காரைப் பாதுகாக்க இதுதான் சிறந்த வழி! #Verified - Exclusive Deal

காரின் தோற்றத்தைப் பேணவும், மேம்படுத்தவும் வேக்ஸ் பாலிஷிங், ஆட்டோமேட்டிக் வாஷ், மேனுவல் வாஷிங் எனப் பல வழிகளை நாம் பின்பற்றுவோம். இதற்கு ஆகும் செலவு பொதுவாக மாதத்துக்கு ஒரு முறை என்றால், வருடக்கணக்கில் இது பெரும் தொகையாக நம் தலையில் வந்து விடிகிறது. அதனால், கார் தோற்ற பராமரிப்பு பற்றிய புரிதல் நமக்கு இருப்பது அவசியம்.

பாலிஷிங் vs வேக்ஸிங்

நமது காரில் கீறல்கள் விழும்போது, அவற்றை மறைக்க பாலிஷிங் செய்வது வழக்கம். காரைத் தண்ணீர் கொண்டு கழுவி காயவிட்ட பின், மேற்புறத்தை விரல்களால் தொடும்போது, கரடுமுரடான இடங்கள், சிறு மேடு பள்ளங்களை உணரமுடிந்தால் அப்போது காருக்கு பாலிஷிங் செய்வது முக்கியம். பாலிஷிங் செய்ய உபயோகிக்கும் சோப்புக் கலவைகள் மற்றும் இரசாயனங்கள் காரின் மேற்புற பெயின்டை சீக்கிரம் தேய்த்துவிடும் என்பதால், பாலிஷிங் எப்போதாவதுதான் செய்ய வேண்டும்.

வேக்ஸிங் என்பது பாலிஷிங் போலத்தான், ஆனால் சிறு மாறுபாடு உண்டு. காரின் மேற்புறத்தை சமன்படுத்திய பின், காரின் பளபளப்பை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படும் கோட்டிங்தான் வேக்ஸிங். வெயில், யூ.வி. கதிர்கள் தாக்குதலால்  காரின் பெயின்ட் வெளிறிப் போவத்திலிருந்து காக்கிறது வேக்ஸிங். வேக்ஸ் அதிக சூட்டில் உருகிவிடும் என்பதால், பளபளப்பை பராமரிக்க அடிக்கடி வேக்ஸிங் செய்யவேண்டிய நிலையுள்ளது மற்றும் ஆக்ஸைடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து வேக்ஸ் காரின் மேற்புறத்தைக் காப்பதில்லை, இவை வேக்ஸிங்கின் பின்னடைவுகள்.

செராமிக் கோட்டிங் மட்டுமே தீர்வு!

இங்கேதான் செராமிக் ப்ரோ கோட்டிங் உதவுகிறது. பாலிமர் இரசாயனங்களால் ஆன இந்தப் பூச்சு கார் பெயின்டை புயல், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கிறது. மேலும் ஒரு முறை இதைப் போட்டுவிட்டால், வருடக்கணக்கில் உழைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்ட முடிவாகும். அதனால்தான் கார் விரும்பிகளின் தேர்வாக விளங்குகிறது செராமிக் ப்ரோ கோட்டிங். ஒருமுறை போட்டாலே ​நிரந்தரமான பொலிவு மற்றும் ​கண்ணாடியைப் போன்ற பளபளப்பைத் தருகிறது. தண்ணீரை எதிர்க்கும்; கீறலைத் தடுக்கும்; இரசாயனம்; யூ.வி. கதிர்கள் மற்றும் வெயிலில் இருந்து காரைக் காக்கும், இப்படி ஒரே கோட்டிங் பல நன்மைகளை வழங்குகிறது.

மாதாமாதம் காரை சர்வீஸுக்குக் கொடுத்து வாட்டர் வாஷ் செய்வதைக் காட்டிலும், அதிக நன்மைகளை அளித்து காரைக் காத்து, வருடக்கணக்கில் உழைக்கும் செராமிக் ப்ரோ கோட்டிங்கை நம்பி பயன்படுத்தலாம். விகடன் வாசகர்களுக்கு அதிரடியா 20% தள்ளுபடியை 'செராமிக் ​​ப்ரோ' நிறுவனம் வழங்குகிறது, பயன்படுத்திக்கோங்க!​​  உடனடி சலுகையைப் பெற, இங்கே க்ளிக்கவும்...​

Do you like the story?

Please Appreciate the Author by clapping!