Published:Updated:

'சிலிண்டர் தூக்குபவர்களுக்கும் உரிமை வேண்டும்!'- திருச்சியில் ஆர்ப்பாட்டம்

சி.ய.ஆனந்தகுமார்
'சிலிண்டர் தூக்குபவர்களுக்கும் உரிமை வேண்டும்!'- திருச்சியில் ஆர்ப்பாட்டம்
'சிலிண்டர் தூக்குபவர்களுக்கும் உரிமை வேண்டும்!'- திருச்சியில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில், மூன்று எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகஸ்தர்கள் பங்கேற்றதுடன், தங்கள்  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக, எல்.பி.ஜி. சிலிண்டர்  விநியோகஸ்தர்கள் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாதிக்,

 'சிலிண்டர் விநியோகிப்பவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை எண்ணெய் நிறுவனங்களும், ஏஜென்சிதாரர்களும் முறையாக வழங்க வேண்டும்.மேலும், வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் சிலிண்டர் விநியோகிப்பவர்களுக்கு, வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும்.  அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாளில் சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். மேலும், எங்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.ஃ.எப் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதேநேரம், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு காப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், எங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்' என்றார்.