலி வந்துவிடுவாள்' என உறுதியாக நம்பினார் ஹெச்.ஏ.பிரெட்.  ஓசூரில் தான் கட்டப்போகும் மாளிகையைப் பற்றியும் அடுத்தடுத்து கடிதங்களில் விவரித்தார். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வரப் போகும் பதிலுக்காக நெடுநாள்கள் காத்திருந்தார். லண்டனில் புகழ்பெற்ற 'கெனில்வர்த் கேசில்' மாளிகையைப்போன்ற ஒரு மாளிகையைத் தனது காதலிக்காக, ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில்(இன்றைய கோட்டை மாரியம்மன் கோயில் அருகே) ஹாமில்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளரின் மேற்பார்வையில், அழகிய மாளிகையைக் கட்டி முடித்தார். அன்றைய மதிப்பீட்டில் கட்டடத்துக்கான மொத்தச் செலவு ரூ.1.75 லட்சத்தைத் தொட்டது. அந்த அழகிய மாளிகையைச் சுற்றிலும் அகழி வெட்டியும் பூங்காங்கள் அமைத்தும் அழகுபடுத்தினார். ஆனால், கடைசிவரை பிரெட்டின் காதலி இந்தியா வர விரும்பவில்லை என்பதுதான் சோகம். ' பிரெட்டின் தாஜ்மகால் இங்குதான் இருந்ததா?' என்று எண்ணும் அளவுக்குக் குப்பை மேடாக் காட்சியளிக்கிறது ராமநாயக்கன் ஏரிக்கரை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு