வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (02/03/2018)

கடைசி தொடர்பு:16:23 (02/03/2018)

ஜிம்மி கிம்மல் சம்பளம், ஆன்டி ட்ரம்ப் மைண்ட் செட்,ஆஸ்கர் விருது யாருக்கு? - கூகுள் சொல்லும் ரகசியம் #GoogleTrends

சினிமா விருதுகள் வழங்கும் விழான்னு ஆரம்பிச்சாலே நடிகர், நடிகைகள் காஸ்ட்யூம் துவங்கி கார் வரைக்கும் எல்லாமே ட்ரெண்டாகும், எந்தப் படம் அதிக அவார்டு வாங்கியிருக்கு, எந்தப் படம் மக்கள் மனம் கவர்ந்த படம்னு அவார்ட் ஃபங்ஷனுக்கு நாலு நாள் முன்னாடியே வைரலாக ஆரம்பிச்சு மீம் வரைக்கும் சுத்தி சுத்தி அடிக்கும். அதுவும் ஆஸ்கர்னா கேட்கவா வேணும்? மக்களின் மனம் கவர்ந்த ஆஸ்கர் படம் எது, எந்த நடிகர் மாஸ், வாவ் சொல்லவைக்கப்போற நடிகைனு ஹாலிவுட்டே வேற லெவல் கொண்டாட்டத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்கு. இந்த வருட ஆஸ்கர் ரேஸில் யார் டாப்... கூகுள் தேடல் ஆஸ்கர் ரேஸுக்கு சொல்லும் ரிசல்ட் என்ன என்று பார்ப்போம். 

ஆஸ்கர்

உலக அரங்கில் சினிமாவிற்கு அளிக்கப்படும் அதிகபட்ச கெளரவம் அகாடமி அவார்ட்ஸ் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள். 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகின்ற மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. கண்டிப்பாக கோல்டன் க்ளோப்பில் பேசப்பட்ட #MeToo பிரச்னை இங்கும் எழுப்பப்படும். சமீபத்திய ஹாலிவுட் விருது வழங்கும் விழாக்களின் டெம்ப்ளேட் தாக்குதலான ட்ரம்ப் தாக்குதலும், ஆன்டி ட்ரம்ப் கோஷங்களும் இடம் பெறும் என்பதில் அச்சமில்லை. சென்ற வருடம் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பைக் கலாய்த்த ஜிம்மி கிம்மெல்தான் இந்த முறையும் தொகுப்பாளர்.


மக்கள் நாயகன்:

'கால் மீ பை யுவர் நேம்' படத்துக்காக டிமோத்தி சாம்லெட் அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் நடிகராக உள்ளார். அடுத்த இடத்தில் டேனியல் டி லீவிஸ் உள்ளார். மக்களின் அபிமான நாயகன் இவர்கள் இருவரில் யாரவது ஒருவராக இருக்கலாம் என்பது கணிப்பு.

மக்கள் நாயகி:

சாலி ஹாக்கின்ஸ்தான் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை. இவர் 'ஷேப் ஆஃப் வாட்டர்' என்ற படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் 21 முறை ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 'மெரில் ஸ்ட்ரிப்', அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். மூன்று முறை ஆஸ்கர் வென்றுள்ள மெரில் ஸ்ட்ரிப் இம்முறை 'தி போஸ்ட்' படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.


அதிகம் தேடப்பட்ட சிறந்த திரைப்படம்:

ஆஸ்கரை வெல்லும் பெரும்பாலான படங்கள் அந்த ஆண்டு அதிகளவில் கூகுளில் தேடப்பட்டவைதாம். இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த 'தி போஸ்ட்'. இந்தப் படம், பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து இன்றுவரை அதிகம் தேடப்பட்ட பட்டியலில் மாறி மாறி முதலிட ரேஸில் இடம்பிடித்து விலகுகிறது..'கெட் அவுட்' திரைப்படம் கடந்த ஒரு வாரமாக முதலிடத்தில் உள்ளது.


ஆங்க்கர் சம்பளம் என்ன?

கடந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மெல்தான் இந்த ஆண்டும் ஆஸ்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரைப் பற்றிய கூகுள் தேடல்கள் ஆச்சர்யமளிப்பதாக உள்ளன. அமெரிக்க வாசிகள்.'ஜிம்மி கிம்மெலின் வயது', 'ஜிம்மி கிம்மெலின் உயரம்', 'ஜிம்மி கிம்மெல் வாழுமிடம்' , 'ஜிம்மி கிம்மெலின் வருமானம்' என்றெல்லாம் அதிகம்பேர் தேடியுள்ளனர்.

நம்ம ஊர் சினிமாக்காரர்களே அவார்ட் மேடைகளில் அரசியல் பேசுகிறார்கள். ஹாலிவுட் மேடைகளை பற்றிச் சொல்லவே வேண்டாம். எனவே, மார்ச் 4-ம் தேதி ட்ரம்ப் ட்விட்டர் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்