Election bannerElection banner
Published:Updated:

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

மதுரையில் ரவுடி மந்திரி என்ற இருளாண்டியும், அவனது கூட்டாளி சகுனி கார்த்திக்கையும் போலீஸார் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இருளாண்டி மீது  சென்னை, மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  பலரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்குகள் உள்ளன. மேலும், இவர்மீது 6 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

இருளாண்டிக்கு உதவியாக அவரது நண்பர் சகுனி கார்த்திக் இருந்திருக்கிறார். இவர்கள் மதுரையில் சிலரைக் கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டிருந்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. இருவரும் சிக்கந்தர் சாவடியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, இருவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்செல்ல முயன்றிருக்கிறார்கள். இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். நீண்ட வருடங்களுக்குப் பின் மதுரையில் நடந்த என்கவுன்டரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு