Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• பாலிவுட் முழுக்க மராத்தி படமான `சாய்ரட்' பரபரப்பாகப் பேசப்பட, ஒரே வாரத்தில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் ஆகிவிட்டார் நாகராஜ் மஞ்சுளே. படத்தைப் பார்த்த அமீர் கான், `இப்போதுதான் `சாய்ரட்' படம் பார்த்தேன். மனது உடைந்துவிட்டது. அந்த இறுதிக்காட்சியின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்' என ஒரு ட்விட் போட, செம உற்சாகத்தில் இருக்கிறது `சாய்ரட்' டீம். லைக்ஸ் குவியுது!

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•   `இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்காக 665 கோடி ரூபாய் சம்பளம்' என டீல் பேசப்பட்டும் நோ சொல்லிவிட்டார் டேனியல் க்ரெய்க். வெவ்வேறுவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தன்னை நல்ல நடிகனாக நிலைநிறுத்திக் கொள்வதுதான் க்ரெய்க்கின் திட்டமாம். அப்போ அடுத்த பாண்ட்? ``அவெஞ்சர்ஸ்' படத்தில் லோகியாக வந்து ஹல்க்கிடம் செம மாத்து வாங்கும் டாம் ஹிட்டல்ஸ்டன்தான் அடுத்த பாண்ட்' எனக் கிசுகிசுக்கிறது ஹாலிவுட்! பாண்ட் சரியுதே!

இன்பாக்ஸ்

•   கேன்ஸ் திரைப்பட விழாவில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை நந்திதா தாஸ். எழுத்தாளர் சதக் ஹசன் மன்டோவின் வாழ்க்கையைப் படமாக இயக்கப்போகிறார் இந்த வித்தியாச நடிகை. அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது நவாஸுதீன் சித்திக்கி. ஆல் தி பெஸ்ட் அழகம்மா!

இன்பாக்ஸ்

•   ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவரை, வெவ்வேறு நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள். இந்த ஹெவி மீட்டிங்குகளுக்கு மத்தியில் டிம் குக்கை அப்படியே கொத்திக்கொண்டுபோய் தன் `மன்னத்' வீட்டில்வைத்து விருந்துகொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகர் ஷாரூக் கான். டிம் குக்கை பாலிவுட் சார்பில் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு, அமிதாப் பச்சன் குடும்பத்தினர், அமீர் கான், மாதுரி தீட்சித், ஏ.ஆர்.ரஹ்மான் என திரை நட்சத்திரக் கூட்டமே வந்திருந்தனர். குக்கிங் வித் குங்!

•   நம்ம ஊர் தல-தளபதி சண்டைபோல கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி-ரொனால்டோ... யார் சிறந்த வீரர் என்பதில்தான் எப்போதும் தகராறு. இதற்கு இடையே உலகின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் அலெக்ஸ் ஃபெர்குஸன் `மெஸ்ஸியைவிட ரொனால்டோதான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆடக்கூடியவர். ரொனால்டோவிடம் அனைத்துவிதமான திறமைகளும் உண்டு. அவரால், இரண்டு கால்களையும் கொண்டு பந்தை வலுவாக உதைக்க முடியும்; பந்தை தலையால் கட்டுப்படுத்த முடியும்; ஒரு சிங்கத்தின் தைரியம் அவரிடம் உள்ளது' எனப் புகழ, மெஸ்ஸி ரசிகர்கள் ஃபெர்குஸன் மேல் செம கடுப்பில் இருக்கின்றனர். சமாதானம்... சமாதானம்!

•   ஐஸ்வர்யா ராய்க்கும் - அபிஷேக் பச்சனுக்கும் கேமராக்கள் முன்னிலையில் நடந்த ஊடல்தான் ஆன்லைனில் வைரல் டாக். `சரப்ஜித்' பிரீமியர் ஷோவுக்கு ஐஸ்வர்யா ராயுடன் வந்த அபிஷேக், ஆரம்பத்தில் இருந்தே `ஏன்டா வந்தோம்' என்பதுபோலவே முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.  மீடியா, ஐஸ்வர்யா ராயுடன் போஸ் கொடுக்குமாறு அபிஷேக்கை அழைக்க, வேண்டாவெறுப்பாக வந்தவர் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஐஸ்வர்யா ராயைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். சில விநாடிகள் என்னசெய்வது எனத் தெரியாமல் திகைத்த ஐஸ், கடைசியாக வணக்கம் போட்டுவிட்டு நகர்ந்தார். இந்த வீடியோ ஆன்லைனில் பரவி ட்ரெண்ட் ஆக, `உலக அழகிக்கே இப்படியா?' என சோஷியல் மீடியாவில் கமென்ட்டுகள் பறக்கின்றன. கணவன்-மனைவிக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

•   20-20 கிரிக்கெட்டில் இதுவரை சதம் அடிக்காத வீரராக இந்த வருட ஐ.பி.எல்-லைத் தொடங்கிய கோஹ்லி, ஒரே சீஸனில் நான்கு சதங்களை விளாசித் தீப்பிடிக்க வைத்திருக்கிறார். 20-20 வரலாற்றிலேயே ஒரு தொடரில் நான்கு சதங்கள் மட்டும் அல்ல... ஐ.பி.எல்-லில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் கோஹ்லி வசம். பஞ்சாப் அணிக்கு எதிராக 47 பந்துகளில் அடித்த சதம்தான் ஹலைட். ஃபீல்டிங்கின்போது காயம் ஏற்பட்டதால் கையில் ஏழு தையல்கள் போடப்பட்ட நிலையில் கோஹ்லி அடித்த இந்த சதம், மிரளவைத் திருக்கிறது.  நெருப்புடா! 

•   இந்த சம்மரில் ராஜஸ்தான் மாநிலத்தின் `பலோடி' என்ற ஊரில் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி, அந்த ஊரையே சுட்டுப் பொசுக்கியிருக் கிறது. `இதுதான் இந்தியாவில் பதிவான மிக அதிக வெப்பநிலை' என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்தியா முழுக்கவே மூன்றில் இருந்து ஐந்து டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இயற்கையின் பயங்கரம்!