வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (04/03/2018)

கடைசி தொடர்பு:15:28 (04/03/2018)

ஜாகுவார், சீட்டா, லெப்பர்ட்... ஒரே உருவம்...ஆனால், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

லியதுதான் உயிர்பிழைக்கும் என்கிற சர்வைவா விதியின் கீழ் வாழ்கிற உயிரினங்களில் முக்கியமானது . பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் சிறுத்தை. பூனை இனங்களில் முக்கியமான விலங்கினம் சிறுத்தை. லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகையில் இது இருக்கிறது. நான்கு உயிரினங்களும் உடலாலும் உருவத்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வித்தியாசங்களைக் கொண்டவை. உற்று நோக்கினால் மட்டுமே வித்தியாசங்களைக் காண முடியும். தோலில் உள்ள அடையாளங்கள், கால் மற்றும் உருவ அமைப்பு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் அவை ஒவ்வொன்றும் வேறு வேறு அடையாளங்கள் கொண்டவை. 

ஜாகுவார்

ஜாகுவார்

சிறுத்தையைப் போல இருக்கும் இன்னொரு உயிரினம் ஜாகுவார். பெரிய தலையையும் தாடையையும் கொண்டது. கால்களும், அதன் வாலும் சிறியதாக இருக்கும். இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருக்கும். இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களைப் போல உள்ளன. அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு வசிப்பிடமாக இருக்கின்றன. புலியைப் போலவே, ஜாகுவாரும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். ஜாகுவார் பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் விலங்கு. மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது. மற்ற விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

லெப்பர்ட்

மற்றதுடன் ஒப்பிடும்போது இதன் கால்கள் சிறியதாகவும், மண்டையோடு பெரியதாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். லெப்பர்ட் முக அமைப்பு மற்ற இரண்டு சிறுத்தைகளை விடவும் இடைப்பட்ட அளவில் இருக்கும். அதன் மெலிதான கால்கள் மரம் ஏறுவதற்கு ஏதுவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. லெப்பர்ட், பேந்தர் இரண்டுமே சிறுத்தையைக் குறிக்கிற பெயர்கள்தாம். அவை தனித் தனி விலங்குகள் இல்லை. தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக்கொண்டிருக்கும். ஜாகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியதாகவும் மிகவும் நெருக்கமானதாகவும் இருக்கும். மேலும், ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. சூழலுக்குத் தக்க வேட்டையாடும் தன்மைகொண்டது. தன் எடைக்கு நிகரான எடையுள்ள விலங்குகளை வேட்டையாடி மரத்திற்கு மேல் எடுத்துச் செல்லும் அளவிற்கு பலம் வாய்ந்தது.

சிறுத்தை வகைகள்

சீட்டா

சீட்டாவின் முகம் சிறியதாகவும் வால் பகுதி பெரிதாகவும் இருக்கும். இதன் கால்கள் பெரிதாக இருப்பதால் அதிகபட்ச வேகத்தில் ஓட முடியும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் அடைந்துவிடும் அளவிற்கு அதன் வேகம் இருக்கும். அதன் முகத்தில் அழுத்ததிற்கான அடையாளம் போல கறுப்பு நிறத்தில் (BLACK TEAR MARK) என்று ஓர் அடையாளம் இருக்கும். மற்ற சிறுத்தை இனங்களில் அது இருப்பதில்லை. உலகில் இப்போது இருக்கும் சீட்டா வகை சிறுத்தைகள் மொத்தம் 7000 மட்டுமே இருக்கின்றன. 

கருஞ்சிறுத்தை

சிறுத்தை வகைகளில் இன்னொரு வகை கருஞ்சிறுத்தை. கருஞ்சிறுத்தை என்கிற ஓர் இனம் பிறப்பதில்லை, அவை வளர்பருவத்தில் வளர்சிதை  மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  எல்லா விலங்கினங்களின் உடலிலும் மெலனின் (Melanin) எனும் ஒரு நிறமி இருக்கிறது. தோல், கண்கள், முடி போன்றவற்றுக்குத் தேவையான கறுப்பு நிறத்தை, சமன்பட்ட அளவுகளில் கொடுப்பதுதான் இந்த நிறமிகளின் வேலை. நமது உடலில் தேவையான இடங்களில், தேவையான அளவு கருமை இருப்பதற்குக் காரணம் இந்தக் கருநிறமிதான். பிக்மென்ட் அதிகளவு இருக்கும் கருநிறமிகளால், இயற்கையான நிறத்திலிருக்கும் தோலின் மீது முழுவதும் கறுப்பு நிறம் போர்த்திவிடுகிறது. சில சிறுத்தைகளின் உடலில் அதிகளவு இருக்கும் கருநிறமிகளின் தாக்கத்தால் அதன் உடல் முழுவதும் கருமை படர்ந்துவிடுகிறது. கருநிறமிகள் இல்லாமல் இருக்கிற விலங்குகள் வெள்ளையாக இருப்பதற்கும் இதுவே காரணம். இதனால்தான் கருஞ்சிறுத்தைகள் உருவாகின்றன.

கருஞ்சிறுத்தை

தோலுக்காகவே எல்லா வகை சிறுத்தைகளும் வேட்டையாடப்பட்டன. அழிந்து வரும் விலங்குகளில் சிறுத்தை இனம் முதல் பட்டியலில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் சிறுத்தை வகையின் இன்னோர் இனமான பூமா வகை சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக சர்வதேச விலங்குகள் நல அமைப்பு அறிவித்திருக்கிறது. அழிந்துவரும் பட்டியலில் இருந்தும் பூமா பெயரை நீக்கிவிட்டது. ஜாக்குவார் என்கிற பெயர் இப்போது நுகர்வுச் சந்தையில் பிரபலமாகி வருகிறது. கார், கால்பந்து அணி, பாடல் குழு என ஜாகுவாரின் பெயரைச் சந்தைப் படுத்தியிருக்கிறார்கள். காருக்கும் சீட்டாவுக்கும் போட்டி வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் எனச் சோதனை செய்திருக்கிறார்கள். கார் வெற்றி பெறுவதாக முடியும் அந்தக் காணொளியின் இறுதியில் “கால மாற்றத்தால் அவதிக்குள்ளாகும் பத்து விலங்குகளில் சீட்டாவும் ஒன்று” என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அவற்றின் வாழ்வாதாரங்களை எல்லா நாடுகளுமே கேள்விக்குறியாக்கியிருக்கின்றன. காடுகள் அளவு குறைவது, மனிதர்களின் ஆதிக்கம் போன்றவை சிறுத்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மேலும், ஊருக்குள் வந்து விடுகிற சிறுத்தைகள் கால்நடைகளைக் கொன்றுவிடுவதால், விவசாயிகள் கால்நடைகளைப் பாதுகாக்க சிறுத்தைகளை கொன்றுவிடுகிறார்கள்.

ஒவ்வோர் இனத்தின் அழிவும் இன்னோர் இனத்திலிருந்துதான் தொடங்குகிறது. இன்று ஒரு சிறுத்தை  இனம் அழிந்துவிட்டதென அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற மூன்று  வகைகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசாரம், வருங்காலத்தில் விலங்குகளே இல்லாமல் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை?!


டிரெண்டிங் @ விகடன்