நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மகளிர் தின கலைநிகழ்ச்சி!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மகளிர் தினவிழா விழிப்பு உணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

கலைநிகழ்ச்சி

சர்வதேச மகளிர் தினவிழா நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. ரயில் பயணத்தின் போது பாதுகாப்பாக இருப்பது, பயணிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நடத்திக் காட்டினார்கள். பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் வாயிலாக மாணவிகள் விழிப்பு உணர்வுக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். 

சாரதா மகளிர் கல்லூரி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் பொதுமக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டது. நெல்லை ரயில்வே காவல்துறை கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கண்காணிபாளர் ஜான்சன் அய்யத்துரை, ரயில் நிலைய மேலாளர் மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!