வீடு வாங்க... ​'​ஃபேர் ப்ரோ​'​ வாங்க... (Sponsored Content)

வீடு வாங்கணும்னு முடிவு செஞ்சவங்க, இன்னும் சில வருஷத்துல வீடு வாங்கணும்னு திட்டம்போட்டு சேமிக்கிறவங்க, வீடு வேணும் ஆனா எங்கிருந்து தொடங்குறதுன்னு தெரியாம இருக்குறவங்க, இந்த ரகத்துல யாரா இருந்தாலும் கண்டிப்பா இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் எனப்படும் கிரெடாய் (CREDAI) நடத்தும் வீட்டு விற்பனை கண்காட்சியில் கலந்துகொள்வது நல்லது. 

 

"கிரெடாய் ஃபேர் ப்ரோ", 11​-​​வது வருஷமா இந்த கண்காட்சி நடைபெறவிருக்குது. இந்த வருஷம், பிப்ரவரி 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில், நந்தம்பாக்கம் சென்னை ட்ரேட் சென்டரில் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சியில், 75 -க்கும் மேற்பட்ட வீட்டு வணிக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் கலந்துக்கப்போறாங்க. ரூ.10 லட்சம் தொடங்கி ரூ.10 கோடி வரை மதிப்புடைய, 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் குறித்த விவரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறப்போகுது.

சட்டரீதியான ஆலோசனை, வாஸ்து, சொத்து சம்பந்தப்பட்ட சேவைகள், வங்கிக் கடன்கள் என ரியல் எஸ்டேட் சம்பந்தமான அனைத்துத் துறை கு​றித்த புரிதல்களைப் பெற இந்த கண்காட்சி உதவியா இருக்கும். வீடுகள்னு பார்க்கும்போது பலதரப்பட்ட தேர்வுகள் உங்களுக்கு இருக்குறதால, அதிலிருந்து உங்களுக்கேற்ற, மனசுக்குப் பிடிச்ச  வீடுகளைத் தேர்வுசெய்து, அந்தந்த இடத்துக்குப் போய் நேரில் பார்வையிடம்னு கோரிக்கை வைக்கலாம்; இதில் பங்குபெறும் நிறுவனங்கள் பல​,​ இலவச சைட் விசிட்டுகளுக்கும் ஏற்பாடு செய்துகொடுக்குறாங்க. மேலும், சென்னையிலுள்ள கைதேர்ந்த கட்டுமான நிறுவனங்களிடமிருந்து பிரத்தியேகச் சலுகையைப் பெற நல்ல வாய்ப்பா அமையுது இந்த ஃபேர் ப்ரோ. 

ரியல் எஸ்டேட் ஆலோசனைகளை அள்ளிக் கொடுத்து, நம்மோட சந்தேகங்களை தெளிவிக்கப் பல நிபுணர்கள்​ வர​ இருக்காங்க. நகரத்துல இருக்குற சிறந்த பில்டர்கள் எல்லாரும் குழுமும் இந்த விழாவுல உங்களுக்கான கனவு வீட்டைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு. ​எவ்வளவு நாள்தான் வீடு வாங்கனும்னு கனவோட இருப்பது, அதை நனவாக்க ஒரு படி எடுத்து வைங்க.  உங்க கனவு ​வீட்டை வாங்க... ஃபேர் ப்ரோ வாங்க...
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!