Published:Updated:

அயர்ன்மேன் தாத்தா!

அயர்ன்மேன் தாத்தா!
பிரீமியம் ஸ்டோரி
அயர்ன்மேன் தாத்தா!

அதிஷா, படங்கள்: ஆ.முத்துக்குமார்

அயர்ன்மேன் தாத்தா!

அதிஷா, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
அயர்ன்மேன் தாத்தா!
பிரீமியம் ஸ்டோரி
அயர்ன்மேன் தாத்தா!
அயர்ன்மேன் தாத்தா!

திகாலை 6 மணி. அண்ணாநகர் டவர் பார்க்கில் காத்திருந்தேன். ``ப்ரோ... வெயிட் பண்ணுங்க. டென் மினிட்ஸ்’’ என மூச்சுவாங்காமல் ஓடிக்கொண்டே சொன்னவர், மின்னல் வேக ஓட்டத்தைத் தொடர்கிறார். 10-வது கிலோமீட்டரை பதறாமல் முடித்துவிட்டு, வியர்வை வழிய பேச ஆரம் பிக்கிறார் ஜெயராம் ராமசாமி. சென்னையில் அதிதீவிரமாக மாரத்தான் ஓடுகிறவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். அத்தனை ஓட்டக்காரர்களுக்கும் ஒரு முன்மாதிரி... ஒரு குருசாமி!

சென்னையில் நடந்த அயர்ன்மேன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார், ஜஸ்ட் 68 வயதே ஆன இந்த இளைஞர். `அயர்ன்மேன் போட்டி’ என்பது முதலில் நான்கு கிலோமீட்டருக்கு நீச்சல், அடுத்து 180 கிலோமீட்டருக்கு சைக்கிளிங், தொடர்ந்து 42 கிலோமீட்டருக்கு ஓட்டம்... என, படிக்கவே கஷ்டமான மாரத்தான் வகை. இவை அனைத்தையும் 22 மணி நேரத்தில் தொடர்ச்சியாகச் செய்துமுடித்து அசத்தியிருக் கிறார் ஜெயராம்.

இதில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் விஷயம், 68 வயதாகும் இவர்... முதன்முதலில் மாரத்தான் மாதிரி போட்டிகளுக்குப் பயிற்சிபெறத் தொடங்கியதே 64-வது வயதில்தான்.

அயர்ன்மேன் தாத்தா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`நான் ஒரு இன்ஜினீயர், ஏகப்பட்ட கம்பெனிகள்ல உலகம் முழுக்க வேலை பார்த்திருக்கேன். ஈராக்கை சதாம் உசேன் ஆண்டபோது அங்கேதான் வேலையில் இருந்தேன். ஒருகட்டத்துல சலிப்பா இருந்தது. ரிட்டையர் ஆகிட்டேன். அதுக்குப் பிறகு 2012-லதான் ஓடவே ஆரம்பிச்சேன்’’ என்கிற ஜெயராமன், எப்படி ஓடத் தொடங்கினார் என்பது சுவாரஸ்யமான கதை.

இவருடைய இளைய மகள் சித்ரா, இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் மாரத்தான்களில் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தார். ஃபேஸ்புக்கில் இவரது படங்களைப் பார்த்த ஜெயராமுக்கு, தானும் ஓடினால் என்ன எனத் தோன்றியிருக்கிறது. `இந்த வயசுக்கு மேல எதுக்கு சார்?’ எனக் கேட்காத ஆள் இல்லை. ஆனாலும் ஓட ஆரம்பித்தார். இப்போது வெற்றிகரமாக
15-க்கும் அதிகமான மாரத்தான்களை உலகம் முழுக்க ஓடி முடித்திருக்கிறார்.

அயர்ன்மேன் தாத்தா!

‘`2014-ம் ஆண்டிலேயே முடிக்கவேண்டியது. அப்போ அயர்ன்மேன் போட்டியில் சைக்கிள் ஓட்டினப்ப ஒரு சின்ன விபத்து. உடம்பு முழுக்க ரத்தம்... வீட்ல ரொம்பவே பயந்துட்டாங்க. அதுக்குப் பிறகு நிறைய ஓய்வு எடுக்கவேண்டியதாகிருச்சு. ஆனாலும் விடலை. முன்பைவிட அதிகப் பயிற்சி எடுத்துக்கிட்டு இந்த வருஷம் கலந்துகிட்டு ஜெயிச்சிட்டோம்ல’’ என்று சிரிக்கிறார் ஜெயராம்.

மாரத்தான் போட்டிகள்போல இல்லாமல் அயர்ன்மேன் போட்டிகளுக்கு மிக அதிகமான பயிற்சிகளும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம். தொடர்ச்சியாக 24 மணி நேரம் இயங்கவேண்டியிருக்கும் என்பதால், உடல் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம்.

அயர்ன்மேன் தாத்தா!

‘`நிறைய வலியுடன் ஒவ்வொரு நொடியும் வேதனை இருக்கும்தான். இவற்றைத் தாண்டி பயிற்சிசெய்து ஜெயிக்கும்போது ஒரு மனநிறைவு வரும் பாருங்க... அதுக்கு ஈடுஇணையே கிடையாது. `இந்த வயசுலகூட நம்மால இதைச் செய்ய முடியுது’னு எனக்கு நானே நிரூபிச்சிக்குவேன். முதுமைங்கிறது உடம்புக்கு மட்டும்தான். அதை நான் எப்பவும் நினைக்கவே மாட்டேன். வீட்ல பசங்க திட்டும்போதுதான், `ஆமா, நமக்கு வயசாகிடுச்சில்ல?’னு தோணும். மத்தபடி என் மனசுக்கு நான் இன்னும் 15 வயசு பையனாவே இருக்கேன். அந்த எண்ணம்தான் என்னை இந்த அளவுக்குச் செய்யவெச்சிருக்கு. இன்னும் நிறையவும் செய்யவைக்கும்’’ என ஹைஃபை போடும் ஜெயராமுக்கு, சைக்கிளிங்கில் பார்ட்னர், நடிகர் ஆர்யா!