Election bannerElection banner
Published:Updated:

10 ஆயிரம் குடியிருப்புகள்... 7 பள்ளிகள்!- அகல ரயில்பாதையால் உருவான தனித்தீவு

10 ஆயிரம் குடியிருப்புகள்... 7 பள்ளிகள்!- அகல ரயில்பாதையால் உருவான தனித்தீவு
10 ஆயிரம் குடியிருப்புகள்... 7 பள்ளிகள்!- அகல ரயில்பாதையால் உருவான தனித்தீவு

10 ஆயிரம் குடியிருப்புகள்... 7 பள்ளிகள்!- அகல ரயில்பாதையால் உருவான தனித்தீவு

புதிதாக உருவாக்கப்பட்ட அகல ரயில் பாதையினால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக்கொண்ட ஒரு பகுதி, தனித்தீவுபோல துண்டாடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு அதிவேக ரயில் விடுவதற்காக, இங்கு ஏற்கெனவே இருந்த சாதாரண ரயில் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. இதனால், பட்டுக்கோட்டையின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றான அண்ணாநகர்-கொண்டப்பன் நாயக்கர்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இங்கு, ஏற்கெனவே இருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டதாலேயே இந்தப் பரிதாபநிலை உருவாகியுள்ளது.

அண்ணாநகர் பகுதியில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், பிரபலமான கோயில்கள் உள்ளன. மேலும், இப்பகுதியில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில்தான், அண்ணாநகர்-கொண்டப்பன் நாயக்கர் பாளையம் சந்திக்கும் பகுதியில், அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, அதிவேக ரயில் விடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டையின் பிற பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அகல ரயில்பாதையின் வழியாகக் கடந்துசெல்வது மிக ஆபத்தானது என இவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இப்பாதையின் இரு பக்கமும் வளைவுகள் இருப்பதாலும், பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில், அதிவேகமாகச் செல்லும் என்பதாலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.

இங்கு, இதற்கு முன்பு இருந்த ரயில்வே கேட்டை மீண்டும் ஏற்படுத்தினால்தான் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். தற்போது, பயத்தின் காரணமாக இங்குள்ள மக்கள் இப்பாதையைக் கடந்துசெல்ல முடியாமல் முடங்கிக்கிடக்கிறார்கள். இங்கு, ரயிலே கேட் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டம் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, ரயில்வே துறையோ இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு