Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• ஆஸ்திரேலியாவில் ஹாலிடே கொண்டாடிய பரிணீதி சோப்ராதான், கடந்த வார வாட்ஸ்அப் வைரல். ஆஸ்திரேலியாவுக்கு டூர் போன பரிணீதி, பலூனில் பறந்தது, காட்டுக்குள் சாகசச் சவாரி செய்தது போன்ற உற்சாக ட்ரிப் போட்டோக்களை ஆன்லைனில் அப்லோட, ரசிகர்கள் எல்லோரும் `மேரி பியாரி பரிணீதி...' என வெறிபிடித்து அலைந்ததில் பேபி செம ஹேப்பி! ச்சோ ஸ்வீட்!

இன்பாக்ஸ்

•   இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட், டென்னிஸ், மல்யுத்தம் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அதிகம் சம்பாதிப்பது எல்லாமே வெளிநாட்டு வீரர்கள்தான். 2015-ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களின் சம்பளப் பட்டியல்படி, இந்திய டென்னிஸ் லீகில் விளையாடுவதற்காக ரோஜர் ஃபெடரரும் ரஃபேல் நடாலும் 26 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார்கள். லீகுகள் மூலம் ஒரு நிமிடத்துக்கு அதிகபட்சமாக 1.65 லட்சம் ரூபாய் சம்பாதித்து இந்திய வீரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத். விராட் கோஹ்லி, தோனி எல்லாம் நிமிடத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் வாங்க, யுவராஜ் சிங் 1.01 லட்சம் ரூபாயோடு லீடிங்கில் இருக்கிறார். `தத்’னா கெத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

•   ஒரு கைக்கடிகாரத்தால் கர்நாடக முதலமைச்சரே கதிகலங்கியிருக்கிறார். காரணம், அந்தக் கடிகாரத்தின் விலை 70 லட்ச ரூபாய். வைரம் பதித்த அந்த ஹியூப்லோ கைக்கடிகாரத்தை அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்திருந்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. சட்டசபைக் கூட்டத்தில் அதையே விவாதப்பொருளாக மாற்றி `இந்த வாட்ச் எங்கு இருந்து வந்தது?’னு விசாரணை பண்ணணும்' என எதிர்க்கட்சிகள் குண்டு வீச, `நான்தான் கொடுத்தேன். நாங்க ரெண்டு பேரும் முப்பது வருஷ ஃப்ரெண்ட்ஸ்' என துபாயைச் சேர்ந்த கிரிஷ் பிள்ளை என்பவர் வான்டட்டாக வந்து வண்டியில் ஏற... `பிரச்னை வேண்டாம். இதை கர்நாடக அரசுக்கே கொடுத்துவிடுகிறேன்' என விவகாரத்துக்கு  ஃபுல்ஸ்டாப் வைத்திருக்கிறார் சித்தராமையா. நேரம் சரியில்லைனா இப்படித்தான்!

•   `முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு, உன்னைக் கேலிசெய்வார்கள். அடுத்து உன்னோடு சண்டையிடுவார்கள். முடிவில் நீயே வெல்வாய் - மகாத்மா காந்தி' - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலைத்தகவல் இது. இதைப் போட்ட அரை மணி நேரத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் ஹிலாரி அணி, `இதை, காந்தி சொல்லவே இல்லை' என நிரூபித்து ஹேஷ்டேக்கோடு கலாய்க்க, நாட் ரீச்சபிள் ஆனார் ட்ரம்ப். என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா! 

இன்பாக்ஸ்

•   சுமார் ஒரு வருடமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த ஸ்காட் கெல்லி, பூமிக்கு வந்துவிட்டார். 340 நாட்களுக்கு முன்னர் விண்வெளிக்குக் கிளம்பிய நாசாவின் ஸ்காட் கெல்லி, விண்வெளியில் அதிக நாட்கள் இருப்பதால் உண்டாகும் உளவியல் பிரச்னைகள் பற்றி ஆய்வுசெய்திருக்கிறார். `இப்பவும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் ஒரு வருடம்கூட விண்வெளியிலேயே இருந்திருப்பேன். காட்டுக்குள்ளே கேம்ப்பிங் போனதுபோல்தான் இருந்தது. என்ன... ஜாலியாக ஷவரில் குளிக்க முடியவில்லை' என்கிறார் கெல்லி. # அடுத்த ட்ரிப் எப்போ?

