'பியூட்டிஷியன்’ தொழில் ஒரு சிறந்த தேர்வு! ஏன்? (Sponsored Content)

‘ஒப்பனை’ செய்வதென்பது ஒரு கலையாகும். குறிப்பாக, பெண்களை இந்தக் கலையின் வல்லுநர்கள் எனலாம்! இயற்கையாகவே தங்களையும் தங்களை​ச்​ சுற்றியுள்ள இடத்தையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் பெண்கள். அதனால்தான் ஒப்பனைக் கலைஞர்களாக இன்று பல பெண்மணிகள் பணியாற்றுவதைக் காணமுடிகிறது. அழகுத் துறை நவநாகரிகமான பெண்களுக்கு மட்டும்தான் எனப் பலரும் நினைப்பதுண்டு. இதைப் பற்றியப் புரிதல் குறை​வா​​க​ உள்ளதுதான் இதற்குக் காரணம். பியூட்டிஷியன் தொழிலில் உள்ள சிறப்பம்சங்களைத் தெரிந்துகொண்டால், இந்தப் பணி எவ்வளவு அருமையானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கிரியேட்டிவிட்டி

தினமும் செய்ததையே மீண்டும் மீ​ண்டும் செய்வதால் ஒருவித அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. மாறிவரும் நாகரிகத்திற்கு ஏற்ப அழகுப்படுத்தும் முறைகளும் மாறுகின்றன, மேம்படுகின்றன. எனவே, தற்போதைய ட்ரெண்ட் என்னவென்று அறிந்து, அதற்கேற்ப புதுமையான ஒப்பனைகளை செய்வதால், இதில் வேலை செய்பவர்களின் கலையுணர்வு மேம்பட்டு, மனமும் எப்போதும் புத்துணர்வோடு இருக்கிறது.

புதுப்புது நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு

பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதாலும், அவர்களோடு உரையாடுவதாலும் வெவ்வேறான அனுபவங்களைப் பெறமுடிகிறது. மேலும், திருமணம், சங்கீத், பார்ட்டிகள் போன்ற பல நிகழ்ச்சிகளிலும், சினிமா, நாடகம் போன்ற துறைகளிலும் வேலை பார்க்கும்போது, நம் நண்பர்கள் வட்டமும் பெரிதாகிறது. இது, தொழிலுக்கு மேலும் வலு சேர்க்கக்கூடியது. புது நபர்களின் அறிமுகம் மற்றும் புது இடங்களுக்குச் செல்லுதல் மனதுக்கு உற்சாகமளிக்கிறது. முக்கியமாக தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது!

வாய்ப்புகள் பற்பல!

முக அலங்காரம், சிகை அலங்காரம், கண்ணலங்காரம், முடி திருத்துதல், கலரிங், ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர், ஸ்பா ​என ​இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது. இதில், ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலானவற்றில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளலாம். ஒருமுறை உங்களின் கைவண்ணத்தைப் பார்த்து வாடிக்கையாளர் அசந்துவிட்டால் போதும், உங்களை விடவே மாட்டார். அவரே உங்களின் தொழிலுக்கு விளம்பரதாரரும் ஆகிவிடுவார்.

அபாரமான வளர்ச்சி

வெளியிடங்களுக்குச் சென்று வேலைபார்க்கும் பெண்கள், தங்களின் தோற்றம் வெகுசிறப்பாக இருக்கவேண்டுமென்று நினைக்கின்றனர். இதனால், ஒப்பனைப் பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைவதே இல்லை. எனவே, தொழில் வளர்ச்சி குறித்துக் கவலைப்படாமல் இருக்கலாம்!

வேலை செய்யும் நேரம்

அன்றாட அலுவலக வேலைய​ல்ல​ இது. ஆர்வத்துடன் தொழிலைக் கற்றுக்கொண்டால், பின் வீட்டிலிருந்தவாறு ஃப்ரீலான்சிங் செய்யலாம். நம் வீட்டில் பிரத்யேக இடம் இருந்தால், வாடிக்கையாளருக்கு நம் வசதிப்படி அப்பாயின்ட்மென்ட் கொடுத்து, வீட்டிற்கே வரவழைத்து​ம்​ வேலை செய்யலாம். வெளியிடங்களுக்குச் சென்றாலும் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம்தான் வேலையிருக்கும். எனவே, நீண்ட நேரம் வேலை பார்த்து அசதியடையும் தலைவலி கிடையாது.

நல்ல வருவாய்

எல்லாத் தொழில்கள் போல ஆரம்பக்காலத்தில் குறைவான வாடிக்கையாளர்களே இருந்தாலும், சில மாதங்களிலேயே நம்மைத் தெரிந்தவர் வட்டம் அதிகரிப்பதால், நாளடைவில் பிசினஸும் பிக் அப் ஆகிறது. வேலையில் நாம் காட்டு​​ம் சிரத்தையும், பக்குவத்தையும், திறமையையும் வாடிக்கையாளர் அறிந்துகொண்டால், பிறகு நீங்கள் நிர்ணயிப்பதுதான் உங்களின் சம்பளம். வாடிக்கையான கஸ்டமர்கள் கைவசம் இருந்தால், சராசரியாக ஒருவர் ஆஃ​​பீஸ் வேலையில் வாங்கும் சம்பளத்தைவிட உயர்ந்த வருவாயை ஈட்டலாம்.

திறமையை மேம்படுத்தும் தொழில் பயிற்சிகள்

​​​​“Naturals Training Academy”, அழகியலில் பல புதிய பயிற்சிகளை வழங்கிவருகிறது. புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்துவைக்க ஆசைப்படுபவருக்கும், ஏற்கனவே பியூட்டிஷியன்க​ளாக பணியாற்றிவரும் நபர்களின்​ திறமையை மேம்படுத்தவும் இவ்வைகையான பயிற்சி வகுப்புகள் ஒரு வரப்பிரசாதமாகும். நாடு முழுக்க 500க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள நேச்சுரல்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பயிற்சி பெறுவதால், தொழில் சம்பந்தப்பட்ட சிறப்பான அறிவையும், அனுபவத்தையும் பெறலாம்! 

இங்கு பவுண்டேஷன் கோர்ஸ், இரண்டு வார வகுப்புகள் மற்றும் முகம், சிகை, சருமம், மேக் அப்பிற்கு எனத் தனித்தனியான வகுப்புக​ள்​ எடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, தொழில்நுட்ப​ப்​ பயிற்சி, வாடிக்கையாளர்களை அணுகும் முறை, தொழிலைக் கையாளும் விதம் மற்றும் ஆளுமை வகுப்புகளும் ​உள்ளன.​ ஆண், பெண் இருபாலருக்கும் ​பயிற்சிகளை வழங்குகிறது நேச்சுரல்ஸ். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு 100% வேலைவாய்ப்பையும் நேச்சுரல்ஸ் ​உறுதிசெய்கிறது.​

உடனே நேச்சுரல்ஸ் வழங்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து,  நீங்களும் தலைசிறந்த ஒப்பனைக் கலைஞர் 
ஆகலா​ம். விவரங்களுக்கு...

Register Here

 

1). Your Name: *

2). Email Id *

3). Contact No *

4). Districts *

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!