முன்பு கிராபிக் நாவல்கள்... இப்போது சூப்பர்ஹிட் திரைப்படங்கள்! - ஒரு உலகசினிமா பட்டியல் | Films That adapted from Graphic Novels

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:33 (20/02/2018)

முன்பு கிராபிக் நாவல்கள்... இப்போது சூப்பர்ஹிட் திரைப்படங்கள்! - ஒரு உலகசினிமா பட்டியல்

கிராஃபிக் நாவல்களைப் படிப்பது என்பது, வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். கதையாக மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் அனைத்தும் வரையப்பட்டு அசத்தலான வடிவமைப்புடன் இருக்கும். இந்தக் காரணத்துக்காகவே இவற்றுக்கு தனிமதிப்பு உண்டு. நாவல்களை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்படுவதைப் போன்று, கிராஃபிக் நாவலிலிருந்தும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  மக்களிடம் அதிக கவனம்பெற்ற அந்தத் திரைப்படங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

கிராபிக் நாவல்

300:

2006-ம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம், பிராங்க் மில்லர் எழுதிய `300' என்ற கிராஃபிக் நாவலின் தழுவல். இந்த நாவலுக்கான இல்லுஸ்டிரேஷனை லின் வார்லி வரைந்திருப்பார். `300' திரைப்படமே கிட்டத்தட்ட ஒரு கிராஃபிக் நாவலைப்போல எடுத்திருப்பர். வித்தியாசமான ஒரு கலவையில் இந்தப் படம் உருவாகியிருக்கும். `ஸ்பார்ட்டன்ஸ்' என அரசன் கர்ஜிக்க, அவனின் 300 படைவீரர்கள் அதிக எண்ணிக்கையிலான படையை எதிர்கொண்டு வெற்றிபெறுவர். தமிழிலும் இந்தப் படம் `300 பருத்தி வீரர்கள்' என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது.

வீ ஃபார் வெண்டெட்டா:

 v for Vendetta

2005-ம் ஆண்டில் வெளியான பொலிட்டிக்கல் த்ரில்லரான இந்தப் படம், பலருடைய ஃபேவரிட் லிஸ்ட்டில் இன்றும் உள்ளது. இந்தப் படம், ஆலன் மூர் எழுதிய `வீ ஃபார் வெண்டெட்டா' என்ற கிராஃபிக் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த நாவலின் இல்லுஸ்டிரேஷனை டேவிட் லாய்டு, டோனி வேய்ர் இருவரும் வரைந்துள்ளனர். இந்தப் படத்தின் `வி' கதாபாத்திரமாக ஹியுகோ வீவிங் நடித்திருப்பார். அவரின் கதாபாத்திரமும் அவர் அணிந்திருக்கும் அந்த மாஸ்க்கும் செம ஹிட்!

கிராபிக் நாவல்

ரோட் டு பெர்டிசன்:

கிராபிக் நாவல்

டாம் ஹென்ஸ் நடிப்பில் சாம் மெண்டிஸ் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான படம் இது. கேங்ஸ்டர் ஒருவரின் அடியாளாக இருக்கும் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும். இது, மேக்ஸ் ஆலன்கொலின்ஸ் எழுதிய காமிக்ஸை மையப்படுத்தி இருக்கும். ரிச்சர்டு ரெய்னர், இதற்கு ஓவியங்கள் வரைந்திருப்பார்.  `ரோட் டு பெர்டிசன்' என்ற பெயரிலேயே வெளியான இந்த புக், சீரிஸ் கிராஃபிக் நாவலாக வெளிவந்தது.

ஓல்டு பாய்:

கிராபிக் நாவல்

2003-ம் ஆண்டில் வெளியான `ஓல்டு பாய்' என்கிற கொரியன் திரைப்படம், சினிமா ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று. பார்க் சான் வூக், இதை இயக்கியுள்ளார். பெஸ்ட் கொரியன் சினிமாக்களைப் பற்றி வெளியிடப்படும் பட்டியலில் இந்தப் படமும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படம், ஹரான் துஸ்ஷியா எழுதிய `ஓல்டு பாய்' கிராஃபிக் நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. இந்த நாவலுக்கான ஓவியங்களை நுபுவாக்கி மினிகுசி வரைந்துள்ளார்.  

old boy

 

ப்ளூ இஸ் தி வார்மஸ்ட் கலர் : 

கிராபிக் நாவல்

இரு பெண்களின் ஒரே பாலின ஈர்ப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது இந்தப் படம். 2013-ம் ஆண்டில் வெளியான இந்த பிரெஞ்சுப் படம், கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப் பனை விருதைப் பெற்றது. ஜூலி மரோவ் எழுதிய `ப்ளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' (ப்ளூ ஏஞ்சல்) என்ற பெயரில் எழுதிய கிராஃபிக் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது இந்தப் படம். 

 

சின் சிட்டி:

கிராபிக் நாவல்

2005-ம் ஆண்டில் வெளியான  நியோ-நாயர் ஆன்ந்தாலஜி ஜானரில் அமைந்தது `சின் சிட்டி' திரைப்படம். இதை ராபர்ட் ரோட்ரிக்ஸ், பிரான்க் மில்லர் மற்றும் குவெண்டின் டொரன்டினோ ஆகியோர் இயக்கியுள்ளனர். பிரான்க் மில்லர் எழுதிய `சின் சிட்டி' என்ற கிராஃபிக் நாவலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது.

 

தி மாஸ்க் : 

கிராபிக் நாவல்

1994-ம் ஆண்டில் ஜிம் கேரி நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய  ஹிட் அடித்தது. இதில் ஜிம் கேரியின் நடிப்பு, மிகவும் பாராட்டப்பட்டது. சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படமான இந்தப் படமும் கிராஃபிக் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான். மைக் ரிச்சர்டுசன் எழுதி டார்க் ஹவுஸ் காமிக்ஸ் வெளியிட்ட `தி மாஸ்க்' கிராஃபிக் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

கிராபிக் நாவல்

இவை மட்டுமின்றி, இன்னும் பல திரைப்படங்களும் கிராஃபிக் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன.


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை