அமைச்சரவையில், `மகிழ்ச்சி’க்குத் தனியாக துறை ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான். பூடான் நாட்டில் மக்களின் மகிழ்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல, தனது மாநிலத்திலும் தனித் துறை ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். `மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே இந்தத் துறை. இதன்மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், தற்கொலை போன்றவற்றைத் தடுக்கவும் முடியும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்வோம். தொடர்ந்து மக்களின் மனதை மகிழ்விக்கும் வேலைகளை இந்தத் துறை செய்யும்’ என்கிறார் சிவ்ராஜ். ஹேப்பி அண்ணாச்சி

ஆஸ்கர் வாங்கிய கையோடு, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு விசிட் அடித்திருக்கிறார் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால், இது ஜாலி பார்ட்டி டூர் இல்லை. சுமத்ரா தீவில், அழிவின் விளிம்பில் இருக்கும் யானைகளுக்காகக் குரல்கொடுப்பதற்கான விழிப்புஉணர்வு விசிட். `பாமாயிலுக்காக நடப்படும் பனைமரங்களால் காடுகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. அழிந்துவரும் சுமத்ரா யானைகளுக்கும் உராங்குட்டான்களுக்கும் வாழ்வதற்குச் சிறந்த இடம் இங்கு இருக்கும் மழைக்காடுகள்தான். அவற்றைப் பாதுகாத்து, சரணாலயம் அமைக்க அரசு முன்வரவேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருப்பதோடு, தனது அறக்கட்டளை மூலம் செயலிலும் இறங்கியிருக்கிறார் டிகாப்ரியோ. ரியல் ஹீரோ!

கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது இந்த செல்ஃபிதான். காரணம், இதில் இருக்கும் நபர்கள் அல்ல, இவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் தெரியும் உருவத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தால் புரியும். இணையதளம் ஒன்றில் பதிவிடப்பட்ட இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் ஷேர் செய்ய, `எதுவும் போட்டோஷாப் வேலையா?', `இப்படி ஒரு செல்ஃபி எடுக்க முடியுமா?' என பரபர வைரல் ஆனது போட்டோ. பலரும் அது `பேய் பொண்ணு, அய்யோ பயமாயிருக்கு' என அச்ச ஸ்மைலியும் போட்டிருக் கிறார்கள். ஏப்ரல் ஃபூல் பண்ணியிருக் காங்க!

`வயசு ஏற, ஏற மகிழ்ச்சிதான் எனக்கு’ என்கிறார் ஜெசிகா ஆல்பா. வயது 35 தொடப்போகிறது. `என்ன மேடம் வயசாகிடுச்சே...' என சமீபத்தில் பலரும் விசாரிக்க, `25 வயது ஆகும்போது இருந்த மகிழ்ச்சியைவிட, இப்போது அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கொண்டாட நிறைய நிம்மதி இருக்கிறது. வருங்காலத்தைச் சந்திக்க ஆர்வம் அதிகமாகிறது’ என்று ஷார்ப்பாக வந்து விழுகிறது பதில். 35 வயதினிலே!

பார்க்க அச்சு அசலாக பெண்ணைப்போலவே இருக்கும் இது நிஜமான பெண் அல்ல, ஒரு ரோபோ. சிறுவயதில் இருந்து முயன்ற கனவை 42 வயதில் வெற்றிகரமாகச் செய்துமுடித்திருக்கிறார் ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மா. மனிதனைப் போலவே பேசும், முகபாவனைகளைக் காட்டும் இந்த ரோபோவின் பெயர், மார்க் 1. முழுதாக உருவாக்கியதும் இதற்கு ஒரு ஹாலிவுட் நடிகையின் பெயரை வைக்கயிருக்கிறாராம் ரிக்கி. கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் வரை செலவழித்து இதை உருவாக்கியிருக்கிறார். எதற்காகத் தெரியுமா... பொழுதுபோக்கவாம்!
மிஸ் ரோபோ!

