Published:Updated:

’’தமிழக மாணவர்களுக்கான 24 மணிநேர ’இலவச ஹெல்ப் லைன்’!’’

சுகன்யா பழனிச்சாமி
’’தமிழக மாணவர்களுக்கான 24 மணிநேர ’இலவச ஹெல்ப் லைன்’!’’
’’தமிழக மாணவர்களுக்கான 24 மணிநேர ’இலவச ஹெல்ப் லைன்’!’’

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் மன அழுத்ததை போக்க கட்டணமில்லா தொலைப்பேசி சேவைத் தொடர்பு மையம் வரும் பிப்ரவரி 19-ம் தேதியில் துவங்க உள்ளதாகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

’’தமிழக மாணவர்களுக்கான 24 மணிநேர ’இலவச ஹெல்ப் லைன்’!’’

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, கட்டணமில்லா தொலைப்பேசி சேவை திட்டத்திற்குத் தமிழக அரசு ரூ.1.98 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. 24 மணி நேரம் செயல்படும் இச்சேவை மையம் சென்னையில் அமைய உள்ளது. இதில், 5 நபர்கள் ஷிப்ட் அடிப்படையில், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மாணவர் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். 

தேர்வு விபரங்கள், உதவித்தொகை விவரங்கள், உயர் கல்வி படிப்பதற்கான முக்கிய தகவல்கள், உளவியல் ஆலோசனைகள், பாடத்திட்டங்களில் உள்ள சந்தேகங்களை ’14417’ என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தினால் மாணவர்களில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.