ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், பிளாக் பாந்தர் - அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் இரண்டாவது ட்ரெய்லர்!

அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாவது பாகமான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை மார்வல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த சூப்பர் ஹீரோக்களுடன் சேர்ந்து மார்வல் யூனிவெர்ஸின் மற்ற சூப்பர் ஹீரோக்களும் இப்பாகத்தில் களம் இறங்கியுள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், பிளாக் விடோ, கேப்டன் அமெரிக்கா, விஷன், ஸ்கேர்லட் விட்ச், ஹாக்ஐ, டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்டோரும், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வீரர்கள், பிளாக் பேந்தர், லோகி, ஸ்பைடர்மேன் என்று அனைவரும் சேர்ந்து திரையில் தோன்றப்போகிறார்கள். இதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது. 

பிரமாண்ட காட்சிகள் பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம் என இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே முதல் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 27-ம் தேதி திரைக்கு வருகிறது என மார்வல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Avengers Infinity War Review படிக்க க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!