தெலங்கானா மாநிலத்தில், அரசு புதிதாக ரிலீஸ் செய்த ஆண்ட்ராய்டு ஆப் செம ஹிட். ‘எம்-வாலட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதை மொபைலில் இன்ஸ்டால் செய்தால் போதும். டிராஃபிக் போலீஸிடம் லைசென்ஸ், ஆர்.சி.புக் என எதுவும் காகிதமாக இல்லாமல், மொபைலிலேயே காட்டிவிட முடியும். பிராக்டிக்கலாக உதவும் இந்த டிஜிட்டல் ஐடியா ஹிட் அடித்ததில், குஷியாக இருக்கிறது தெலங்கானா அரசு. லஞ்சத்துக்கு ஆப்பு!

`உலகின் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ’-வாக மாறியிருக்கிறார் சுந்தர் பிச்சை. கடந்த வருடம் அவர் சம்பளமாகப் பெற்ற பங்குகளின் மதிப்பு மட்டும் 662 கோடி ரூபாய். `இந்தத் தொகை இந்த வருடம் இன்னும் அதிகமாகும்’ என்கிறது கூகுள் வட்டாரம். அவரின் செயல்பாடுகள் மற்றும் அதிகரித்துவரும் பொறுப்புகளுக்கு இது ஊக்கம் அளிக்கும்’ என அறிவித்துள்ளது கூகுள். கோடீஸ்வர பிச்சை!

கேத்ரீனா கைஃபுக்கும் ரன்பீர் கபூருக்கும் நடுவில் உரசல், இருவருக்கும் பிரேக்அப் என பாலிவுட்டில் பேசிக்கொண்டாலும், இருவரும் ஒன்றாக `ஜக்கா ஜஸூஸ்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சிக்காக மொராக்கா போவதாக ப்ளான் போட்டு, இவர்களுடைய வம்புச் சண்டை யால் அதை மும்பையிலேயே முடித்துக்கொண்டிருக்கிறது படக்குழு. இப்போது இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லையாம்.`சீக்கிரமே இருவருக்கும் பிரேக்அப் என அஃபீஷியல் அறிவிப்பு வரும்’ என்கிறார்கள். இது ஒரு பிரேக்அப் காலம்!

டி 20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்விக்குப் பிறகு நடந்த தோனி – சாம் ஃபெரிஸ் சந்திப்புதான் டாக் ஆஃப் தி கிரிக்கெட் வட்டாரம். ஓய்வு குறித்துக் கேட்ட ஆஸ்திரேலிய நிருபரை அருகில் அழைத்து, கலாய்த்து அனுப்பிய தோனியின் செயல் எல்லோரையும் கவர்ந்தது. `ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கவனத்தையும் உலகக் கோப்பையைவிட்டு என்மேல் திருப்பிவிட்டார் தோனி. கிரிக்கெட்டில் அவர் செய்யாத சாதனையே கிடையாது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டெஸ்ட் கிரிக் கெட்டில் இருந்து ஓய்வுபெற்றதைப்போல, இப்போதும் நடக்கலாம் என நினைத்துதான் அப்படிக் கேட்டேன். உடனே தோனி அருகில் அழைத்தார். உலகின் சிறந்த கேப்டன் அழைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? ஒரே இரவில் என்னை எல்லோரும் ரசிக்கும்படி செய்துவிட்டார்’ எனச் சொல்கிற சாம் முகத்தில் அவ்வளவு வெட்கம். கேப்டன்கூல்னா சும்மாவா?

செம குஷியில் இருக்கிறார் டாப்ஸி. ஷூட்டிங் இடைவெளியில் எந்நேரமும் அமிதாப் பச்சனை வைத்து, செல்ஃபி மேல் செல்ஃபியாகச் சுட்டுத்தள்ளுகிறார். இருவரும் இணைந்து நடிக்கும், ‘பிங்க்’ படத்தின் ஷூட்டிங்கில்தான் இந்த ஜாலி. `அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்றே தெரியவில்லை. ஆனால் தினமும் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்’ எனச் சிரிக்கிறார். ரியல் செல்ஃபி புள்ள!