Published:Updated:

ரயில் செல்லும் இடத்தை கூகுளில் தெரிந்துகொள்ளலாம்!

ரயில் செல்லும் இடத்தை கூகுளில் தெரிந்துகொள்ளலாம்!
ரயில் செல்லும் இடத்தை கூகுளில் தெரிந்துகொள்ளலாம்!
ரயில் செல்லும் இடத்தை கூகுளில் தெரிந்துகொள்ளலாம்!

புதுடெல்லி : ரயில் செல்லும் இடத்தை கூகுள் இணையதளத்தில் கண்டறியும்  வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி உள்ளது. 

ஒரு ரயில் எந்த ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கிறது,எவ்வளவு நேரம்  தாமதமாக இயக்கப்படுகிறது, அடுத்த நிறுத்தம் என்ன, எந்தெந்த நிறுத்தங்களில் நின்று  செல்லும் என்பது உள்ளிட்ட விவரங்களை, ரயில்வேயின்  tp://www.trainenquiry.com என்ற இணையதள முகவரியில் க்ளிக் செய்து  அறிந்துகொள்ளலாம்.

தற்போது இதனுடன் ரயில்களின் இயக்கங்களை ஆன்லைனில் இந்திய வரைபடத்தில்  கூகுள் வரைபடம் உதவியுடன் தெரிந்து கொள்ள முடியும். ரயில் புறப்படும் இடம் முதல்  சென்று சேரும் இடம் வரை ரயில் பாதை, நிறுத்தங்கள், ரயில் சென்று

##~~##
கொண்டிருக்கும்  இடம்  அம்புக்குறியுடன் காண்பிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரெயின்/ஸ்டேஷன் லைவ் ஆன் தி  மேப்'' (Train/Station Live on the Map)என்ற பெயரில் கூகுள் வரைபடத்தில்  வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரயில் செல்லும் பாதை மஞ்சள் கோடாக  காட்டப்படுகிறது.
ஓடிக்கொண்டிருக்கின்ற ரயில் அம்புக்குறியை கிளிக் செய்தால் அந்த ரயில் எந்த  மாநிலத்தின் எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.  புறப்படுகின்ற, வந்து சேருகின்ற நிலையங்கள் பச்சை பெட்டி வடிவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ரயில் நிலையம் சென்று சேரும் என்ற விவரமும்  வரைபடத்திலேயே பார்க்க முடியும்.
ரயில் லைவ் ஆக சென்று கொண்டிருக்கும் இரு நிலையங்களுக்கு இடையேயான  பகுதிகளையும் கண்டறிய முடியும். மேலும் ஒரே நேரத்தில் எத்தனை ரயில்கள்  இயங்குகின்ற என்பதையும் கண்டறிந்துகொள்ள முடியும்.