இன்பாக்ஸ்

• `வாட்டர் பவுல் சேலஞ்ச்' - த்ரிஷா தொடங்கிவைத்திருக்கும் இன்டர்நெட் ட்ரெண்ட் இது. சுட்டெரிக்கும் சம்மர் சீஸன் ஆரம்பித்திருப்பதால் பறவைகள், விலங்குகளின் தாகம் தீர்க்க வீட்டுவாசலில், பால்கனிகளில் தண்ணீர் பிடித்து வைத்து அதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவேண்டுமாம்! செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா..?

இன்பாக்ஸ்

•   உலகப் புகழ்பெற்ற ஓவியரான வின்சென்ட் வான்காவின் வாழ்க்கை, திரைப்படம் ஆகிறது. `லவ்விங் வின்சென்ட்' என்ற இந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க ஓவியங்களால் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர், பார்த்தவர்களை மிரளவைத்திருக்கிறது. இந்தப் படத்துக்காக 100 ஓவியர்கள், தங்கள் கைகளாலேயே 57 ஆயிரம் ஃப்ரேம்களுக்கான ஓவியங்களை வரைந்துகொடுத்திருக்கிறார்கள். `வான்கா மாதிரியான ஓர் ஓவியனுக்கு இதுதான் சரியான மரியாதையாக இருக்கும்' என்கிறது படக் குழு. # மகா கலைஞனுக்கு மெகா மரியாதை!

•   பொருட்கள் விற்கும் ஃப்ளிப்கார்ட்டில் தன்னையே விற்ற இளைஞனின் ஐடியா ஆன்லைனில் தெறி ஹிட். ஐ.ஐ.டி கரக்பூரில் படித்த ஆகாஷ் மிட்டல், ஃப்ளிப்கார்ட்டில் தன் போட்டோவைப் போட்டு,
27 லட்ச ரூபாய் விலை குறிப்பிட்டு, `இந்தத் திறமையான, அறிவான, புதுமையான பையன் உங்களுக்கு வேண்டுமா?' என, தன் பயோடேட்டாவையும் இணைத்துவிட பத்திக்கிச்சு சோஷியல் மீடியா. விஷயம் வைரல் ஆச்சே தவிர, ஆகாஷுக்கு வேலை கிடைக்கவில்லை! ஸோ சேடு!

•   விளம்பரங்களில் இனி எந்த நடிகையுடனும் சேர்ந்து நடிப்பது இல்லை எனக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறார் ரன்பீர் கபூர். `நடிகைகளுடன் சேர்ந்து நடித்தால், மக்கள் ஜோடியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். பொருளைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பேசுவது இல்லை. கூடவே இந்த ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு எல்லாமே ஏமாற்று வேலை. அதனால் அந்த விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன்' என்கிறார் ரன்பீர். எங்கேயோ ஹெவியா பாதிக்கப்பட்டிருக்காப்ல!

இன்பாக்ஸ்

•   இந்த ஆண்டு ஆஸ்கரில், சில்வஸ்டர் ஸ்டாலோன்தான் சிறந்த துணை நடிகர் விருது பெறுவார் என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், `பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்'-ல் நடித்த மார்க் ரைலான்ஸுக்கு விருது கிடைத்துவிட, சில்வஸ்டர் ஸ்டாலோனின் சகோதரர் ஃப்ராங்க் ஸ்டாலோன் பொங்கி எழுந்துவிட்டார். `ஆஸ்கர் கமிட்டியே உனக்கு வெட்கமா இல்லையா... எங்க அண்ணனுக்கு அநீதி செய்துவிட்டீர்கள்' எனப் பொங்க... சில்வஸ்டர் உள்ளே புகுந்து சகோதரனை கூல் பண்ணியதோடு, தம்பியின் செயலுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். பாசக்கார பிரதர்ஸ்!