Election bannerElection banner
Published:Updated:

2 ரவுடிகள் என்கவுன்டர்: விசாரணையைத் தொடங்கினார் மாஜிஸ்திரேட்

2 ரவுடிகள் என்கவுன்டர்: விசாரணையைத் தொடங்கினார் மாஜிஸ்திரேட்
2 ரவுடிகள் என்கவுன்டர்: விசாரணையைத் தொடங்கினார் மாஜிஸ்திரேட்

2 ரவுடிகள் என்கவுன்டர்: விசாரணையைத் தொடங்கினார் மாஜிஸ்திரேட்

மதுரையில், இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

மதுரை சிக்கந்தர் சாவடியில், நேற்று  நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் அ.தி.மு.க முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டியின் ஆதரவாளர்களான முத்திருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள்மீது பல வழக்குகள் இருந்தாலும், அவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல சந்தேகங்களை உறவினர்கள் கிளப்பிவருகிறார்கள்.

"இது திட்டமிட்டது அல்ல, தற்காப்புக்காக சுடப்பட்டதுதான் என்று மதுரை மாவட்ட எஸ்.பி., கூறியுள்ள நிலையில், இது சம்பந்தமாக மனித உரிமை ஆணையம், மாவட்ட நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 என்கவுன்டர் நடந்தபோது, அதே வீட்டில் இருந்த முத்திருளாண்டியின் மனைவியையும், உறவினர் ரவிச்சந்திரனையும் காவல்துறையினர் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. முன்னாள் தி.மு.க மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியைக் கொல்ல ராஜபாண்டியின் ஆதரவாளர்களான இவர்கள் திட்டமிட்ட தகவல் தெரிந்துதான், காவல்துறையின் தனிப்படையினர் இவர்களைப் பிடிக்கச் சென்றது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருக்கும் இருவரின் உடலையும் மாஜிஸ்திரேட் வந்து பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர், உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகிறார். எட்டு ஆண்டுகளுக்குப்பின் மதுரையில் நடந்துள்ள இந்த என்கவுன்டரால், பல ரவுடிகளும், கட்டப் பஞ்சாயத்து தாதாக்களும் ஆடிப்போயுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு